Author Topic: தந்தூரி சிக்கன்...!  (Read 1018 times)

Offline Yousuf

தந்தூரி சிக்கன்...!
« on: September 21, 2011, 11:40:29 AM »
தேவையான பொருட்கள்:

கோழி - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
வெண்ணெய் சிறிது
தயிர் - 6 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 100 கிராம்
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
சிகப்பு பொடி - ஒரு சிட்டிகை


செய்முறை:

கோழியினை சுத்தம் செய்து, மார்பு, தொடை, கால் பகுதி என மூன்றையும் தனியே வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வெட்டி எடுத்த ஒவ்வொரு துண்டங்களின் சதைப் பகுதியிலும் கத்தியால் மூன்று ஆழமான வெட்டுக்களை உருவாக்க வேண்டும். மிளகாய்த்தூளுடன் உப்பினையும் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து நன்றாகக் கரைத்து கோழித்துண்டுகள் மீது ஒரே அளவில் பூசி சுமார் 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.

இப்போது தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு விழுது, வண்ணப்பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டுகள் மீது பூச வேண்டும். மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டுகளை சுமார் 4 மணி நேரங்களுக்கு நன்கு ஊறவிட வேண்டும்.

அதன் பிறகு அதனை எடுத்து கம்பியில் சொருகி, சூடேற்றப்பட்ட ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும். தந்தூரி அடுப்பு இருந்தால் 8 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. அடுப்பில் வைத்த 5 நிமிடங்களுக்கு பிறகு ஒருமுறை கறியினை எடுத்து அதிகப்படியான நீரை வடித்து விட்டு, அதன் மீது வெண்ணெய் தடவி மேலும் சில நிமிடங்களுக்கு(4-5) வேகவிட்டு எடுக்க வேண்டும்.