Author Topic: கிருஷ்ணன் என்ற ஒரு அப்பா  (Read 3042 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

En anna Ravee eluthiya Story  :-*

உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா, நாலு காசு சேர்க்கணும் என்று நினைப்பு இருக்கா ? இந்த வீட்டிலும் ஆபிஸ்-ல் வேலையும் பார்த்து நானே கஷ்ட்டப்பட்டு , இந்த நாலு பொண்ணுகளுக்கும் கல்யாணத்துக்கு நகை நட்டு சேர்க்கணும் என்று என் தலையில மட்டும் என்ன எழுதியா இருக்கு.

கோதாவரி உள்ளே குழம்புடன் சேர்ந்து கொதித்து கொண்டு இருந்தாள்.

அப்பா உன்னை அம்மா இவ்வளவு பேசுதே உனக்கு கோபமே வராதா ? கீதா கேட்க ,

செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டு இருந்த கிருஷ்ணன் மெதுவாக நிமிர்ந்து சிரித்தார்.

கீதா இந்த செடிகளை நட்டு வச்சது யாரு மா?

ம்ம் அப்பா நாம தான் .

அப்ப அதுகளை கவனிச்சுகிறது யார் கடமை ?

நம்ப கடமைதான் அப்பா .

அதை தானே உன் அம்மாவும் செய்யுறா? அதிலே கோபப்பட என்ன இருக்கு? சில பொறுப்புகளை சொல்லி காட்டுறது சரி இல்லை. பொறுப்புகளை சத்தம் இல்லாமல் செய்யணும்.

கீதா மெதுவாக சிரித்தாள் . அது இல்லை பா , நாலு பொண்ணுகள் இருக்கோம் நாளைக்கு எங்களை கரை ஏத்துறது உங்களுக்கு சிரமம் தானே அம்மா அதை நினைச்சுதான் சொல்லுறா..நீங்கள் உங்கள் போக்கிலேயே இருக்கீங்கள் , பத்து வருஷம் ஆச்சு அம்மா கூட பேசி ,அம்மாதான் கவலை படுறா , நீங்க ஏகாந்தியா இருக்கீங்க , எங்களை பற்றிய கவலை இருக்கா அப்பா" என்றாள்.

மேம்போக்கா பார்த்தா நான் நாலு பொண்ணுகளை வைத்து கொண்டு புத்தகங்களுக்கு செலவு செய்வது தப்புதான் கீதா என்றார் .

மகள் அவரை ஏற இறங்க பார்த்து விட்டு " தெரிந்து அப்புறம் ஏன் அதே தப்பை திரும்ப திரும்ப செய்யுறீங்க" என்றாள்.

அது தப்பு இல்லை கீதா , அதுதான் என் அடையாளம் . நான் என் சோகங்களையும் சந்தோசங்களையும் அவைகளோடத்தான் பங்கு போடுறேன் . நான் வச்சு இருக்கிற புத்தகங்கள் எல்லாம் புதையல்கள். ஐநூறு புத்தகம் இருக்கு என்றால் ஐநூறு மனிதனின் அனுபவங்கள் இருக்கு. ஒரே ஜென்மத்தில் ஐநூறு ஜென்ம அனுபவங்கள் கிடைக்குறது என்ன சுலபமா, என்றார்.

"கீதா, ஒரு விஷயம் அப்பா வாங்குகிற சம்பளத்தை அப்படியே உங்களுக்கு கொடுத்துடுறேன். சாயந்திரம் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிதர பணத்தை என்னோட செலவுக்கு எடுத்து அதை என் விருப்பங்களுக்கு செலவு செய்யுறேன். உங்க அம்மா தனக்கு வர சம்பளம்...... எல்லாத்தையும் நகையாவோ பொருளாவோ மாத்திக்கொள்ளுரா. எனக்கு தங்கங்களை விட என் புத்தகங்கள் பெரிசா படுது. அவள் பணம் சம்பாத்தித்து கொடுக்க உதவாத எதையும் மதிக்க மாட்டா . உங்க அம்மா எப்ப லஞ்சம் வாங்குறதை நியாய படுத்தி பேச ஆரம்பித்தாளோ, அப்ப இருந்து நான் அவளுடன் பேசுவதை நிறுத்திட்டேன் . இப்ப வரைக்கும் ஒண்ணா இருக்கோம் உங்களுக்காக .

கீதா சிரித்து கொண்டே அப்பா ,எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ... நான் கம்ப்யுட்டர் கிளாஸ் போகணும் என்று கிளம்பினாள்.அப்போது அங்கு வந்த மஞ்சு இளைய மகள் சொன்னாள், அது சரி நீங்க எப்பவும் சாமியார் புத்தகமா படிச்சுட்டே இருங்க , என்றாள்.

கிருஷ்ணன் செல்லாமா அவளை கடித்துக்கொண்டார் . நம்ம தேவைகளை அதிகம் பண்ணிட்டு முறை இல்லாம சம்பாதிக்கிறதை நியாயப்படுத்த கூடாது மஞ்சு என்றார் .

கிருஷ்ணன் ரோஜா செடிக்கு பாத்தி போட்டுக்கொண்டே சொன்னார் ... மஞ்சு உங்க அம்மா வர லட்சுமியை அப்படியே லட்சுமியாய் வங்கி கணக்கில் சேர்த்துடுவா ... நான் திருமகளை கொஞ்சம் கலைமகள் ஆக்கி புத்தக அலமாரியில் வைக்கிறேன் . அது தான் அவளுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம் ஆனால் உங்க நலன் மேலே எனக்கும் அக்கறை இருக்குடா . அதை நான் வார்த்தைகளா சொல்லிக்காட்டுறது இல்லை என்றார் .

அப்பா அவளுங்க கிடக்காளுங்க நீங்க சாப்பிட வாங்க என்று அழைத்தாள் உமா .

உமா அவரின் மூத்த மகள் , அவரை புரிந்து கொண்ட ஒரே மகள் .அப்பாவை போலவே படிப்பில் ஆர்வம் .
இந்த வருடம் மேல் படிப்பை முடித்து விடுவாள். ஆசிரியை ஆகா வேண்டும் என்பது அவள் இலட்ச்சியம்.
இரண்டாம் பெண் ஹேமா எஞ்சினியரிங் படிப்பு கல்லூரி விடுதியில் தங்கி இருந்தாள். மூன்றாவது கீதா கல்லூரி இரண்டாம் ஆண்டு . கடைசி மஞ்சு ப்ளஸ் டூ . பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் என்றாலும் அப்பா, அம்மா இருவரும் வீட்டில் இருந்தாள் அதிகம் பேச மாட்டார்கள்.

கிருஷ்ணன் கை கால் கழுவி அலுவலகத்துக்கு கிளம்பினார். கோதாவரியும் அவள் ஸ்கூட்டரில் ஏறி பறந்தாள் . அன்று ஏற்பட போகும் பூகம்பத்தின் விளைவுகள் தெரியாமல்.
.
இருவரும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வேறு வேறு பிரிவுகளில் வேலை பார்த்தனர். அலுவலகத்துக்கு வந்தவுடன் வடதிசை நோக்கி ஒருவரும் தென் திசை நோக்கி ஒருவரும் பிரிந்தனர். அன்று மதியம் ஒரே பரபரப்பு. காரணம் ... கோதாவரி வேலை பார்த்த பிரிவில் இரண்டு பேர் லஞ்சம் வாங்கும் போது சிக்கிகொண்டனர். விசாரணையில் பல உண்மைகள் வெளியே வர அந்த பிரிவில் இருந்த அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் .

கோதாவரி இடிந்து போனாள். அவளால் நடந்த எதையும் ஜீரணிக்க முடிய வில்லை . பணிநீக்கத்தை விட பெரிய அவமானம்....... கிருஷ்ணன் சார் சம்சாரமுமா இப்படி செய்துடாங்க ... அவருக்கு இப்படி ஒரு மனைவியா .... அவளை பற்றி அதிகம் தெரியாத மற்ற பிரிவுகளில் இருந்து வந்த அனுதாபங்கள் அவளை வெறி கொள்ள செய்தது . அவரின் புத்தக அலமாரியில் இருந்து எல்லா புத்தகங்களையும் அள்ளி எறிந்தாள். மகள்கள் தடுத்தும் அவளின் ஆத்திரம் தீரவில்லை .

இந்த உதவாக்கரை மனிதனை வச்சுகிட்டு உங்களை எப்படி கரை ஏத்த போறேன் தெரியலையே

அடியே நீங்களே நல்லாவனா ஒருத்தனை பார்த்து ஓடி போய்டுங்க ... இந்த மனுஷன் உங்களை நட்டாதில நிப்பாடிடுவான் என்று கூப்பாடு போட்டாள்.

ஆத்திரத்தை அதுவரை கட்டுப்படுத்தி வந்த கிருஷ்ணன் வார்த்தைகளின் வேகத்தால் பொறுமை இழந்து வீட்டுக்குள் நுழைந்த போது அவர் கண்ட காட்சி அதிர செய்தது . அவரின் புத்தக குவியல் மீது மண்ணெணையை ஊற்றி தீ வைத்து கொண்டு இருந்தாள்.

உமா அந்த போர்வையை எடு என்று பதறி போனவர் அப்படியே போர்வையை தீயின் மேல் போட்டு
அணைக்க முயல பெண்கள் எல்லோரும் அழ ஆரம்பித்தனர் .

உனக்கு இப்ப என்ன வேணும் என் புத்தகங்களை எரிக்கணும் அவ்வளவுதானே , இந்தா இந்த புத்தகத்தையும் சேர்த்து எரிச்சுக்கோ என்று ஐந்து வங்கி கணக்கு புத்தகங்களை தூக்கி எறிந்தார் . எடுத்து பார்த்த போது அவர்கள் ஒவ்வொருவர் பேரிலும் சுமார் இரண்டு லட்சத்துக்கு மேல் சேமிப்பு இருந்தது .

"பொண்டாட்டி , பிள்ளைகளுக்கு செய்யுறதை சொல்லி காட்டுறவன் மனுஷன் இல்லை. எனக்கு ஏதாவது ஆகிட்டா நீங்க என்ன செய்வீங்க என்ற எண்ணம் இல்லாமல் இல்லை . உங்க ஒவ்வொருத்தர் பேரிலும்
பாதுகாப்பு பண்ணி தான் வச்சுருக்கேன். ரெண்டு பிள்ளைகள் ஆனதும் சொன்னேன் போதும் என்று ஆனால்
கடைசி வரை நம்பளை காபபாத்த பையன் வேணும் என்று பிள்ளைகள் விசயத்தில் இருந்தே உனக்கு
பணத்தை பற்றிய பயம் வந்துடுச்சி . அப்புறம் நாலு பொண்ணுகள் என்ற உடன் உன்னோட நேர்மை கடமை எல்லாத்தையும் வேண்டாம் என்று தூக்கி போட்ட. என்னோட சண்டை போட்டு குடும்பத்தில் இருந்த பாசம் போச்சு . பெண் பிள்ளைகளை செலவு கணக்காவே பார்த்து பார்த்து அதுகளும் நம்பளோட பாசத்தை புரிஞ்சிக்கலை .

" நீ பணத்தை தேடி தேடி இப்ப என்ன ஆச்சு , உனக்கு என்று இருந்த எல்லா நல்லதும் உன்னை விட்டு போய்டுச்சி . இனியும் நீ மாறலை என்றால் நிம்மதியே இல்லாத கடைசி காலம் நரகத்தை விட கொடுமை ஆனது . உன்னை சுத்தி இருக்குற மனிதர்கள் மேல் நம்பிக்கை வை , உலகத்தை கொஞ்சம் ரசிச்சு பார் . பணத்தை தவிர நம்பிக்கை தர ஆயிரம் விஷயங்கள் இருக்கு நம்மை சுத்தி. பெண் குழந்தைகள் மேல நம்பிக்கை வை ,அவங்களும் நம்பளை கடைசி வரை பார்த்து கொள்வாங்க . உன்னால் முடிந்தா மாறிக்கோ "

எரிந்து போன சில புத்தகங்களுடன் கிருஷ்ணனும் புகைந்து கொண்டு இருந்தார் . பெண்கள் மற்ற புத்தகங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார்கள் .

சில மாற்றங்கள் மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்புவோம் .


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்