Author Topic: இரவுபகலென்று பாராமல் உழைக்கும் கழுகள்  (Read 603 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இரவுபகலென்று பாராமல் உழைக்கும் கழுகள்


கோடை விடுமுறை துவங்கி விட்டது, கோடையின் வெப்பத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க சிலர் குளிர் பிரதேசங்களுக்கு சிலர் உறவுகளை கண்டு வருவதற்கு என்று பல விதங்களில் ஊர் விட்டு ஊர் செல்வது வழக்கம், இன்னும் சிலர் எங்கேயும் போகாமல் தங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை அதிகபடுத்தும் கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுவார்கள், இதில் அவரவர் விருப்பமும் நாட்டமும் அதற்க்கு அவரவர் சொல்லும் காரணங்களும் அபிப்பிராயங்களும் ஒவ்வொரு விதமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஒரு வருடமாக பள்ளிக்கூடமும் படிப்புமாக இருந்த பிள்ளைகள் வெயல் காலத்திலாவது விடுமுறை என்ற பெயரில் கிடைக்கும் விடுதலையில் கூட மீண்டும் அவர்களை பாடாய்படுத்த கோடைகால வகுப்புகள் என்ற புதிய சிறைவாசத்தில் தள்ளுவது வருந்த தக்கது, புதியமுறை கணக்குசொல்லித் தருவதும் கையெழுத்து சீராக்குவதும் இன்னும் என்னெனவோ வகுப்புகள்; நகர்புற மக்களின் பணத்திற்கும் குழந்தைகளின் மனத்திற்கும் வேட்டு வைக்க காத்து கிடப்பது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி வரும் புதிய வரவுகள்.

உறவுகளை அறியாமல் வருடம் முழுவதும் இயந்திர கதியில் வாழும் குழந்தைகளின் எதிர்காலம் என்பது எப்படி இருக்குமோ தெரியவில்லை, விடுமுறையில் ஊருக்கு போகிறேன் பேர்வழி என்று கிளம்பி போகும் போது காலம் கெட்டு கிடக்கின்ற பிரக்ஞையே இல்லாமல் வீட்டை பூட்டிவிட்டு போவதில் தவறு இல்லை ஆனால் வீட்டு வேலைக்காரி அந்த வீதியில் இதற்காகவே தினம் தினம் இரவு பகலாக அலைந்து கொண்டிருக்கும் 'கழுகுகள்' எப்படி இவர்களை நினைவில் கொள்ளமுடியாமல் போகிறது என்பது விசித்திரம்தான். ஊருக்கு போகும் முன்னர் அருகிலிருக்கும் காவல்நிலயத்திற்க்கு அறிவித்துவிட்டு பின்னர்தான் ஊர்களுக்குப் போகவேண்டுமென்கிற விதிமுறையை படித்தவர்கள் கூட அறியாதிருப்பதை எதில் சேர்த்துக்கொள்வது என்று தெரியவில்லை.

ஒருசமயம் காவல் நிலையத்திற்கு அறிவித்துவிட்டு போவதால் பயன் ஒன்றும் இல்லை என்கின்ற எண்ணமாகக் கூட இருக்கலாம், எது எப்படியோ கழுகுகளுக்கு சரியான தீனியை கொடுத்துவிட்டு பின்னர் 'குய்யோ முறையோ' என்று தலை மீது கைவைத்துக்கொண்டு உட்காருவதிலும் காவல்நிலயத்திற்க்கு சென்று புகார் கொடுத்து கைரேகை நிபுணர் வந்து மாவு தூவி படம் பிடிப்பதை பித்தம் பிடித்த நிலையில் பார்த்துகொண்டிருப்பதில் என்ன இருக்கிறது, ஊருக்கு போகும் முன்னர் காவல்நிலயத்திற்க்கு அறிவிக்காவிட்டாலும் வீட்டை காவல்காக்க உத்திரவாதமான ஆட்களை வைத்துவிட்டு அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் ஊருக்கு போவதையும் திரும்பி வருவதைப்பற்றியும் சொல்லிவிட்டாவது போவது நல்லதாக தோன்றவில்லையா.

கோடைவிடுமுறையில் வீட்டிலிருப்பவர்களும் வெயலில் அதிகம் நடமாடவேண்டிய வேலையில் இருப்பவர்களும் அடிக்கடி உப்பு போட்ட மோர் குடிப்பது இளநீர், மற்றும் வைட்டமின் சி அடங்கிய பழங்கள் அதாவது எலுமிச்சை சாறு போன்றவற்றை உப்பும் இனிப்பும் கலந்து பருகுவது மிகவும் அவசியம், முடிந்தவரையில் வெயலில் போகாமல் இருப்பது நல்லது. கோடை என்பது தற்போதெல்லாம் மார்ச் மாதம் துவங்கி பருவ மழைப் பொழியும் வரையில் பாடு படுத்திவருவதை நாம் அறிந்திருப்பதால் கத்திரி வெயல் போனால் கோடை முடிந்ததாக நினைத்துக் கொண்டு வெயலில் போவது ஆபத்தான உடல் தீமைகளை ஏற்ப்படுத்தும்.

அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் ஊர்களுக்கு போய்விட்டு இருந்தால் தனியே வீட்டிலிருப்பவர்கள் வீட்டு கதவுகளை அனாவசியமானவர்கள் தட்டும்போது திறக்காமல் இருப்பது நலம், காற்று வருவதற்காக கதவுகளை திறந்து வைப்பது அவசியம் காற்று மட்டுமே வரும் என்று நாம் எதிர்பார்த்திருந்தால் காற்றுடன் தூசு, கழுகு எல்லாம் சேர்ந்து வந்துவிடுவதும் உண்டு கவனத்துடன் இருப்பது சிறந்தது. திருடர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம், மற்றவர்களின் அஜாக்கிரதையை எதிர்நோக்கி காத்திருக்கும் கழுகுகள்.
                    

Offline RemO

நல்ல பதிவு