Author Topic: ~ { அக்ரூட் } பருப்பு வால்நட் பற்றிய தகவல் !!!! ( மறு பதிவு ) ~  (Read 2602 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218366
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
{ அக்ரூட் } பருப்பு வால்நட் பற்றிய தகவல் !!!! ( மறு பதிவு )




விலை உயர்ந்த கட்டைகளை தரக்கூடியது அக்ரூட் மரம். மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் சிக்கிம், நேபாளம், ஆகிய பகுதிகளிலும் இமாலயப் பகுதிகளில் இயற்கையாக காணப்படுகிறது. அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலை, பட்டை மற்றும் கனி போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. இந்த மரத்தில் கிடைக்க வால்நட் விதைகள் அதிக சத்து நிறைந்தவை.

பழைய காலத்தில் ரோமர்களும், பிரஞ்ச் மக்களும் வால்நட்டை அதிகம் உண்டு வந்த கதைகளை வரலாற்றில் படித்ததனால் தான் இந்த யோசனையே தோன்றியது என்கிறார் Kim Kah Hwi, இந்த ஆராய்ச்சியின் தலைவர்.

கிரேக்கர்கள் ‘அந்த’ விஷயத்துக்காக வால்நட்டைப் பயன்படுத்திய செய்தி கிடைத்ததனால் அதை தீவிரமாய் ஆராய்ந்து பார்த்து உண்மை கண்டுபிடித்தார்களாம்.

N- Hanz எனும் பெயரில் உருவாக்கப்படுள்ள இந்த மாத்திரையை நாற்பது பேருக்கு சோதனை செய்து பார்த்ததில் பலன் பிரமாதமாம்.

உண்டு ஒரு மணிநேரத்திற்குப் பிறகு தான் இந்த மாத்திரை வேலை செய்யுமாம். அப்புறம் ஒரு நாலு மணி நேரத்திற்கு கவலையில்லையாம்.

வயாகராவில் இருக்கும் பக்க விளைவுகள் இந்த மாத்திரையில் இல்லையாம். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் கூட இதை பயன்படுத்தலாமாம்.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து பல வைட்டமின்கள், அமினோஅமிலங்கள், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வைட்டமின் டி, வைட்டமின் பி6, அஸ்கோரிப் அமிலம், சிஸ்டெயின், டிரிப்டோபேன், தயாமின், ரைபோஃபிளேவின்,நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், பயோடின், ஜீக்ளோன்.

வாதநோய்களுக்கு மருந்து

இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இவை தோல்நோய்கள், பால்வினைநோய், எக்ஸிமா, காசநோய், ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. கனிகள் வலுவேற்றியாகவும், வாதநோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. காய்களின் மேல் உறை கிருமிகளை போக்க வல்லது. விதைகளை ருசியானவை. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.
மலேஷியன் ஆராய்ச்சியாளர்கள் வயாகராவுக்கு மாற்றாக வால்நட் கொண்டு ஒரு எழுச்சி மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர்.


வால் நட் பருப்பின் உள்கட்டமைப்பைக் கண்டால் நம் மூளையைப் போலுள்ளது.நம் நினைவுத்திறனை அதிகப்படுத்த உதவும் ஒமேகா-3 வால்நட்டில் அதிகமுள்ளது.வால்நட்டில் உள்ள புரதச்சத்து அல்சீமர் நோயைக்கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.வயதானாலும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவேண்டுமானால் வால்நட் பருப்பின் துணை நமக்கு வேண்டும்.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.