Author Topic: நீலக்கல்லும் மாணிக்கமும்  (Read 322 times)

Offline Little Heart

உங்கள் எல்லோருக்குமே நீலக்கல் (sapphire) மற்றும் மாணிக்கக்கல் (ruby) எனப்படும் இரு கற்களை நன்றாகவே தெரிந்து இருக்கும், அல்லவா? இதிலும் நீலக்கல் கரு நீல நிறத்திலும், மாணிக்கம் சிவப்பு நிறத்திலும் உள்ளது என்பது மட்டும் இல்லாமல், இரு கற்களுமே விலை உயர்ந்த கற்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், நாம் பொதுவாக அறியாத ஒரு விடயம் என்ன தெரியுமா? இவ்விரு கற்களும் உண்மை சொல்லப்போனால் ஒரே வகையைச் சேர்ந்தது என்பது தான்!

இது புரிவதற்கு முதலில் குருந்தம் (corundum) என்றால் என்னவென்று பார்க்கலாம். குருந்தம் என்பது அலுமினியம் ஒக்சைட்டின் படிம வடிவமாகும். இது இயற்கையில் நிறமற்றதாக இருந்தாலும், அதில் அசுத்தம் படிவதால் பல வண்ணங்களைப் பெறுகிறது. இந்தக் குருந்தம் சிவப்பு நிறத்தில் இருந்தால், அதை நாம் மாணிக்கம் என்கிறோம். இதே குருந்தம் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், பட்பராட்ச்‌சா (padparadscha) என்று வழங்கப்படும். மற்று அனைத்து வண்ணக் கற்களையும் நீலக்கல் என்று தான் குறிப்பிடுவர். எனவே, நீலக்கல் நீல நிறம் மட்டும் உடையதில்லை. இது பச்சை நிறத்தையும் சேர்த்து, பல வண்ணங்களில் இருக்கின்றது. குருந்தம் அழகுக்கு மட்டுமல்லாமல், அதன் கடினத்தன்மையாலும் பரவலாக அறியப்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்துத் தாதுப் பொருள்களயும் வெட்டும் கடினமான பொருள் ஆகும். இது ரஷ்யா, ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் இந்தியாவில் வெட்டியெடுக்கப் படுகிறது.

எனவே, நிறம் வேறதாக இருந்தாலும், இந்தக் கற்கள் கருவில் ஒன்றானவை தான்.