Author Topic: இந்தியாவின் அவல நிலை!  (Read 817 times)

Offline Yousuf

இந்தியாவின் அவல நிலை!
« on: November 25, 2011, 07:58:59 AM »
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை இலவசம். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!


இந்த நிலை மாறுவது எப்போது?

Offline RemO

Re: இந்தியாவின் அவல நிலை!
« Reply #1 on: November 25, 2011, 12:31:11 PM »
// இந்த நிலை மாறுவது எப்போது? //

சாதி மத வேறுபாடுகள் ஒழிந்து, கல்வியும், மருத்துவமும் அரசியலும் பணம் ஈட்டும் தொழிலாக இல்லாமல் மக்கள் சேவையாக மாறினால் இந்த நிலை மாறும்

அவ்வாறு மாற்றம் வர மக்களாகிய நாமும் சுயநலம் விடுத்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

Offline Yousuf

Re: இந்தியாவின் அவல நிலை!
« Reply #2 on: November 25, 2011, 03:27:07 PM »
நல்ல கருத்து ரெமோ நிச்சயாமாக நாம் அனைவரும் முயற்சி செய்வோம்!

நன்றி!!!