FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 08, 2018, 12:47:26 AM

Title: உன் அன்பின் மொழி
Post by: Guest on December 08, 2018, 12:47:26 AM
எதைக்கேட்டாலும் ஆமோதிப்பாய் ஆமென்கிறாய்

“உன் விருப்பம் மீறி
மறுத்துப்பேசல்
அத்துமீறலன்றோ?.”
என கேள்வியாகிறாய்

தீர்மானங்களில் என்னைச்
சார்ந்திருப்பதே
உன் அன்பின் மொழியென
நியாயம் சொல்கிறாய்..

உனக்காக என
வேஷம் பூண்டு
விலகிநிற்க நான்
முயலுகையிலேனும்
மறுத்துப்பேசி
தர்க்கம் செய்திடு

ஆர்பரிப்பின்றி அமைதியாய்
தூங்கட்டும் காதலின் மனம்..
Title: Re: உன் அன்பின் மொழி
Post by: Guest 2k on December 08, 2018, 11:01:56 AM
சில நேரங்களில் நமக்கு விருப்பமானவர்களுக்காக நம் சுயம் மறுத்து/மறைத்து நிற்பது கூட அன்பின் மொழி தான் நண்பா :)
Title: Re: உன் அன்பின் மொழி
Post by: Guest on December 08, 2018, 05:49:43 PM
ம்ம் அன்பின் மொழி 🤔
Title: Re: உன் அன்பின் மொழி
Post by: Guest 2k on December 08, 2018, 08:02:51 PM
இல்லையா :)
Title: Re: உன் அன்பின் மொழி
Post by: Guest on December 08, 2018, 09:33:44 PM
இல்லையா? அப்படின்னு இல்லை .... சுயம் மறுத்து/மறைத்து  மறந்நது நிற்பது கூட - இந்த வரியை யோசிச்சு ம்ம்ம் சொன்னேன்.....    look my மொழி  post maybe u can understand ....