Author Topic: நீங்கள் சிறந்த நண்பரா...? இங்கே சோதித்துக் கொள்வீர்!  (Read 1168 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
   
    தோழன்/தோழி... ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாதவன்/முடியாதவள். வாழ்க்கை முழுமையடைய இன்றிமையாததே தோழமை.

    ஒவ்வொரு உறவுக்கும் உரிய வரையறை வகுத்து, ‘எப்படியேனும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும்’ என வழிகாட்டியுள்ளனர், நம்முடைய சான்றோர்கள்.

    அந்த வகையில், நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்களா? நல்ல நண்பராக இருக்க வேண்டிய வரையறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்தது வருகிறீர்களா?

    தன்னைத் தானே சோதித்து அறிந்துகொள்ள இதோ 10 கேள்விகள்... அவற்றுக்கு பதிலளித்த பின், உங்களது நட்பின் தரத்தை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.

    உங்களது கேள்வி எண்ணையும், பதிலுக்கான எழுத்தையும் வரிசையாக குறித்து உங்கள் பதிலை இங்கு போடுங்கள்..
    பின்னர் மாற்றிக் கொள்ளக் கூடாது.
    துவங்குவோமா..?

    1) உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன?

    அ) நண்பர்
    ஆ) பணம்
    இ) பூவா, தலையா போட்டு தேர்வு செய்வேன்
.

    2) ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது?

    அ) தருணம் வரும்போது மட்டுமே முயற்சி செய்வேன்.
    ஆ) எப்போதும் முயற்சி செய்வேன்
    இ) நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுவேன்.


    3) நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...?

    அ) கண்டுகொள்ளவே மாட்டேன்
    ஆ) என்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவார் என்பதால், தவறை எடுத்துரைக்க மாட்டேன்
    இ) நண்பர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, தவறை உணர்த்துவேன்
.

    4) நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது?

    அ) கருத்து ஒற்றுமை
    ஆ) தேக ஒற்றுமையும், பழக்கவழக்கமும்
    இ) ஏதுமில்லை.


    5) நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?

    அ) நண்பரின் முகத்தில் புன்னகைப் பூக்கும்படியான செயல்கள்
    ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள்
    இ) இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது.


    6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது...

    அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன் ஆ) நட்புக்கு தற்காலிக ஓய்வு தருவேன்
    இ) நம்மால் ஆபத்தை நீக்க முடியுமா? என யோசிப்பேன்.


    7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...

    அ) இன்பம் மட்டுமே
    ஆ) இன்பமும் துன்பமும்
    இ) களிப்பினை மட்டுமே.


    8.) நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்...

    அ) உள்ளே பொறாமை இருக்கும், ஆயினும் புகழ்ந்து பேசுவேன்
    ஆ) பொறாமையின்றி வாயாறப் புகழ்வேன்
    இ) புகழ்வதோடு, அந்தத் திறமை மென்மேலும் வளர்வதற்கு உதவுவேன்; ஊக்கப்படுத்துவேன்.


    9) உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...

    அ) தயங்காமல் ஏற்றுக்கொள்வேன்
    ஆ) எனக்கு விருப்பமில்லை என்று நிதானமாக புரியவைப்பேன்
    இ) உரிமையோடு பகிரங்கமாக மறுத்துவிடுவேன்.


    10) உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..?

    அ) நட்பை முறித்துக் கொள்வேன்
    ஆ) அன்பு மாறாமல் நட்பைத் தொடர்வேன்
    இ) பழிவாங்குவேன்.


விடை சொல்லுங்க

முடிவு வரும் விரைவில்  ;) ;) ;) ;)




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
1) உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன?

நான் பணத்தைதான் தெரிவு செய்வேன் .... காரணம் வாழ் நாளுக்கு உசிருக்கு உடமைக்கு உத்தரவாதம் கொடுக்க நண்பன் ஒன்றும் கடவுள் இல்லை ......  பணத்தி எடுத்து என் நண்பனுக்கு வேனும்ன பாதி கொடுப்பேன் .. ;)

Quote
2) ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது?

தானே நடக்கட்டும் என்று விட்டு விடுவேன் .... எதுவும் இயற்கையாய் நடப்பதுதான் நன்று ... அப்படி பண்ணிதான் நம் நல்லதை அவர்களுக்கு காட்ட வேண்டும் என்று எந்த தேவையும் இல்லை .

Quote
3) நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...?

கோபித்தாலும் பரவாயில்லை நேர சொல்லிடுவேன் ..... ஆரம்பத்துல கோபம் வந்தாலும் ஆற அமர யோசிச்சு தான் தவறை அவங்க உணர்துகுவாங்க... ஒரு நல்ல நண்பி கிடைத்ததாக சந்தோஷ படுவாங்க .

Quote
4) நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது?


இங்கே ஏதும் இல்லை என்று சொல்லிவிட முடியாது .... பழக்க வழக்கங்கள் அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று ... கரணம் அது சரி இல்லை என்றால் தீங்குதான் ஏற்படும்  எனவே பழக்கவழக்கம் பார்பாத்து அவசியம்
.

Quote
  5) நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?

ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள்

Quote

6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது...

    அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன்

Quote
7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...

நாம் யோசிப்பதற்குள் காலம் கடந்துவிடும்[/b][/color]


Quote
7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...

இன்பம் துன்பம் இரண்டுமே ... நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே இரண்டும் பகிர்ந்துக்கலாம் .... எல்லா நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது .


Quote
8.) நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்...

திறமையை கண்டால் பொறமை வருவது தவிர்க்க முடியாத ஒன்று ..... அதுவே நண்பராக இருந்தால் .... பொறமை கலந்த சந்தோசம் இருக்கத்தான் செய்யும் ..... என்னால முடியலையே இவ பண்ற அப்டின்ற மன நிலை கட்டாயம் இருக்கும் ... ஆனால் என் தோழி அப்டின்குற பெருமையும் இருக்கும் .. எனவே  அவளுக்கு இன்னும் நல்லா பண்ண எனக்கு தெரிந்த யுக்திகளையும்
சொல்லலி கொடுப்பேன்
.

Quote
9) உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...

விரும்பாத செயல்களை செய்யும் போது நிச்சயமா எனோட மறுப்பை தெரிய படுத்துவேன் ....
விரும்பாத பொருளை தரும் போது அந்த பொருளை ஏற்று கொண்டு .... அதற்க்கு அப்புறம் அதன் விருப்பமின்மையை உணர்த்துவேன் ... கரணம் அடுத்த முறை அதே தவறை செய்யாமல் இருக்க ..


Quote
    10) உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..?

செய்யுற தீங்கை பொறுத்தது... சிறிய தீங்கு என்றால் சிறிது நாட்கள் பிரிந்து இருந்தால் தன் தவறை உணர்ந்து கொள்ள அவகாசம் கொடுக்கலாம் ... அதுவே பெரிய தீங்கு செய்தால் நிச்சயம் பிரிந்து விடுவேன் ....

ஸ்ருதி மேற்கொடுக்க பட்ட எல்லா விடைகளும் நீங்கள் கொடுத்த வினா விடைக்கு  கொடுக்கபட்ட விடைத் தெரிவுகளை விட வேறு விதத்தில் உள்ளது ... காரணம் .. நீங்கள் கொடுத்த விடைகளில் ஒன்றை தெரிவு செய்து இதை படிக்கும் எனது நண்பர்களுக்கு என் கருத்தை தவறாக புரிய வைக்க நான் விரும்பவில்லை ... அதனால் என் எண்ணம் சிந்தனையை கொடுத்துளேன் உங்கள் பதிவோடு சமந்த படுத்தி ... இபோ சொல்லுங்க நான் நல்ல நண்பியா... இல்லையா..
« Last Edit: November 26, 2011, 03:08:06 PM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
adiyeeeeeeeee
option la irupathai choose sei...un manasuku virotham illama...
ithu fun thane....athukaga inga imbutu periya lesson :@ adinga...

olunga opition la unaku better-a irupatha sollu

exp

1. அ << ipadi.....adiye ithu ellam nana create seiren...mail- a varathai apdiye podurathu than

sari nee ithula choose seithu oru mudivuku va...

un friends ku unnaiya pathi therium thane..game-a game-a eduthupom di


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இது பொதுப்ப்பகுதி..... விளையாட்டு பகுதி இல்ல ...எப்படி விளையாட்டு பதில் கொடுக்குறது  :o :o ;D

இதுல என் தெரிவு இல்லையே ... அப்போ 4  வதா ஒரு option  வை இதில் எந்த விடையும் எனக்கு பொருந்தாது என்று   சில இடத்துல தெரிவு கஷ்டம் இபோ தேக பொருத்தம் பழக்க வழக்கம் ரெண்டும் சேர்த்து போடு இருக்கே .. எப்டி அதை தெரிவு பண்றது :o ::) ::) ::)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
adinga...ithai vendumna nee play section ku move paniko...but ithula unaku yetha pola option vaika mudiyathu...ithula irupathai than thervu seiyanum....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
1) ஆ                  2) இ

3) இ                  4) அ  ஆ

5) ஆ                  6)அ

7) ஆ                  8)

9) ஆ இ              10)அ