Author Topic: காதல் என்பது  (Read 2965 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காதல் என்பது
« on: December 09, 2011, 04:10:53 AM »
காதல் என்பது

பெண்ணுக்கு திருமண வயது இருபத்து ஒன்று, ஆணுக்கு வயது ?, போகட்டும், மருத்துவ ரீதியாக ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளவும் உடலுறவு கொள்ளவும் ஏற்ற வயது இருபத்து ஒன்று என்று நமது அரசாங்கம் இப்படி ஒருஅறிவிப்பை கொடுத்துள்ளது , சிறந்தது, ஆனால் அந்த காலத்தில் இந்த அறிவிப்பு இல்லாமல் பல பேர் பதினாறு வயதிலும் பன்னிரண்டு வயதிலும் திருமணம் செய்து கொண்டு பத்து பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்ந்துள்ளனர், இதில் வேறு ஒரு கொடுமை, முதல் குழந்தை பெண்ணாக இருந்து விட்டால், அந்த பெண் குழந்தை வளர்ந்து பூப்பெய்தி இருக்கும் அதேசமயத்தில் தாயும் குழந்தை பெற்று எடுப்பாள், அத்துடன் மட்டும் நில்லாது மகளுக்கும் திருமணம் செய்து வைத்து மகளும் தாயும் ஒரே சமயத்தில் கருவுற்று குழந்தை பேரு நடக்கும் அதிசயங்களும் நமது நாட்டில் இருந்து வந்துள்ளது.

இந்த நிலை தலை கீழாக மாறி இப்போதுள்ள பெண்கள் கல்யாணமே இருபத்தேழு முப்பது என்று தள்ளி போட்டுக் கொண்டே போகிறார்கள், குழந்தையை பெற்று எடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்ற நிலையையும் இக்கால பெண்கள் உருவாக்கி கொள்ளுகிறார்கள். இந்த நிலை இப்படியே போகுமானால் கற்பபையில் சில கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்பும் மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கிறது மருத்துவம், எந்த நிலையிலும் ஆபத்தை நாம் தேடிக் கொள்ளாமல் ஆபத்து நம்மையும் தேடி வராமல் பார்த்துக் கொள்வதற்கு நாம் கற்ற கல்வி உத வேண்டும், கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு இளவயதுப் பெண் இப்படி சொல்லுகிறாள் தன் காதலனிடம் :

எங்கே நீ
என்னருகில் வந்தால்
என்னுள் எரிந்து
கொண்டிருக்கும்
காமத்தீயில்
நாம் இருவரும்
கருகி விடுவோமோ
என்னருகே வராதே
என்னுயிரே.....

என்னுள் என்னை
தின்று கொண்டிருக்கும்
காதல் உன்னுள்
புதைந்து கிடக்கும்
அன்பின் இறுக்கத்தில்

உன் கண்களின்
கடையோர பார்வை
என்னை
களங்கம் செய்கிறது

நான் இதுவரை
காத்த விரதம்
விரக தாபமாய்
என்னை பொசுக்கிவிட
உன் அணைப்பில்
என் தீயை
அணைத்து விடு

பயமாய் இருக்கிறது
என் முடிவுகளில்
நீ சங்கமித்து
என்னை
மாற்றி விடுவாயோ
என்று......

........ ...... இதிலிருந்து என்ன தெரிகிறது, இக்கால பெண்களும் பெண்களுக்குரிய ஆசா பாசங்கள் நிறைந்தவர்கள் தான், ஆனால் ஏதோ ஒரு குறிக்கோள் என்ற பெயரில் தன் வாழ்க்கையை பற்றி அவர்கள் மனதில் போட்டுக் கொண்டிருக்கும் கோடு, அந்த கோட்டை தாண்டி வர கூடாது என்ற அவர்களது தன்னிச்சையான முடிவு, இயற்கைக்கும் செயற்கையான எண்ணங்களுக்கும் இடையே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்களது மனம்...........

ஒரு மூன்றாவது ஆளாய் நின்று இவற்றை அவர்களால் பார்க்க முடிந்தால் அவர்களது இயற்க்கைக்கு எதிரான முடிவு தேவையற்றது என்பது விளங்கும். வாழ்க்கை சுமையாகமல் சுவையாகும்.

மனதளவில் ஒரு ஆணோ பெண்ணோ உடலுறவுக்கு தயாராகி விட்டாலே அயல்நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், இதனால் நாற்ப்பது வயதாவதற்குள் அவர்கள் பாட்டி தாத்தாவாகி பேர குழந்தைகளையும் பார்த்துவிடுகின்றனர்.

நம் நாட்டிற்கு குழந்தை பேரு அவசியம் இல்லைதான், தனி மனித நலம் பற்றி சிந்திக்கும் போது, தேவையற்ற தனிமை காக்கும் விரதமும் அவசியமற்ற ஒன்று.