FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Evil on December 13, 2018, 12:51:12 PM

Title: ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்
Post by: Evil on December 13, 2018, 12:51:12 PM
(https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/48368812_346175322840836_2421498348121882624_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=13eb0e707c126dc1cccb4f5797b55862&oe=5C926E95)

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
தற்போது அனைத்தும் மறைந்தும் மறந்தும் போய்விட்டது வேதனையே.
Title: Re: ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்
Post by: Grand Max on December 13, 2018, 02:52:28 PM
100% true , evil .   thanks for information
Title: Re: ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்
Post by: Guest 2k on December 13, 2018, 05:51:41 PM
ஊஞ்சல் ஆடுறதுல இவ்வளவு விஷயம் இருக்கா.. வாவ் சூப்பர் ஈவில் பேய்ய். இப்போ ஊஞ்சலாடனுமே எங்கபோய் தேடுறது
Title: Re: ஊஞ்சலில் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்
Post by: ! SabriNa ! on December 14, 2018, 08:14:40 AM
darlzz hahahaha vaanga enakum enakum onna oonjal aaduvom...