Author Topic: இஸ்லாம் ஒரு மதமல்ல!  (Read 861 times)

Offline Yousuf

இஸ்லாம் ஒரு மதமல்ல!
« on: January 15, 2012, 06:28:13 PM »
பொதுவாக மதம் தனிமனிதன் பற்றியும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக அலசும். ஆன்மிகம் குறித்து விரிவாகப் பேசுவதுதான் மதம் என்று பொதுவாக மதம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. அதுதான் யதார்த்தமும்கூட.

இந்த வகையில் இஸ்லாமும் ஒரு மதமாக இருக்குமென்றால் தனிமனித வாழ்க்கையை மாத்திரம் கவனத்திற்கொண்டு செயற்படுவதாகவே அமைதல் வேண்டும். ஆனால் இஸ்லாம் இத்தகைய ஒரு மதமல்ல. இஸ்லாத்தை மதம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் பொதுவாக மதத்துக்கு வழங்கப்படுகின்ற வரைவிலக்கணத்துக்கு மாற்றமாக இஸ்லாத்தில் மூன்று பெரும் இலக்குகள் உண்டு அவை:

தனி மனித உருவாக்கம்
குடும்ப உருவாக்கம்
சமூக உருவாக்கம்


தனிமனிதர்களை உருவாக்கி தனி மனிதர்களைக் கொண்ட சில குடும்பங்களை அமைத்து, குடும்பங்களை இணைத்த ஒரு சமுதாயத்தை தோற்றுவிப்பதுதான் இஸ்லாத்தின் இலக்கு.

எனவே, இஸ்லாத்தை மதம் என்று அழைக்கக் கூடாது. மதம் என்று கூறுவதாக இருந்தால் சில மேற்கத்தேய அறிஞர்கள் கூறுவதுபோன்று சில அடைமொழிகளுடன்தான் இஸ்லாத்தை மதம் என்று அழைக்க வேண்டும். உதாரணமாக, இஸ்லாம் என்பது குடும்பத்தை இலக்காகக் கொண்ட மதம் (Family Oriented Religion) சமூகத்தை இலக்காகக் கொண்ட மார்க்கம் (Community Oriented Religion) என்றே அழைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அடைமொழிகள் இன்றி இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கைத் திட்டம் அல்லது சம்பூரணமான வாழ்க்கை ஒழுங்கு எனக் கூறுவதுதான் பொருத்தமானது.

ஏனெனில், இஸ்லாத்தை மதம் என அறிமுகப்படுத்துகின்றபோது மதத்துக்கும் குடும்பத்துக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? அல்லது மதம் ஏன் சமூகத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். மதத்துக்கும் நிதி, நீதி, நிர்வாகத்துக்கும் இடையிலான தொடர்புகள் என்ன? அன்றாட கொடுக்கல்-வாங்கலுடன் தொடர்புபட்ட சமூக வாழ்வுக்கும் மதத்துக்குமிடையிலான உறவு என்ன? போன்ற கேள்விகள் நிச்சயம் ஏற்படும்.

எனவே, இஸ்லாம் ஒரு மதமல்ல. மாறாக அது மனிதனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று கற்றுகொடுக்கும் வாழ்வியல் நெறி!