Author Topic: புகை மூளைக்குப் பகை!  (Read 614 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
புகை மூளைக்குப் பகை!
« on: January 09, 2013, 04:07:24 AM »
புகை மூளைக்குப் பகை!


புகைப் பழக்கம் கொடியது. புற்றுநோய், இதய வியாதி என பல பாதிப்புகளை ஏற்படுத்தும். புகைப்பது மூளைத் திறனையும் பாதிக்கும் என்கிறது புதிய ஆய்வு.

ஏபர்டீன் பல்கலைக்கழகம் புகைப்பழக்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரம் பேர் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த வயதுடைய இளைஞர்களுக்கு சராசரியாக மூளையின் I.Q திறன் 101 வரை இருக்க வேண்டும். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த  I.Q. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் விரைவில் மூளை பாதிப்பை அடைகிறார்கள். ஆய்வில் புகைப்பழக்கம் உடையவர்கள் 7 புள்ளிகள்  I.Q திறனை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் சரியான முடிவெடுப்பதில் தவறுகிறார்கள். மேலும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது, ஆரோக்கியமற்ற உணவு களை உண்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆய்வில் 28 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டுக்கு குறையாமல் புகைக்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் 1947-ம் ஆண்டில் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீண்டும் சோதித்துப் பார்த்ததில் அவர்களின் உடல் செயல்பாடுகள் மற்றவர்களைவிட கவலை அளிப்பதாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.