Author Topic: ஃப்ரைட் ரைஸ் & கோபி மஞ்சுரியன் & ஃபிஷ் மஞ்சுரியன்..  (Read 1200 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஃப்ரைட் ரைஸ்

பாசுமதி அரிசியை கழுவி நீர் ஊற்றி ஊறவைக்கவும் பத்து நிமிடங்கள். அதற்குள் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிக்கவும். பட்டாணி, சோளம் ஊறவெச்சு வேகவெச்சு வெச்சுக்கங்க. கேரட், பீன்ஸ் பொடியா கட் பண்ணி வெச்சுக்கங்க. புதினா, கொத்தமல்லி பச்சைமிளகாய் மிக்சில போட்டு நைசா அரைச்சு ரெண்டு டேபிள் ஸ்பூன் வெச்சுக்கங்க. சோயா சாஸ் ஒரு குட்டி ஸ்பூன். அஜீனமோட்டோ ஒரு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு, ரெட் சில்லி சாஸ், குடமிளகாய், வெங்காயத்தாள் பொடியா கட் பண்ணி வெச்சுக்கங்க. பட்டை, லவங்கம் பொடி ஒரு டீஸ்பூன். மிளகு தூள் 3 டேபிள் ஸ்பூன்.

அரிசியை உதிரி உதிரியா சாதம் போல வடிச்சு வெச்சுக்கங்க. ஒரு பெரிய பாத்திரம் வெச்சு கொஞ்சமா எண்ணை ஊற்றி பட்டை லவங்கம் பொடி போட்டு அதில் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது போட்டு வதக்கனும். வெட்டிய காய்களில் குடமிளகாய் வெங்காயத்தாள் தவிர மீதிஎல்லாம் போட்டு வதக்கனும், பட்டாணி சோளம் போட்டு வதக்கனும் உப்பு, அஜீனமோட்டோ சோயா சாஸ் போட்டு வதக்கனும்.
மிளகாய் புதினா கொத்தமல்லி பேஸ்ட் போட்டு வதக்கனும். சாதம் போட்டு கிளறி அதில் குடமிளகாய் வெங்காயத்தாள் போட்டு கிளறி தட்டு போட்டு ரெண்டு நிமிஷம் சிம்முல மூடி வைக்கனும். அப்புறம் திறந்துட்டு ரெட் சில்லி சாஸ் போட்டு கிளறி இறக்கும்போது மிளகுத்தூள் போட்டு கலந்து இறக்கி மூடி வெச்சுருங்க. ப்ரைட் ரைஸ் ரெடி... அடுத்து மஞ்சுரியன் பார்ப்போமா?

கோபி மஞ்சுரியன்

காலிப்ளவரை சுடு நீரில் உப்பு போட்டு சுத்தப்படுத்திட்டு அழகா ஒவ்வொரு பூவா பிரிச்சு வெச்சுக்கனும். ஒரு பாத்திரத்தில் சோளமாவு (கார்ன்ப்ளார்) கொஞ்சம், கடலைமாவு கொஞ்சம், அரிசிமாவு கொஞ்சம் போட்டு அதில் உப்பு, கரம்மசாலா பவுடர் ரெண்டு சிட்டிகை, மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் போட்டு நீர் விட்டு திக்கா கலந்துக்கங்க. கடாயில் எண்ணை வைக்கனும் பொறிக்க. ஒவ்வொரு பூவும் இந்த கலவையில் முக்கி முக்கி எண்ணையில் போட்டு பொன்னிறமா பொரிச்சு எடுத்து வைங்க. 4 பெரியவெங்காயம், 4 பெரிய தக்காளி பொடியா கட் பண்ணிக்கங்க, இஞ்சி பூண்டு பொடியா கட் பண்ணிக்கங்க. கடாய் வெச்சு எண்ணை கொஞ்சமா ஊற்றி ஒரே ஒரு பட்டை போட்டு தாளிச்சு, இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி, உப்பு கொஞ்சமா போட்டு மஞ்சள்தூள் போட்டு மிளகாய்த்தூள் போட்டு வதக்கி பொறிச்ச பூவெல்லாம் போட்டு வதக்கி உடனே இறக்கிரனும். ட்ரையா இருக்கனும்... நல்லா இருக்கும்.


ஃபிஷ் மஞ்சுரியன்

சுறாமீன் சுத்தப்படுத்தி தோல் உரித்து அழகா துண்டு துண்டாக சின்ன சின்னதா போட்டு உப்பு, சோளமாவு, மிளகாத்தூள், கரம்மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், எலுமிச்சைபழ ரசம் இதெல்லாம் போட்டு மீனை அதில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதற்குள் வெங்காயம் 4 பெரியது பொடியாக நறுக்கிட்டு, ஒரு பூண்டு முழுதாக பொடியாக நறுக்கிட்டு, பச்சை மிளகாய் 4 பொடியாக நறுக்கி வெச்சுக்கனும்.

ஊறின மீனை எண்ணையில்போட்டு பொறிச்சு எடுக்கனும். கடாய் வைத்து கொஞ்சமா எண்ணை விட்டு பூண்டு, வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கி அதில் பொறித்த மீனை போட்டு ரெண்டு திருப்பி திருப்பி இறக்கிறனும். செம்ம ருசியா இருக்கும்....




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்