Author Topic: மசால் பொடி  (Read 792 times)

Offline kanmani

மசால் பொடி
« on: October 25, 2012, 01:23:54 AM »

    கொத்தமல்லி விதை - 1/2 கிலோ
    மிளகாய் வற்றல் - 300 கிராம்
    சீரகம் - 200கிராம்
    சோம்பு - 100கிராம்
    மிளகு - 25கிராம்
    வெந்தயம் - 25கிராம்
    அரிசி - ஆழாக்கு
    உளுந்தம்பருப்பு - 1/4 கிலோ
    துவரம்பருப்பு - 1/4 கிலோ
    பெருங்காயம் - 3 கட்டி
    மஞ்சள் சில் - 3
    கறிமசால்(கிராம்பு,அன்னாசிபூ,பட்டை,கல்பாசி எல்லாம் சேர்ந்து) - 15கிராம்

 

    கொத்தமல்லி,மிளகாய்வத்தல்,மஞ்சள் மூன்றையும் வெயிலில் 2 மணிநேரம் காய வைக்கவும்.
    மீதமுள்ள பொருட்களை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மாவு மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளவும்.

Note:

நான் சொன்ன அளவு பொருட்கள் உபயோகித்தால் 2 1/2 கிலோ அளவிற்கு மசால் பொடி கிடைக்கும்.இந்த பொடியை அனைத்து விதமான குழம்பிற்கும் உபயோகிக்கலாம். சாம்பாருக்கும் பயன் படுத்தலாம். அசைவத்திற்கும் உபயோகிக்கலாம். இந்த மசால் பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டால் 6 மாதத்திற்கும் மேல் கெடாமல் இருக்கும்.