Author Topic: வரதட்சணை வாங்குபவன் ஆண் மகனா?  (Read 595 times)

Offline Yousuf




வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தை சீனு என்ற சுதாகர், 24, என்பவருக்கும், ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த கோமதி, 21, என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 

அதன் பின் சீனு, வரதட்சணை கேட்டு கோமதியை அடிக்கடி கொடுமை செய்துள்ளனர். கடந்த மாதம், கோமதியின் தந்தை, 10 ஆயிரம் ரூபாய் வரதட்சணையாக  கொடுத்துள்ளார். இருப்பினும், விறகு மண்டி வைக்க இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி அடித்து உதைத்துள்ளார்.

வரதட்சணை வாங்கி வராததால், கோமதியின் மாமியார், நாத்தனார், கணவர் ஆகியோர் அவரை அடித்து, உதைத்து வாயில் ஆஸீட் ஊற்றியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோமதியை உறவினர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல தனியார் மருத்துவனையில் சேர்த்துள்ளனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி கோமதி இறந்துள்ளார்.

சிந்திக்கவும்:  வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்யும் பழக்கத்தை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். வரதட்சணை வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்று இரும்பு கரம் கொண்டு இந்த கொடுமையை ஒடுக்க வேண்டும். பெண்களிடம் வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்யும் பழக்கம் இந்தியாவில்தான் இருக்கிறது.  உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த பழக்கத்தை காண முடியவில்லை.

பெண்களிடம் வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்பவன் மிக கேவலமானவன், அருவருப்பானவன், ஆண் மகன் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவன். இந்த பேடிகளை பெண்கள் புறக்கணிக்க வேண்டும். வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய பெண்கள் சம்மதிக்க கூடாது. இந்த கேவலமான இழி பிறவிகளுக்கு எதிரான தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்மகனும் வரதட்சணை வாங்குவதில்லை என்று உறுதி மொழி எடுக்க வேண்டும்.
« Last Edit: March 23, 2013, 10:07:57 PM by அமீர் »