Author Topic: நாளை உலகம் அழியாது ; விண்வெளி ஆய்வாளர்கள் உறுதி  (Read 575 times)

Offline kanmani

மாயன் இனத்தினர் தயாரித்த காலண்டர் முடியும் நாளான 21ம் தேதி உலகம் 100 சதவீதம் அழியாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜோதிடத்தில் பழமையையும் தங்களது வாழ்வியலையும், வானியல் சாஸ்திரத்தில் வல்லமையும் பெற்ற மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட மாயன்கள் காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர்.

இந்த காலண்டர் கி.மு. 3114ல் தொடங்கி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ல் முடிகிறது. முதல் மனித நாகரீக இனத்தினர் தயாரித்த இந்த காலண்டர் படி உலகம் அழியும் என்ற ஒரு பரபரப்பையும் பயத்தையும் கலந்த பீதியை நாகரீகத்தை நன்கு அறிந்த, தேர்ந்த ஜோதிட விதவான்கள் கிளப்பி விட்ட புரளியால் நாளை உலகம் அழிந்து விடும் என்று யாகங்களும், பிராத்தனைகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்தது.

வெவேறு கோணங்களில் தங்களது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எரி கர்களால் உருவான இந்த உலகம் நாளை அழியாது என்று நூறு சதவீதம் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மாயன் காலண்டர் என்பது 1,44,000 நாட்களை கொண்டது. அதன்பின்னர், அந்த காலண்டர் மறுபடியும் சுழற்சிக்கு உள்ளாகும். இணையதளங்களில் உலா வரும் செய்திகளை போல உலகம் அழிய 100 சதவீதம் வாய்ப்பில்லை. மாறாக மனித இனம், மாயன் இனத்தினரின் கூற்றுப்படி, புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறது. அதாவது புதிய நாட்காட்டி சுற்றில் மனித இனம் அடியெடுத்து வைக்கப்போகிறது.

தெளிவாக சொல்லபோனால் பூமியின் இறுதி நாளை மாயன் காலண்டர் குறிப்பிடவே இல்லை. இந்த சுழற்சி முடிகிறது, இதற்கடுத்த தேதி தொடரவில்லை. என்றாவது உலகம் அழியும் என்பதை அறிவியல் ஓப்புகொள்கிறது. ஆனால் 21 ல் உலகம் அழியும் என்பதை கோதிடர்கள் கணிக்கும் படி, எங்களால் கணிக்கமுடியாது என்று அனைத்தையும் கணித்துவிட முடியாது’ என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகம் அழிவதற்கான காரணிகளாக எரிமலை சீற்றம், தீவிரவாதிகள் தாக்குதல், விண்வெளிப்பாறை தாக்குதல், சூரிய காந்தப்புயல், கோள்கள் மோதல் ஆகியவை கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை நாசா விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளவாறு:
கோள்கள் மோதல் என்பது இப்போது நடக்காது. சூரிய குடும்பத்தில் உள்ள சில கோள்கள் வளர்ச்சி குன்றியுள்ளது, ஆனால் அவை பூமியை தாக்காது. அவை அனைத்தும் பூமியின் தடத்திலிருந்து வேறுபட்ட பாதையில் தொலைவில் உள்ளது. மேலும் சில விண்வெளி பாறைகளுக்கும் இதே விளக்கம் தான்.
சூரிய காந்தப்புயல் , இதனால் பூமிக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சூரிய காந்தப்புயல் என்பது வழக்கமான இடைவெளியில் நடந்து வருவதுதான். ஒவ்வொரு 11 ஆண்டுக்கு ஒருமுறை அது அதிகபட்சமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். அந்த நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொழில்னுட்ப பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அப்படி தானே தவிர உயிரினங்களை சூரிய காந்தபுயல் அழிக்காது.

தீவிரவாதிகள் தாக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வேண்டுமானால் நடக்கலாம். ஒட்டுமொத்த உலகத்தையும் அழிக்ககூடிய சக்தி தீவிரவாதிகளுக்கு இல்லை, அவை சாத்தியமே இல்லை.

பல நாடுகளில் வகையான எரிமலைகள் உண்டு ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்காது. அதனால் உலகமும் அழியாது.

துருவ மாற்றம், மனித இனத்துக்கு துருவ மாற்றத்தால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. துருவ மாற்றம் என்பது தற்கால புவியியல் இருப்பிடங்களின் நிலையை மாற்றி அமைக்ககூடிய ஒரு விரைவான நில மாற்றங்கள். அது இப்போது ஏற்படாது அதனால் உலகம் அழியாது. இது சராசரியாக 4 லட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்க வாய்ப்புள்ளது. மேலும் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு துருவ மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை.

மொத்ததில் மாயன் காலெண்டர் படியே போனால், அதன் சுழற்சி முடிந்து மற்றொரு சுழற்சி ஆரம்பமாகும். அப்பட்டமாக காலெண்டர் முடிந்தால் தூக்கி போட்டு புதிய காலெண்டர் வாங்கி வேலையை பார்பதே.