Author Topic: எறும்புகளின் எண்ணிக்கைப் பத்து லட்சம் மடங்கு அதிகம்  (Read 324 times)

Offline Little Heart

நீங்கள் ஏதாவது இனிப்புப் பொருளை வெளியே வைத்திருக்கும் பொழுதில், எறும்புகள் அதைப் பதம் பார்க்கும் போதுதான் எறும்பைப் பற்றிச் சிந்திப்பீர்கள், அல்லவா? எறும்புகள் சிறியது, விஷமற்றது, மற்றும் சிலந்திகள் போல் பயம் உண்டாக்காதது. ஆனால், இந்த எறும்புகள் பற்றிய ஒரு சுவாரசியமான விடயம் தெரியுமா? பூமியில், எறும்புகளின் எண்ணிக்கை மனிதர்களின் எண்ணிக்கையை விடப் பத்து லட்சம் மடங்கு அதிகம். ஆனால் எறும்புகளின் அளவோ மனிதர்களின் அளவை விடப் பத்து லட்சம் மடங்கு குறைவானது. கணக்கிட்டுப் பார்த்தால் பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எடை பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எடைக்குச் சமமாகும்.

10,000 வகையான எறும்புகள் நம்மைச் சுற்றி வெகு காலமாக வசிக்கின்றன. பத்து கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த, புராதன எறும்புகளின் படிமங்கள் இப்பொழுது கண்டெடுத்துள்ளனர். எறும்புகளின் வாழ்க்கை முறையும், வாழ்வியல் போராட்டமும் காலத்தோடு ஒத்து வளர்ந்துள்ளது. இது தான் இந்த சிறிய பிராணிகளின் வெற்றியான வாழ்வுக்கு ஒரு ஆதாரம் ஆகும். எறும்புகள் கூட்டமாக வாழ்ந்து, தனக்கு கிடைக்கும் இரையை தன் புற்றில் பதுக்கி வைத்து, பின்பு தேவைப் படும் பொழுதுகளில் தன் உறவினர்களோடு பகிர்ந்து உண்ணும்.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே.