Author Topic: பாவற்காய் பலாக்கொட்டை பால்கறி  (Read 490 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பாவற்காய் பலாக்கொட்டை பால்கறி
 
வீட்டில் காய்க்கவில்லை. சமையலுக்கு சட்டிக்குள் போக காத்திருக்கிறார்

தேவையானவை

பாகற்காய் - 1
பலாக்கொட்டை – 5 - 6
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கருவேற்பிலை சிறிதளவு
தேசிப்புளி- 1 ரீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் நீர் - ½ டம்ளர்
தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

சின்ன வெங்காயம் - 3
செத்தல்மிளகாய் - 1
கடுகு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை சிறிதளவு
ஓயில் - 2 ரீ ஸ்பூன்



பலாக்கொட்டை மல்லித்தழைத் தளுவலுடன் பாகற்காய் பாற்கறி.

செய்முறை

    பாகற்காயை  3 அங்குல நீளமாகவெட்டி, உட்பகுதியை நீக்கி கழுவி எடுக்கவும். துண்டங்களை நீள் பக்கமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
    பலாக்கொட்டையை தோல் நீக்கி கழுவி எடுங்கள்.
    மேல்தோலை நீக்கி விடுங்கள்.
    சிறிய நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.
    வெங்காயம் மிளகாயை நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
    காய்களைப் பாத்திரத்தில் போட்டு, உப்பு, தேங்காய் நீர் விட்டு, கருவேற்பிலை சேர்த்து மூடி போட்டு, 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.
    திறந்து பிரட்டிக் கொள்ளுங்கள்.
    நீர் வற்றிய பின் தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி இறக்கி வையுங்கள்.


ஓயிலில் தாளிதப் பொருட்களை தாளித்து சமைத்த பாகற்காயைக் கொட்டி நன்கு ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்குங்கள். தேசிப்புளி கலந்து எடுத்து வையுங்கள்.

' கசப்பும் இனிப்பும் சேர்ந்த பசப்புக்காரி' சாப்பிடத் தயாராகிவிடுவாள்.


மேசையில் சாப்பிடத் தயாராக இருக்கிறது
குறிப்பு

தேங்காய் நீர் சேர்ப்பதால் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.
மேலும் சிறுவர்களுக்கு நன்கு கசப்பைக் குறைக்க விரும்பினால் ½ ரீ ஸ்பூன் சீனியை இறக்கும்போது கலந்துவிடுங்கள்.
( வெல்லம் சேர்த்தால் கறியின் நிறம் மாறிவிடும் )


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்