பதினான்கு ரூபாய் சீட்டு
பாதியாய் கிழித்து தந்த நடத்துனர்
பரபரப்பான காலை நேரம்
பார்வையானது இருக்கை இருக்குமா??
என தேட
என்ன ஆச்சர்யம் !
பக்கவாட்டில் ஜன்னல் ஓரமாய் இருக்கை
ஓர் நபர் அமரும்படி
ஓட்டுநர் பேருந்தை கிளப்ப
சொகுசு பயணம் ஆரம்பம் இனிதாய் என
என் நினைப்பு.,
அப்பொழுது...
கால்வலி கண்ணு மயக்கமாவும் இருக்கு
வயசான பொண்ணு நானு
என்னை பார்த்து இரக்கம் காட்டுனு ஒரு குரல்
குரல் வந்த திசையில் நோக்கினேன்
[ஒரு பேரிளம் பெண் குரல் நடுக்கத்துடன் நின்றவாறு
இதை சொன்னாங்க]
வந்த சிரிப்பையும் வராதது போல
குறுநகையுடன்
நீங்க உக்காருங்கனு சொல்லி..
மெல்ல எழுந்தேன்
(Rhyming அவ்ளோ பிரமாதம்ங்க அதான் சிரிப்பு )அடுத்த நொடியே......
அமர்ந்த அந்த பெண்மணி
பின்னே திரும்பி, தன் சகஊழியரிடம்
7th paycommission என்னாச்சுங்க- னு கேட்டாங்க பாருங்க
என் கண்கள் இப்படி ஆச்சு
[அதுவரை மருத்துவமனையில், அதுவும் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU )
ரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும் நோயாளி போன்றதான குரல் இப்போ
என்னென்னா L .R ஈஸ்வரி vibration voice-ஆக மாறியதே
அடடே ஆச்சர்யக்குறி !!]"ஆஹா !!
பாசாங்கு செய்தாயோ அம்மையே
பரிதாபம் பட்டு கோட்டையும் விட்டேனே"
(mind voice) -இங்கணம்
பேருந்தில் தொலை தூரம் கம்பியில் சாயந்தவாரே
நின்றபடி பயணம் செய்த பயணி.
***********
Idaiyagavaippu