தலை குனிவு...!!
*******************
சால்வைக்கு சிரம் தாழ்த்தலில்
அடங்கிப்போகிறது
கொள்கைகளின் சமரசங்கள்...
.
தலை குனிந்து
புன்னகைத்து நான்
ஏற்றுக்கொள்கிறேன் நின்
கபட சத்தியங்களின் பொன்னாடையை...
.
என் நாட்குறிப்பேட்டில்
சந்திப்புகளின் விசேடங்களை
குறித்துவைத்துள்ளேன் - அதில்
ஒரு வாரியை சத்தியப்படுத்துகிறேன்
நான் நடிகன் என்று....