FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 28, 2021, 04:22:55 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: Forum on February 28, 2021, 04:22:55 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 258
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/258.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: TiNu on February 28, 2021, 07:24:31 PM


என் இனிய இசையே...
நீ இன்றி... நான் இல்லை..

என் சின்ன உலகமே..
உன் பின்னே தவம் கிடக்குதே...

உன் செல்ல சிணுங்களில்..
என் காலை பொழுதும் விடியுமே.... 

உனை தீண்டும் வேளையிலே...
நான் இன்றி... இவ்வுலகமே மயங்குதே..

உன் சுவாசம்.. எடுத்தே
நான் விடும் மூச்சும்... . சங்கீதம் ஆகுதே...

உன் பண்பட்ட அதிர்வாலே..
ஆறறிவு உயிர்களன்றி..  ஈரறிவும் மயங்குதே..

ஒளியுடன்.. நீ இணைகையிலே
என் உள்ளம் உருகி.... பனியாகுதே..
 
நீ எனை  ஆட்கொண்டதினாலே..
என் ஆன்மாவும் மகிழ்ச்சியில் திளைக்குதே.. 

உன் பலம்...  நீ அறியாயோ...
பஞ்சபூதமும்... அடங்கும் உன்முன்னே..

உயிர்கொல்லும் தனிமையும்... மிரண்டோடுமே..
உன் கரம் எனை அணைக்கையிலே... 

என் இனிய இசைநாதமே...
நீயே என் கனவு காதலன்...

என் உயிரோடு கலந்த உணர்வே..
நீ இன்றி..  சுழலாது என் உலகமுமே

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: JsB on February 28, 2021, 08:22:28 PM
நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்
நான் உன்னை உருவாக்க விரும்புகிறேன்
என்னுயிரில் கலந்திட்ட இசையே...இசை மழையே...
ஒவ்வொரு நிமிடமும் உன்னையே...
ரசிக்க விரும்புகிறது என் இதயம்...

எனது அனைத்தையும்...
நான் உனக்கே பரிசளித்து விட்டேன்
என்னை தினமும் மகிழ்ச்சி கடலின் ஆழத்தில்
கொண்டு செல்லும் இசையே...


ஆயிரம் இசைக்கருவி ஒலி செய்து ஓய்ந்தாலும்...
என்னுடலில் ஊடுருவி...
என் இரத்த நரம்புகளில் நுழைந்து...பாய்ந்தோடும்
இசைகளுக்கு என்றுமே முடிவில்லையே...


என் இதயத்தில் ஒட்டிக் கொண்டு...
என்னையே சிறகடித்துப் பறக்க வைக்கும்...
இசையே...இசைக்கருவிகளே...
நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று
சொல்ல முடியாத அளவிற்கு
உலக மக்களிடையே இடம் பிடித்து
இந்த உலகத்தையே அசர வைக்குற
இன்னிசையே...
இதய தசையின் இசையே...


உன்னால் மகிழ்ச்சியும் ஒளியும் பெற்று
என்னையும் பிரகாசிக்க வைக்கும்
இசையே...இசையமுதே...
மனித மன வளர்ச்சிக்கு கை கொடுக்கும் நீ ...
மருத்துவனும்...இசைப் புலவனும்...
உன் இன்னிசையின் தன்மையை உணர்ந்திட்டதால்...
மனநோய்கள் பிடித்த நோயாளிகளையும்...பைத்தியங்களையும்...
குணப்படுத்துகிற  இசை மருந்தே நீதானே...
நீ பிரம்மாண்டமான வண்ண ஓவியமாக விரிகின்றாயே...


என் மூளையின் உள்ளுறையின் தலமாஸில் தாக்கும் இசையே...
என் மனதை தொடும் மெலடி இசையே...
இசை கருவியை வாசித்து...அதை கேட்கும் போது
ஒருமுனைப்படும் என் மனம்...
இன்று இசை உலகத்தை ஆளும் உன்னை
என் கவிதை வரிகளால் கொட்டி அலங்கரித்து
இசையால் இசை மீட்டுகின்றேன்
இசைவிரும்பி JERUSHA JSB
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: KoDi on March 01, 2021, 02:07:13 AM
என் உயிரான இசை

கனவிலும் நனவிலும்
கனிவாய் என்னோடு
ஏழிசை முத்துக்களாய்
என் நெஞ்சம் நிறைபவள் நீ

கண்களை ஓய்வெடுக்கச் சொல்லி
நினைக்க நினைக்க நெஞ்சினிக்க செய்து 
கேட்க கேட்க திகட்டாதவளாய்
செவிகளுக்கு விருந்தளிப்பவள்  நீ

சோர்வை நீக்கி மனச்சுமை குறைத்து
நொடிகளில் நெஞ்சில் உற்சாகமூட்டி
கண்களை மூடி செவிகளை திறந்தால் 
இதயம் நுழைந்து  இருட்டடிப்பு செய்பவள்  நீ

என்  மூச்சுகுழலின் இனிய நாதம் நீ
எனது  இதயத்துடிப்பின் ஆதிதாளம்  நீ
குருதியில் கலந்திருக்கும் உயிர்ச்சத்து  நீ
என்  நரம்பில் பாய்ந்தோடும்  மின்சாரம்  நீ

அருவியின் ஆரவார  வீழ்தலில் நீ 
காற்றின்  மெல்லிய  வருடலிலும் நீ 
அகண்ட பள்ளத்தாக்கின் அமைதலில் நீ
முடிவில்லா இவ்வுலக உயிர்ப்பில் நீ

ஐம்புலன்களில்  செவியே சிறப்பென்னும்
சித்தம் கொண்ட பித்தனாய் 
கண்கள் போகும் நிலையானாலும்
செவிகள் வேண்டி நிற்கும்  குருடன் நான்

உன்னால் நான் வாழ்கிறேனா?
என்னால் நீ வாழ்கிறாயா?
கேள்வியின்  விடை எதுவாயினும்
இசையாய் இசைவாய் இருப்போர் நாமே !!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: thamilan on March 02, 2021, 07:24:48 AM
இசையே
நீ இல்லாமல் உலகம் இல்லை
உலகின் ஒவ்வொரு அசைவிலும்
நீயே வியாபித்திருக்கிறாய்
குருடனும் உன்னை அறிவான்
ஊமையும் உன்னுடன் பேசுவான்

மரங்களின் அசைவில்
மணிகளின் ஒளியில்
பறவையர் பாட்டில்
அலைகளின் அதிர்வில்
பச்சைக் குழந்தையின் அழுகையில்
பொக்கை வாய் பாட்டியின் சிரிப்பில் 
எங்கும் நான் காண்பது இசையே

இசை உயிர் நாடி
ஜனித்த நான் முதலில் கேட்டது
அம்மாவின் வளையல் ஒலியின் இசை 
அடுத்தது நான் கேட்டது
அம்மாவின் தாலாட்டு இசை
வளர வளர சில நேரம்
அம்மா திட்டுவது கூட
இசையாகவே கேட்கும் எனக்கு

ஆலயங்களுக்குப் போனால்  அங்கே
மனம் உருக மதி மயங்க
இறைவனை துதித்து பாடும் இசை கேட்டு
சிலையாய் என்னை மறந்து
தென்றல் முகத்தை வருட
இசை எனது மனத்தைத் தொட
மெய்மறந்து நிற்பேன்
வடித்த கல்போலே நான்

இசை கல்லையும் கசிந்துருக்கும்
கல்லான மனதையும் கரைத்து
கண்களில் கண்ணீர் மல்க செய்யும்
பசி மறக்கச் செய்யும்
நோயும் குணமாகும்
மனதை சுண்டியிழுக்கும் இசையால்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: AgNi on March 02, 2021, 09:29:55 PM


கீதங்களே!சங்கீதங்களே !
எங்கு தோன்றினீர்கள் ?
என்று உருவானீர்கள் ?

இந்த பிரபஞ்சம் உருவான முதல் நாள் ...
அண்ட  பிண்டங்கள் ஆதியால் .
அகரம் தோன்றியது ..
இதுவே ஆகாரமும் ஆனதோ ...

உயிர்களின் உருவாக்கம் ...
உன்னதமாய் எழ..
உகாரம் கிளர்ந்து முளைத்ததோ ?

அகரமும் உகரமும் மகரத்தில் ...
பிறழ்ந்து தவழ்ந்து ...
கருக்கள் தோன்றிய அன்றே...
ஓம் காரம் எனும் நாதம் ..
ஓங்கி  ஒலித்து   ஒளிர்ந்து மலர்ந்ததோ?

கரு சிசுவாக உருக்கொண்ட நாள்முதல் ...
கல்லறை உறங்கும் நாள் வரை ..
இசையை கொண்டே இங்கு
அசைகிறது உலகம் !

குழந்தைக்கு தாலாட்டு ...
குமரிக்கு மங்கலப்பாட்டு..
கல்யாணத்துக்கு நலுங்கு பாட்டு ..
கருமாதிக்கும் ஒப்பாரி பாட்டு ...

நாட்டுக்கு நாடு வேறுபாடும் இசை ...
இந்திய இசையோ ...ஐரோப்பிய இசையோ ...
பாரசீக இசையோ ... கிரேக்க இசையோ ..
எகிப்திய இசையோ ...சீன இசையோ ...
இசைக்கு வசம் ஆகாதோர் யார் ?

இந்தியாவில் மக்கள் இந்துஸ்தானியும் ...
கர்நாடகமும் கஸலும்..
கவ்வலியோ கிராமிய இசையோ
அனைவரும் இசையின் அரவணைப்பில்
வளர்ந்த சமூகம் அல்லவா இது ?
தாயின் குரலுக்கு முன் இசை அல்லவோ
நம்மை வளர்த்தது ...
அப்படி எனில்...
இசை தானே நம் முதல் தாய் !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: SweeTie on March 03, 2021, 01:12:22 AM
காலைக்  கதிரவனை   வரவேற்று
குயில்  பாடும் கூ..கூ... இசை 
பசுவை தேடும் கன்று 
ம்மாஆ   ...என கதறும்  இசை
அன்றலர்ந்த  மலர்களில் மொய்க்கும்
வண்டுகளின்  ரிங் .....என்ற ரீங்கார  இசை

மலையில்  உருவான நீர்வீழ்ச்சியின் 
சல   சல   என்ற   ஓசை இசை 
ஆறும்  கடலும்  சங்கமிக்கையில்
எழுகின்ற  ஓசை  இசை   
கடல்  அலைகள்   கற்பாறைகளில்   
மோதி  எழுகின்ற  ஓசை  இசை   

தென்றல்  காற்றின் தொடுகையில்
மூங்கில்கள்   எழுப்பும்  இசை   
பற்றி எரியும்  காட்டு  தீ   எழுப்பும்  இசை 
மழை பெய்கையில்    மண்ணில்  விழும்
நீர்த்துளிகள்   எழுப்பும் இசை   

ஆகாய கங்கையில்   ஏற்படும்  மின்னல் இசை
தொடரும்  இடியோசையின் இசை   
கூட்டை நோக்கி பறக்கும் பறவைகள்
சிறகடிக்கும்   இசை 
யானைகள்   பிளிறும்   இசை  \
சிங்கங்கள்  கர்ச்சிக்கும்  இசை


காலையில்   காபி   தரும் 
அம்மாவின்  வளையோசை இசை
குழந்தையின்  அழுகுரல்    இசை
குமரிப்பெண்ணின்   சிரிப்பொலி   இசை
காதலியின்  சிணுங்கல்  இசை
அவள் காதோர லோலாக்கு அசைந்தாடுவதும் இசை

ஊழிக் காற்றின்   ஊ;......  என்ற  ஓசையும் இசை
ஆழிப்  பேரலையின்    ஆ.... என்ற ஓசையும் இசை
மாரியில்  கனமழையின்  ஓ ...  என்ற  ஓசையும் இசை
அண்டத்தின்  ஓம்காரம்   ம்...... என்பதும்   இசை 
அகிலத்தை    ஆளுவதும்   இசை   
நோய்  பிணியை  போக்குவதும்  இசை
எங்கும்  இசை  எதிலும்  இசை   அகிலமே இசை !!!!
]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 258
Post by: Evil on March 05, 2021, 01:23:07 PM
முத்தமிழ் இயல் இசை நாடகம் ஒன்றில்
கலந்த இசையே...
என்னையும் உன் ரசிகனாக்கிய இசையே...
என்னுயிருடன் கலந்து என்னை ஆள
வந்த இசையே...

நீ ஒருவருக்கு மட்டும் சொந்தம் என்று இல்லாமல்
உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளுக்கும்
சொந்தம் என ஆன இசை அழகியே...
என் மனம் சோகம் எனும் கடலில் மூழ்கினாலும்
சொந்தம் என வந்தணைத்த இசை ரதியே...

நான் கஷ்டப்படும் நேரங்களில் எல்லாம்
என்னை இஷ்டமாய் அணைத்து
செல்லும் இசையருவியே...

வீசிடும் தென்றலாய் வந்து என்னை அங்கும் இங்கும்
சிலிர்க்க வைத்த செந்தமிழ் நாட்டு இசையே...
உன்னை தினமும் கேட்டுக் கொண்டிருக்கும்
என் காதுகளுக்கு ஓய்வில்லையே...

என் இதயம் முழுவதுமாய் நிறைந்திருக்கும்
இசை அரசியே...
உன் இனிமையான இன்னிசை கூடிய இசையாலே...
தினம் தினம் நான் புத்துயிர் பெறுகிறேன்...

நான் சுவாசிக்கும் என் இறுதி மூச்சி வரையிலும்...
உன் அழகினையை இசைப்பதும்...ரசிப்பதும்
என் வேலையாகவே மாறிவிட்டதே...
என்னுயிரான இசையே...