Author Topic: அடிக்கடி அழுறவங்களா நீங்க? சரியான ஆளுதாங்க...  (Read 594 times)

Offline kanmani

உணர்ச்சிகளை அடக்கி வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த உலகில் நிறைய பேர் உணர்ச்சிவசப்பட்டவர்களாக தான் இருக்கின்றனர். அதிலும் சிலருக்கு சந்தோஷத்துடன் இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி கண்களில் இருந்து கண்ணீர் வரும். அவ்வாறு அழுபவர்கள் அனைவரும் மனதில் குழந்தை போன்றவர்கள், எதையும் மனதில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் என்று சொல்லலாம்.

மேலும் அத்தகையவர்கள் மனதளவில் மிகவும் ஆரோக்கியமானவர்கள், மேலும் நேரடியாக எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்திவிடுவார்கள். அழுவது என்பது உண்மையான உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமான ஒன்று என்று சொல்லலாம். ஆனால் மனதில் இருக்கும் ஏதாவது கஷ்டத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் இருந்தால், மனதில் ஒருவித அழுத்தம் ஏற்பட்டு, உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் அவ்வாறு அழுகை வந்தாலும், அதனை சரியாக வெளிபடுத்தாவிட்டால், தலைவலி, மனதில் வலி, இரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்றவை ஏற்படும். எப்படி ஒரு அறைக்கு கற்றோட்டம் மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் உடலுக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்பதும் முக்கியமானது. சொல்லப்போனால், அழுவதால், உணர்ச்சி வெளிப்படுவதோடு, ஒருசில நன்மைகளும் உண்டாகின்றன.

* அழுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. கண்ணீர் ஒரு இயற்கையான ஆன்டி-பாக்டீரியல் பொருள். இவை வெளிவரும் போது கண்ணீரில் உள்ள லைசோசைம், கண்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

* பிரச்சனைகள் ஏற்படும் போது அழுவதால், அந்த பிரச்சனையை சமாளிப்பதற்கான தீர்வுகளானது, அழும் நேரத்தில் கிடைக்கும். ஏனெனில் பிரச்சனையின் போது மனம் பதட்டத்தில் இருக்கும். ஆகவே அந்த பதட்டத்தால் அழும் போது, அது மனதை ரிலாக்ஸ் செய்து, நிறைய யோசிக்க வைக்கும்.

* எப்போதும் கஷ்டத்தை நினைத்துக் கொண்டு, மனதிற்கு அழுத்தம் தருவதை விட, அழுது விடுவதால், மனம் லேசாகி, மன அழுத்தம் குறைந்து, மனம் அமைதியடையும்.

* சில நேரங்களில் அதிக அன்பின் காரணமாகவும், மனதில் இருக்கும் அன்பை பேச்சின் மூலம் வெளிப்படுத்த முடியாது. அந்த நேரம் அந்த அன்பானதும் ஆனந்த கண்ணீராகத் தான் வெளிவரும். சொல்லப்போனால் அன்பினால் வெளிவரும் ஒருதுளி கண்ணீர், ஆயிரம் வார்த்தைகளை விட மதிப்பை உடையது.

* காதலுடன் சண்டை போட்டு விட்டு, அவரை சமாதானம் செய்ய முடியவில்லையா? அல்லது அவருடன் விவாதம் செய்ய முடியவில்லையா? அப்போது வேறு எதுவும் செய்ய வேண்டாம். லேசாக கண்ணீர் விட்டாலே, அனைத்து சண்டைகளும் நீங்கி, இருவரும் சமாதானமாகி விட முடியும்.