Author Topic: அனல் வாதம் புனல் வாதம்  (Read 2848 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அனல் வாதம் புனல் வாதம்
« on: August 10, 2011, 01:43:48 AM »
அனல் வாதம் புனல் வாதம்
     

-             

மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனதை மாற்றிய சமணர்கள் கூன்பாண்டியனை சமணசமயத்தில் சேர்த்தார்கள்.இதனால் சைவசமயம் அழியத்தொடங்கியது.சமணசமயம் வளரத்தொடங்கியது.இதனால் கூன்பாண்டியனின் மனைவி மங்கயர்க்கரசி சைவசமயத்தை காப்பாற்றுவதற்காக திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள்.திருஞானசம்பந்தர் திருநீற்றை எடுத்து கூன்பாண்டியனின் நெற்றியில் பூசி மந்நிரமாவது நீறு எனும் தேவாரத்தை பாட பாண்டிய மன்னனின் சூலநோய் மாறியது.


                  இதனால் ஆத்திரமடைந்த சமணர்கள் சம்பந்தரை அனல் வாதம் புனல் வாதம் புரிய அழைத்தனர்.சமணர்கள் தங்களது சமண ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பலானது.திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதப்பெற்ற சிவபதத்தை தீயில் இட்டார்.சிவபதம் தீயில் எரியாமல் அப்படியே இருந்தது.இதன்பின் புனல் வாதத்தின்போது சமணர்கள் அத்திநாத்தி என்ற ஏட்டை வைகையில் இட்டபோது அது ஆற்றில் அடித்து சென்றது.ஆனால் சம்பந்தர் வாழ்க அந்தனர் என்ற ஏட்டை ஆற்றில் இட்டபோது அது ஆற்றின் போக்கை எதிர்த்து கரை ஏறியது. அந்த ஏடு கரைஏறிய இடம்தான் மதுரையில் உள்ள திருவேடகம். (திரு - ஏடு - அகம்)

                 இதன்பின் கூன்பாண்டியனின் கூனும் நிமிர்ந்தது.கூன்பாண்டியன் நிமிர்ந்ததால் நெடுமாறன் என பெயர் பெற்றான். புனல் வாதத்தின் போது சம்பந்தர் வாழ்க அந்தனர் என தொடங்கும் திருபாசுர ஏட்டை வைகையில் இட அது எதிர்நீந்தி கரையேறியதால் திரு ஏடு அகம் திருவேடகம் என பெயர் பெற்றது.
திருவேடகம் பாண்டிநாட்டு 14 சிவதலங்களில் 5வது தலமாகும்.

 

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
 


வாழ்க வளமுடன்