Author Topic: பூமியிலுள்ள அனைத்து எறும்புகளின் எடை  (Read 324 times)

Offline Little Heart

நம்மைக் கடித்தாலோ அல்லது நமது உணவுப்பொருளில் தென்பட்டாலோ தான் நாம் எறும்பைப் பற்றி யோசிப்போம். இப்படி நாம் சிறிதும் சிந்திக்கத் தவறுகின்ற, உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு என்று தெரியுமா, நண்பர்களே? இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள், அதற்குறிய விடை உங்களுக்குத் தெரியவரும்!

மொத்தம் 10,000 வகையான எறும்புகள் உள்ளன. இவை 100 மில்லியன் ஆண்டுகளாக நமது புவியில் வாழ்ந்து வருகின்றன. இவை இப்படி அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன என்றால் அதற்குக் காரணம் இவற்றின் பகிர்ந்துண்ணும் பண்பு தான், அதாவது இவை ஒன்றாக ஒரே காலனிகளில் வசித்து, அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து உழைப்பதால், எல்லா எறும்புகளுக்கும் தேவையான இரை கிடைத்துவிடுகிறது. அதனால் இவை இரையினைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இது வியப்பூட்டும் விடயம் அல்லவா? மனிதர்களாகிய நாமும் இவ்வாறே பகிர்ந்து வாழ்ந்தோம் என்றால், உலகில் காணப்படும் வறுமையைக் கூட ஒழிக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

சரி, நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவாக இருக்கும்? பொதுவாக நாம் எறும்புகளைப் பற்றி எண்ணியிருப்பது இது தான்: அனைத்தும் சிறியவை, விஷமற்றவை, சிலந்திகள் போன்று கூட அச்சுறுத்தாது, அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் நமக்குப் பயம் கிடையாது. இப்படிப்பட்ட இந்த எறும்புகளில் ஒரு மில்லியன் எறும்புகளின் எடை தோராயமாக ஒரு மனிதனின் எடைக்குச் சமமாக உள்ளது. இதுவே புவியில் உள்ள அனைத்து எறும்புகளையும் செர்த்தால் அதன் எடை, பூமியில் வாழும் அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாக இருக்கும் நண்பர்களே! இனி விரும்பினால் இதை வைத்து பூமியில் எத்தனை எறும்புகள் வாழ்கின்றன என்பதை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.