Author Topic: பென்னி குக் என்ற "புண்ணியவான்'  (Read 603 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பென்னி குக் என்ற "புண்ணியவான்'
-------------------------------------------------------------



ஐந்து மாவட்டங்கள் 2.17 லட்சம் ஏக்கருக்கு பாசனம்65 லட்சம் பேருக்கு குடிநீர் -இத்தனையையும் சாதிக்க முடிந்தது, ஒரே ஒரு தனி நபரால். அவர் தான், பென்னி குக் என்ற ஆங்கிலேயர். தமிழக தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின், பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் இங்கிலாந்து பொறியாளர் "ஜான் பென்னி குக்'. இன்று (ஜன.15) இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து, தமிழகத்திற்கு வந்து, ஐந்து மாவட்ட மக்களின் வீடுகளில் "விளக்கேற்றிய' பென்னி குக்கின் சாதனை அளப்பறியது.

இவர், 1841 ஜன.,15ல் லண்டனில் முன்று சகோதரிகள், ஐந்து சகோதரர்களுடன் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, கிழக்கு நோக்கி பாய்ந்துகெண்டிருந்த, முல்லை ஆறு மற்றும் பெரியாறுகளில் இருந்து ஏராளமான தண்ணீர், கடலில் வீணாக கலந்த நேரம் அது. இன்னொரு புறம், பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், தண்ணீர் இன்றி மக்கள் பஞ்சம், பட்டினியால் மடிந்துகொண்டு இருந்தனர். இம்மாவட்டங்களை வறட்சியிலிருந்து மீட்டு, மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த, முல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது.

அணை கட்டுவதற்காக, 1858ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ராணுவ பொறியாளராக வந்தார் பென்னி குக். இவர் முல்லை மற்றும் பெரியாறை ஆய்வு செய்து அதற்கான திட்டத்தை உருவாக்கி, 75 லட்சம் ரூபாய் மதிப்பிட்டு, அணை கட்டும் அனுமதியை ஆங்கிலேய அரசிடம் பெற்றார். மீண்டும், இங்கிலாந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்ற அழைக்கப்படவே, 1869ல் லண்டன் திரும்பினார். ராணுவ சேவை முடிந்து, 1872 ல் இந்தியா திரும்பி, 1874 முதல் அணை கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக், முன்னிலையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பென்னி குக் வழிகாட்டல் படி, பணிகளை பிரிட்டிஷ் ராணுவம் மேற்கொண்டது. கடுமையான தட்பவெப்ப சூழ்நிலை, விஷப் பூச்சிகள், காட்டு மிருகங்கள், காட்டாற்று வெள்ளம் என பல சோதனைகளை கடந்து, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், பெய்த கடும் மழையால், அணை சின்னாபின்னமானது. மீண்டும், சென்னை மாகாண கவர்னர், மற்றும் ஆங்கில அரசிடம் அணை கட்ட நிதி ஒதுக்குமாறு பென்னிகுக் வலியுறுத்தினார். அவர்கள் மறுக்கவே, இங்கிலாந்து சென்று, தனது சொத்துகள், மனைவியின் நகைகளை விற்று, இந்தியா வந்து முல்லை பெரியாறு அணையை 155 அடி உயரம், 15.5 டி.எம்.சி., கொள்ளளவும் கொண்டதாக 1895 அக்.,11ல் கட்டி முடித்தார். அணை நீரை பயன்படுத்திக்கொள்ள, 1886 அக்.,29 ல் சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே, 999 ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

செழித்த மாவட்டங்கள்: அதுவரை, வானம் பார்த்த பூமியாகவும், வறட்சியின் கோரப்பிடியிலும் சிக்கித் தவித்த தென் மாவட்ட மக்கள், முல்லை பெரியாறு அணை நீரால், புத்துயிர் பெற்றனர். பிளந்து கிடந்த நிலங்கள், பாசன வசதி பெற்று, பசுமை போர்வை போர்த்திக் கொண்டன. பசியும், பட்டினியும், ஏழ்மையும் பெருமளவு குறைந்தன. வாழ்வாதாரம் கிடைத்ததால், வறட்சியால் நடந்து வந்த குற்றச் செயல்களுக்கு மக்கள் விடை கொடுத்தனர். தமிழக மக்களின் பசியை போக்கும் புனித பணியில், தங்களையும் இவர்கள் இணைத்துக் கொண்டனர். இத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த பென்னிகுக்கை இந்த பொங்கள் நாளில் நினைவு கூர்வோம்.

(தினமலர் நாளிதழ் 15-1-2013)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்