Author Topic: யார் கடவுள்...?  (Read 1832 times)

Offline Yousuf

யார் கடவுள்...?
« on: July 21, 2011, 07:56:42 PM »
ஓரிறையின் நற்பெயரால்

  இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. "கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.
  கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.


இயற்கையா? இறைவனா?

  இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் "அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை. அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை. சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?
      இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் "இயற்கை" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது "தற்செயலாக" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர். இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்லவேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.

   ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும். இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும். ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

 ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது "தற்செயல்" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான். எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை. ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே "கடவுள்" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?


யார் கடவுள்?

    சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் "கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.

    கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.

    அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.

    எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.
    மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.

    மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது.

    அவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

    மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் "அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

    எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

    நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

    மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.

    இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.


இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்".

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: யார் கடவுள்...?
« Reply #1 on: July 22, 2011, 05:10:35 PM »
manathu suththamahaa pirarrukku uthavum nalla manasu yaaridam erukuratho.. antha thooya ullam enrum  kadavulthan.... :)
                    

Offline Yousuf

Re: யார் கடவுள்...?
« Reply #2 on: July 22, 2011, 05:25:19 PM »
அந்த தூய உள்ளம் உள்ளவர்கள் எல்லாம் கடவுள் என்கிறீர்களா...?

நீங்கள் இப்படி சொல்வதால் தான் மனிதர்களில் சிலர் தங்களை கடவுள் என்று சொல்லி மக்களை எமாற்றுகிராகள்...!!!

மனிதன் என்றும் கடவுள் ஆக முடியாது...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: யார் கடவுள்...?
« Reply #3 on: July 22, 2011, 05:31:04 PM »
poi solbavarkal epdi kadavulaka mudium ... than kadavulnu evan solraano avanai nampave koodathu... ;)
                    

Offline Yousuf

Re: யார் கடவுள்...?
« Reply #4 on: July 22, 2011, 05:44:16 PM »
அதை தான் நான் சொல்கிறேன் மனிதன் கடவுள் ஆக முடியாது என்று...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: யார் கடவுள்...?
« Reply #5 on: July 22, 2011, 06:52:46 PM »
nala ullam padaithavarkal kadavul than >:( >:( >:( >:(