Author Topic: புதிய வருடத்தின் தீர்மானங்கள் [RESOLUTIONS]  (Read 798 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
புதிய வருடத்தின் தீர்மானங்கள் [RESOLUTIONS]


சிலர் தங்களிடம் இதுவரையில் நடைமுறையில் இருந்துவந்த தனக்கும் சில சமயங்களில் அடுத்தவர்க்கும் பிரச்சினை அல்லது உபத்திரவத்தை கொடுக்கும் சில பழக்க வழக்கங்களை புதிய வருடத்தில் தொடராமல் விட்டுவிட முடிவு எடுப்பது, பின்னர் விட முடியாமல் தொடர்ந்து அந்த பழக்கத்திற்கு அடிமையாகி தவிப்பது என்கிற வினோத போக்கு எனக்கு நினைவிற்கு வருகிறது.

எந்த நிமிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோமோ அந்த நிமிடத்திலேயே அமலுக்கு கொண்டு வருவது தான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கமுடியும். எந்த ஒரு காரியத்தை செயல் படுத்தவேண்டும் என்று முடிவிற்கு வருகிறோமோ அந்த நிமிடத்திலிருந்து செயல்படுத்தினால் மட்டுமே நாம் நினைத்தபடி நம்மால் செயல்படுத்த முடியும், நினைப்பது ஒரு நாள் செயல்படுத்த வருடத்தின் முதல் நாள் என்று காத்திருந்தால் ஒரு நாளும் நம்மால் நினைத்ததை செயல் படுத்த இயலாமலே போய்விடும் என்பது தான் நிஜம்.

நம்மை நாம் ஆள்வது என்பது நமது சிந்தனைக்கும் செயல்களுக்கும் ஒற்றுமை இருக்கும்படியாக நம்மை நாமே ஆள பழகி கொள்ளுதல். முடிவுகளை எடுப்பதற்கு முன்னும் புதிய பழக்கவழக்கங்களை தெரிந்தெடுப்பதற்கு முன்னும் அதைப் பற்றி நிதானமாக யோசித்து தெரிந்து கொள்வது விவேகம். பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது என்பதற்கும், ஏற்பட்டுவிடுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எந்த சூழ்நிலையிலும் தன்னைத் தானே நிலையான வரம்புகளுக்கு உட்படுத்தி வாழ்க்கையை வாழ பழகிகொள்வது என்பது தியான அப்பியாசம் போன்றது.

புதியவருடத் துவக்கத்திற்க்காக காத்திருந்து முடிவெடுப்பதால் குறிப்பிட்ட பழக்கம் நம்மை விட்டுவிடும் என்று நாம் எதிர்பார்ப்பதற்கு பதில் குறிப்பிட்ட காரியத்தை வெறுத்து ஒதுக்க நம்மை நாம் பழக்கிக் கொள்வதால் மட்டுமே அந்த பழக்கத்தை நம்மால் விட்டுவிட முடியும். முயற்ச்சிகள் என்பது நம்மிடம்தான் உள்ளது என்பதால், முடிவு எப்போது எடுகிறோமோ அப்போதே அதை செயல்படுத்த வேண்டும் என்பது தான் சரியானதாக இருக்க முடியும்.
                    

Offline RemO

நல்ல பதிவு ஏஞ்செல்

நல்லா காரியங்களை செய்ய நல்ல நாள் கிழமை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
தீய குணங்களை விட புது வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை