தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 338

<< < (2/2)

Vethanisha:
இருள் அகன்று
ஆதவன் உயிர்த்தெழ
புது விடியலுக்காக
காத்திருக்கும்

நாணலும் மலர்களும்
புன்னகைத்ததுவே
பச்சைக் கதிர்களும்
செவ்வந்திப் பூக்களும்
தலையசைத்ததுவே

ஏனோ நான் மட்டுíம்
நடைபிணமாய் இங்கு
படுக்கையோர சன்னலோடு நின்றிருக்க
விழிகளின் ஊடே நீர்க்கசிய
தூரத்தில் கேட்டது
ஆம் அது அந்த..

"காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;"

எம் பாரதியின் கீதம்
கான கீதம்

வறண்ட என்
இதழ்கள் சட்டென்று மலர
கைரோமங்களும் உயிர்தெழ
உள்ளமும் கசிய

இந்த சுகம் போதாதா
என் வலி தீர
எம்  தமிழிசை போதாதா
என் மனம் குளிர

கசிந்த மனம் ஞாபகங்களில் நடைபோட
இசையால்   நான் பெற்ற வைத்தியங்கள்
சிலவற்றை விருப்பமாய்  பகிர

 இங்கனவே
 
குழந்தை பருவத்தில் யென்
வேதனைகளின் தீர்வு
"கற்பூர பொம்மை ஒன்று "
என்ற என் அன்னையின்  தாலாட்டு ❤️

என் முகம் வாடும் போது
அன்பாய் சீண்டியது
 "தென்றல் வந்து தீண்டும் போது "
என மெல்லிசையாய் ஒலித்த
 என் தந்தையின் பாட்டு❤️

துவண்டு போகும் போது
"இதுவும் கடந்து போகும்"

தனிமையின் மடியில் சாயும் போது
"இனிய தனிமையே "

காதலின்  கைப்பிடியில் சிணுங்கும் போது
"இது ஒரு கனவு நிலை"

உறவுகளோடு இணையும் போது
"இது அன்பு வாழும் கூடு  "

என்றும்

என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்
இசையே
என் பசி தீர்க்கும் விருந்து
என் பிணி தீர்க்கும் மருந்து

அவன் இன்றி - ஓர்
அணுவும் அசையாது என்பர்
இசை இன்றி- அவன்
அணுவும் அசையாது என்பேன் யான்

கவிஞன் எழுதியது போல
இந்த ஜென்மம்
இசையால்
இசையோடு
இசையினுள்
இசையாகவே

❤️

VethaNisha.M

mandakasayam:
இசையென்னும் மாபெரும் கொடையை தந்த இயற்கை இறைவனுக்கு இணையானவன்!!!

காற்றிலே  மிதந்து செவிகளிலே தவழ்ந்து, மனதிலே படர்ந்து  நவரசங்களை வெளிக்கொணர முடிகிறதே  , இசையின் மாயம்..

மௌனங்கள் கூட உறைந்து போகும் கவலைகள்  கூட கரைந்து போகும் இசையை விரும்பாதவர்களைக்கூட விரும்ப வைக்கும்,

மொழிகள் அறியாதவர்களை கூட அதன் இசையை நம்மால் உணரமுடிகிறதே,! ஆச்சிரியம்!!!

நம்மை இயங்க வைக்கும் இசைக்கு இதயத்தை கொடுத்தோம் திரும்பும் திசையெங்கும் இசைமொழி பாடலால் நம்மை இறுக்கி வைத்திருக்கும்  ! !! 

மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் இசையை விரும்புகின்றோம்,
துயரத்தில் தான் பாடல் வரிகளை வர்ணனை செய்கின்றோம் ,மன பாரத்தின் மருந்து இசையே தான்!!!!

இரவில் உன் மடியில் இளைப்பாற
பல வகை உணர்ச்சிகளை பாடலாய் பருக, காயம் பட்ட மனமும் இசைக்கேட்டு உறங்கும், தாலாட்டு பாடுவதில் தாய்க்கு பின் நீ தானே!!!!

சாக்ரடீஸ்:

மீள்

தொலைவதும்
மீண்டும் மீள்வதும்
சுலபமாக செய்திடும்
ஒரு சிறிய இசை

செவிவழியே
மனவலியை தீர்க்கும்
உருவம் இல்லா மருந்து
இசை

நேர்த்திக்கடன் எதிர்பாராமல்
பூஜைகள் எதுவும் செய்யாமல்
ஒவ்வொரு பக்தனுக்கும்
வரம் தரும் இறைவன்
இசை

நம்மை அறியாமல்
சிலரின் மீட்டெடுக்க
முடியாத நினைவில்
மூழ்கியபின் விழிவழி வரும்
கண்ணீரை துடைக்கும் கை
இசை

எனக்கு அவளும்
ஒரு இசை தான்

பேச்சுத்துணை போல்
அவள்
என் பாட்டு துணை

நான்
நிகழ்த்தும் உரையாடல்களில்
அவள் செருமலே
என் பின்னணி இசை

அவள்
குறுஞ்செய்திகளில்
பாடல் வரிகள் வந்து வந்து போகும்

அவள்
இல்லாதபோதும் அவள் பாடல்கள்
என்னோடு கதைகதையாய் பேசும்
அவள் வழக்கு மொழியில்
அவள் தமிழில்
அவள் குரலில்

எனக்கு
அவளே இசை
அவளே மருந்து

இசை கட்டாயம்
நமக்கு மருந்துதான்
இடையில் வரும் வரிகள்தான்
நம்மை நோகடித்து விடுகிறது


Vijis:
இசையின் பிறப்பிடம் எங்கே என தெரியவில்லை இசையை கேட்க எந்த உயிரிகளும் மறுப்பதில்லை

 பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் இசையுடனே பயணம் செய்கிறான்

 இதய துடிப்பின் பரிமாற்றம் மனிதரின் சந்தோசம் வேதனையின் கண்ணீரும் இசையே

என் தனிமையின் துணையாகவும் நம்பிக்கை தோழனும் அவனே

 என் வாழ்வில் நகர்ந்திடும் ஒவ்வொரு நிமிடமும் புதுமையாகவே உணர்தேன்

 பாறை போல் இருந்த என் மனம் ஈரம் கசிந்து போனதே காற்றில் கலந்து உயிரினில் நுழைந்து மனதில் கலப்பதே இசை

என் வாழ்வின் இன்பம் துன்பம் அனைத்தையும் இசையில் உணர்தேன்

கடவுள் படைப்பின் இயற்கை எங்கும் இசையாகவே உள்ளது பறவைகளின் ஓசையிலும் விலங்குகளின் சத்தத்திலும் இசையே நிரம்பி இருக்கின்றது


 எங்கும் இயற்கயிலே இருக்கும் இசை எப்போதும் பாடிக்கொண்டு இருக்கிறது

 மனிதன் தனது அழுகை என்னும் முதல் பாடலில் வாழ்க்கையை ஆரம்பித்து தாலாட்டு என்னும் மெல்லிசையில் உறங்கி  இசையில் வளர்ந்து ஒப்பாரி வரை வாழ்நாள் முழுவதும் இசையில் வாழ்கிறான்

 இசையில் அசையும் உலகம் மனிதனின் மனநோயை போக்கும் மருந்து

 இசை இன்றி எதுவும் இல்லை இசையே மனிதனின் மருந்து

vaseegaran:
யார் இந்த இசை சில நேரங்களில்  மறக்க நினைக்கும்  நினைவை கொண்டுவந்து இம்சிக்கிறான்
பல  நேரங்களில் துவண்டு கிடைக்கும் பொது உற்சாகம் கொடுக்கிறான்
அநேக நேரங்களில் மயங்க செய்து உருக செய்து நாம் அறியாத நம்மையே நமக்கு வெளிச்சம் போடு காட்டுகின்றான்

இந்த கொடூர உலகில் மனிதனின் ஆகச்சிறந்த நண்பன் இசை மட்டுமே என்பேன்
யாரையும் எவரையும் சார்ந்து  வாழாமல் உங்களுக்கு நீங்களே சந்தோசத்தை அள்ளி அள்ளி
கொடுக்க இசையால் மட்டுமே முடியும்

நட்புக்கு எப்படி மொழி இன மத வேறுபாடு இல்லையோ அதேபோல் தான்  இசையும்
எந்த இசையையும் வேறுபாடுன்றி ரசிப்பவன் வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்பவன்

பல நேரங்களில் சந்தோஷமான பாடல் கேட்கும் பொது அழுகையும்
சோகமான பாடல்கள் கேட்கும்போது வெடிச்சிரிப்பும் வரும்வேளையில்
ஆழ்மனதில் தேங்கியிருக்கும்  துயரை கரைக்கின்றது இன்னிசை

இசை என்னும் மாமருந்து எண்ணிலா அதிசயத்தை இம்மனிதகுலத்திற்கு தந்திருக்கிறது

தீராதநோயின்  வேதனையில் துடிக்கும் ஒரு குழந்தையை கொஞ்சநேரமெனும்
மனம் மகிழவைக்கும் இந்த இசை ஒரு கடவுள் போல் தெரிகிறான்

இசையை பற்றி கவிதை கேட்கிறார்கள் நண்பர்கள்
மழையில் நனைவது  சுகமா !
மழையை பற்றி எழுதுவது சுகமா ?

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version