Author Topic: இன்பத்தாலும், துன்பத்தாலும் ஏற்படும் இறப்பு  (Read 322 times)

Offline Little Heart

திடீரென ஏற்படும் இன்பத்தினாலோ அல்லது துன்பத்தினாலோ உண்டாகும் அதிர்ச்சியினால், மனிதனின் இதயம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சில வேளைகளில் இதனால் இறக்கக்கூட நேரிடலாம். இதற்கு டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo cardiomyopathy) என்று பெயர். என்னடா இது வாயில் வராத பெயராக இருக்கிறதே என்கிறீர்களா? அதற்காகத் தான் இதனை “உடைந்த இதயத்தின் நோய் (broken heart syndrome)” என்றும் கூட கூறுகின்றனர்.

இது வலுவிழந்த இதயத் தசைகளால் ஏற்படுகிறது. நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம்மை வெறுக்கும் போது, நம்மைவிட்டு அவர்கள் விலகும்போது அல்லது அவர்கள் இறக்கும்போது ஏற்படும் தொடர் மன அழுத்தத்தினால் இவ்வாறு ஏற்படும். இதனால் தான் இதனை உடைந்த இதயத்தின் நோய் என அழைக்கின்றனர்.

இதயத்திற்கு அதிக துன்பம் அல்லது இன்பம் ஏற்படும் போது இது அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக லாட்டரியில் பணம் அதிகம் விழுந்ததை ஒருவர் கேட்கும்போது அதிகபட்ச மகிழ்ச்சியால் அவரது உடலின் அட்ரினலின் எழுச்சிபெறும், இதனால் இதயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இத்தகைய நோய்களால் இறப்பது மிகவும் குறைவு என்றாலும், இவை தான் முன் கூட்டியே நடக்கும் என தீர்மானித்து நடக்கும் சில செயல்களின் மூலம் இவற்றைக் குறைக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வாழ்வில் எது அதிகம் இருந்தாலும் நமக்கு பிரச்சனைதான் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை என்றாலும், அதை விஞ்ஞானிகள் கூறினால் தான் நாம் கேட்போம் என்பது தான் நடைமுறை வாழ்க்கை.