Author Topic: ~ மகாவீரர் சிந்தனைகள்..... ~  (Read 324 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மகாவீரர் சிந்தனைகள்.....




உறுதியான உள்ளம் :-

* உயர்ந்தவர்களின் நட்பு, உண்மையானதாக நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

* ஏமாற்றிப் பிழைப்பவன், தன்னைத் தானே புகழ்ந்து மகிழ்பவன், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் மூவரும் பைத்தியக்காரனுக்குச் சமமானவர்கள்.

* மனதில் உறுதி மிக்கவனிடம் மட்டுமே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் பலம் இருக்கும். அவனே சகலமும் சாதிப்பான்.

* இனிமையாகப் பேசுங்கள். மற்றவர்களைப் புண்படுத்தும் கடுஞ்சொற்களைப் பேசக்கூடாது. அளவாகப் பேச வேண்டும்.