FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 07:01:40 PM

Title: கேமிங் உலகை உலுக்கும் புதிய அமேஸிங் அலெக்ஸ்!
Post by: Anu on October 28, 2012, 07:01:40 PM
அமேஸிங் அலெக்ஸ் என்ற புதிய ஆன்லைன் விளையாட்டை நேற்று அறிமுகம் செய்துள்ளது ரோவியோ நிறுவனம்.
ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற விளையாட்டை அறியாதவர்களே இரு்கக முடியாது. கார்ட்டூன் உலகில் டாம் அண்டு செர்ரி எவ்வளவு பிரதிச்சமோ அவ்வளவு வரவேற்பை பெற்றுவிட்டது ஆங்கிரி பேர்ட்ஸ்.

இன்னும் சொல்ல போனால் இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் அதிக வரவேற்பை பெற்றுது, பெற்று கொண்டிருக்கிறது, பெறும்… என்று மூன்று காலத்தையும் உணர்த்தும வினைத்தொகைக்கு உதாரணம் என்று என்று கூட சொல்லலாம்.

இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டினை உருவாக்கிய ரோவியோ நிறுவனம் புதிய ஆமேஸிங் அலெக்ஸ் என்ற விளையாட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கேம் அலெக்ஸ் என்ற சுட்டி பையன் அறிவு சார்ந்த குட்டி குட்டி சாகசங்களை செய்து சவால்களை முறியடிப்பது போல் இருக்கும். அறிவை ஊக்கப்படுத்தும் இந்த விளையாட்டு மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

தொழில் நுட்ப உலகில் தினமும் இங்கி கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களுக்கு இந்த விளையாட்டு மிக அவசியமானது தான். அதிலும் குழந்தைகளுக்கு மிக அவசியம்.

அமேஸிங் அலெக்ஸ் என்ற இந்த கேமை ஆப்பிள் ஸ்டோரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம். கட்டணத்திலும் இந்த கேமை டவுன்லோட் செய்யலாம், இலவசமாகவும் டவுன்லோட் செய்யலாம். இப்படி இரண்டு வசதிகளிலும் இந்த விளையாட்டினை விளையாடலாம்.