Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 259  (Read 1852 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 259

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: March 16, 2021, 10:54:32 PM by Forum »

Offline AksHi

  • Newbie
  • *
  • Posts: 45
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அவளை பார்த்த அந்த நொடிகளில் ..
இமைக்க மறந்து தான் போயின என்  விழிகள்............
அழகிய தேவதையாய்  அவள் என்  கண்களுக்கு.........
மழலையின்  முகத்தில் உதிக்கும்  புன்னகையை .......
அவள்  முகத்தில்  பார்த்த போது
பறி போனது  நான் மட்டும் அல்ல ....என்  மனதும் தான் ................
 
 அவளது விழிகளை உற்று நோக்கிய  போது .....
அவள்  விழிகளின்  தேடல்களில்
என்னையும்  நான்  தொலைத்தேனே .....

குழந்தையை  போல்  வான வில்லாய்  தோன்றிய அவள் அழகில் ..
பெண்ணான  நானே  உறைந்து   தான்  போனேன்  ....

கற்கண்டாய்  இனித்த ,,,
கள்ள  கபடமற்ற   அவள் பேச்சில் ...
என் மனமும் தான் கரைந்து  போனது ...

ஆண்களின்  வாயில்  இருந்து  உதிக்கும்  வார்தைகள்  மட்டும் தான் ...
பெண்களுக்கு  வசந்தமாய்,....   இனிமையாய்  தித்திக்குமா  என்ன ?


அவள் என்  கண்களுக்கு  இனிய  தோழியாய் ...
பாசமுள்ள  தங்கையாய்  .....

ஒரு நல்ல தோழியாய் ...ஆவலுடன் சேர்த்து  ..
இந்த உலகத்தை நடை போட ஆரம்பித்தன
என்  கால்கள் ......
 ஒரு சகோதரியாய் அவளுடன்  நொடிகளை  கழிக்க  ஆயத்தமானது  என்  இதயம் ....
என்  வாழ்வில்  நான் பெற்ற  இன்பத்தை மட்டுமே ...அவளுடன்  பகிர்துகொள்ள
தயாரானது  என்  இதழ்கள் ........

நான் பெற்ற புதிய  உறவுடன் ...
வாழ்க்கையில் ஆவலுடன் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தன.. என்  கால்கள் ....
இல்லை இல்லை
என்  இனிய  தோழியின் ..கரம் பிடித்து
இறைவன்  எனக்கு  கொடுத்த ..அழகிய  இன்பமயமான   வாழ்க்கைகுள்  ..
அவளை அழைத்து கொண்டு
அவள் கரம் பிடித்து..அவள் பின் வர ..
 நம்பிக்கையுடன் முன் செல்ல ஆரம்பித்தன என்  கால்கள்.....

அப்போது  என்  மனம்  அறிந்திருக்க வில்லை ...
நான் கை கோர்த்து   அழைத்து  செல்வது ..
குழந்தை  வடிவில்  தேவதையாய்  வந்துதித்த ..
மனித நேயமற்ற  கொடூர  அரக்கியை  என்று ...

நான்  என்னையே  ஏமாற்றி  கொண்டதற்காய்   நான்  கொடுத்த விலை ....
 என் இன்பமான  வாழ்கை....
விலை  மதிப்பற்ற என்  காதல்.....
என் நிம்மதி

நிதர்சனமான  உண்மைகளை  என்  மனம்  உணர  முன்னரே ...
காலமும்  கடந்தது ....
யாவும்  முடிந்தது ....

ஒரு நொடியாயினும்  யாரேனும்  எனக்கு  உணர்த்தியிருந்தால்...
ஒரு சிறு  கோடிட்டு  ஆயினும்  காட்டி  இருந்தால் .......
இன்று  என்  நிலை  இப்படி  இருந்திருக்குமா  என்ன ?
என்  வாழ்கை  இப்படி  உருகுலைத்திருக்குமாயென்ன ?
இறைவா ....
என்  மனதின்  வலிகளையும்  ரணங்களையும்  நீ மட்டுமே  அறிவாய் ......

மூடிய என்  விழிகளில் இருந்து ...என்னை மீறி  உதிர்த்த  கண்ணீர்  துளிகள் ..
என்னை  சுடுகின்றன ....

போனவை சிலவை ..என்றும்  திரும்பிவர  போவதில்லை....

இவ் அண்ட  சராசரத்தில்
ஒவ்வொருவரின்  வாழ்க்கையின் பின்னாலும் ..
இறைவன்  நமக்காய்  தீர்மானித்து  எழுதிய கடமைகளும் .வாழ்க்கையின்   அர்த்தங்களும்,வாழ்க்கையின் உண்மைகளும் இருக்கின்றன  போலும் ...

ஆம் ...போனவை இனி  போகட்டும்.......
வருபவை  இனி  வாழட்டும் .........
மனித நேயம்  மலரட்டும் ...
தெய்வங்களும்  இம்மண்ணில்  மனிதராய்  வந்துதித்து...
 இம்மனித  வாழ்க்கையை ....வாழ்ந்து  பார்க்கட்டும்.. ...
 
 யாரின் துணையும் இன்றி
தனியே  என்  கால்கள்  பயணிக்கின்றன
என்  வாழ்க்கையின்   தேடலை  நோக்கி .......

 





 
« Last Edit: March 07, 2021, 01:31:58 AM by AksHi »

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை
நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும்
நம் இருவரின் உன்னத உறவே...
விலைமதிப்பில்லாத இனிய தோழியின் உறவே...


உன்னை பற்றி பேசினாலே...
என் முகத்தில் புன்னகைப் பூ பூக்கின்றது
தோளோடு தோள் நின்று பேசும்
தேனிலும் இனியவளே....
நான் தேடாமல் கிடைத்த நட்பே...
நீ என் வாழ்வில் கிடைத்தது பெரிய வரமே...
எத்தனையோ மகிழ்வினைத் தந்து அழகூட்டும் தருணங்கள்
உன்னால் எனக்கானதை ஒருநாளும் மறவேனே...


துன்பம் துடைப்பவன்'உடுக்கை இழந்தவன் கைபோல
ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்பது போல
என் அன்பு தோழி முர்னாவின் உண்மை நட்பிற்கு
என்றுமே தலை வணங்குகின்றேன் நான்...



குணத்தாலும் குணாதிசயங்களினாலும் சிறந்தவளே...
வயது, மொழி, இனம், நாடு என
எந்த எல்லைகளும் இன்றி,
என்னையும் அன்பு செலுத்தி....
நன்றாக புரிந்து வைத்திருக்கும்
என் அன்பின் இலக்கணமே...


கஷ்டம் வரும் போது எனக்கு கை கொடுத்த நட்பே...
எதையும் எதிர்பாராமல்...
எனக்கு வரும் துன்பத்தை துடைக்கும் அழகிய நட்பே...
கல்லுாரி காலங்களில் உணவுக்கு தவித்தபோது
சிரமம் பாராமல் சமைத்து எனக்கு
உணவூட்டிய தோழியின் நட்பே...
என் லட்சியத்துக்கு உற்ற துணையாக இருக்கும் நட்பே...


கற்பைப் போலவே நம் நட்பும் புனிதம் தான்...
என்பதை உன் நட்பின் மூலம் உணர்த்துக் கொண்டேன்
என்னுயிர்த் தோழியே...
சம்பாதித்து இருக்கும் செல்வங்கள் எல்லாம்
ஒரு நாள் நான் இழந்து  நின்றாலும்....
என் மீது நீ வைத்த நம்பிக்கை மட்டும்
என்னோடு இருந்து ஆறுதல் படுத்தி செல்லுமே... 


இப்படியொரு உண்மையான  நட்பு இருக்கையில் ...
எந்த நச்சு நண்பர்களின் நிழல் கூட...
என்னை பின்தொடராது தோழியே...
உயிருள்ள வரை உன் நட்புறவுடன்...
தொடர்வேன்... வளர்வேன்... உயர்வேன்...



  என்றும் அன்புடன்,
  உன் உயிரிலும் பாதி
  Jerusha JSB



Offline thamilan

பள்ளிப்பருவம்  முதல்  பருவ  வயதுவரை
ஒன்றான  எனது உயிர்  தோழியே
நாளில்  பாதிநாள் நீயும் நானும்
ஒன்றாய் தானே வளர்ந்தோம்

நீ சிரித்தால் நானும் சிரித்தேன்
நீ அழுதால் நானும் அழுதேன்
உன் விறல் பிடித்து
உன் தடம் பதித்து
நானும் நடந்தேன்
எனக்கென்று தனியாக எந்த
விருப்பு வெறுப்பு இருந்ததில்லையே

நான் விரும்பியவனை
நீயும் விரும்பினாய் என்று விட்டுக்கொடுத்தேன்
படிப்பில் கூட என்னை விட நீ மட்டம்
இருந்தாலும் உனக்காக நானும்
அதிகம் மார்க் வாங்கினதில்லையே
உன் புரத்தைப் பார்த்து நட்பு கொள்ளத் தெரிந்த எனக்கு
உன் அகத்தைப் பார்க்கத்  தெரியவில்லையே 

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பர்
பேயே  பெண்ணானால்? 
பெண்களுக்கே உரித்தான
ஈகோ பொறாமை நயவஞ்சகம் எல்லாம் உரித்தான
பேய் நீ என
பின்னாளில் உணர்ந்து கொண்டேன்

உன்னை விட நான் அழகு
உன்னை விட நான் புத்திசாலி
பார்க்கும் யாரும் பேசத் துடிக்கும்
வசீகரம் கொண்டவள் நான்
இதெல்லாம் இறைவன் எனக்கு கொடுத்த கொடை
அதற்கு நான் என்ன செய்வேன்
உனக்காக உடையை விட்டுக்  கொடுக்கலாம்
உணவை விட்டுக் கொடுக்கலாம் - ஏன்
எனது ஆசைகளைக் கூட விட்டுக் கொடுக்கலாம்

எனது அழகையும் அறிவையே
எதைக் கொண்டு அழிப்பது ?
நண்பி என்று நம்பித்தானே
உன்விரல் பிடித்து நடந்தேன்
எங்கே சந்தர்ப்பம் வரும்
எப்போது பிடித்து தள்ளலாம் என
என்பின்னே நடந்துவரும் பேய் நீ என
உணர்ந்து கொண்டேனடி   :( :( :(

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !

ரத்த பந்தம் இல்லை !
உற்ற சொந்தமும் இல்லை !
ஆனாலும் நம் பள்ளி பருவ முதல்
சாலை ஊர்வலம் போகும் நாள் வரை
கூட வருபவர்கள் தான் தோழிகள் !

குழந்தை பருவத்தில் விளையாட்டு தோழி !
பள்ளியில் வகுப்பு தோழி !
கல்லூரியில் ஜாலி தோழி !
வேலையில் ஜோலி தோழி !

பாதையில் பார்த்த பழைய  தோழி !
பேருந்தில் சந்தித்த பயண தோழி !
இணைய தளத்தில் இணக்கமான தோழி !
இசை  வகுப்பில்   லயமான தோழி !

நூலகத்தில் பழைய தோழி !
அடுத்த வீட்டு அன்பான தோழி !
என்று நூறு பேர் வந்தாலும் சென்றாலும்
நமக்கு என வாய்ப்பது  ஒரு சிலரே !

மனதின் பாரத்தை இறக்கி வைத்தால்
எதையும் தாங்கும் சுமை தாங்கிகள் !
ஆறுதல் பேசவும் தேறுதல் கூறவும்
அவளின்றி வேறு யார் என்று
நினைத்தது   ஒரு காலம் !
ஆனால் ...
துரோகங்களும் சுயநலன்களும் மிகுந்த
துரதிஷ்ட உலகம் அல்லவா இது !
யாரை நம்புவது !யாரை  விடுவது !

ஆண்டு கணக்காக பழகினாலும்
கூடவே இருப்பவள் என்று நம்பினாலும்
சுய ரூபம் காட்டத்தானே செய்கிறார்கள் !
தேவதை என போற்றினாலும் ...
தேவை இல்லை என்று தானே விலகுகிறார்கள்!

ஒதுக்கலும் ஒதுங்களும் ஒன்று இல்லையே !
பழகளும்  விலகளும்     புதிதும் இல்லையே !
புரிந்து கொள்ளா  முடியா உறவுகள்
பரிந்து பேசுவதும் இல்லை !
வந்து விட்ட தனிமைக்கு  என்றுமே
தனியாக போக விரும்புவதும் இல்லை !

இங்கு பெண்ணுக்கு பெண்ணே எதிரிகள் !
வாழ்க சர்வதேச மகளிர் தினங்கள் !
« Last Edit: March 08, 2021, 10:03:53 PM by AgNi »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
நம்பிக்கையே வாழ்க்கை என்பர் பெரியோர்கள்...
நோக்குவோர் அனைவரும் நல்லவராக புலப்பட
எப்படி புரிந்து தெளிவது? யாரை நம்புவது?
நான் திணறிய தினங்களில்.. நீயும் என் கைப்பிடித்தாய்..

வட்டில் சோறு அள்ளித்தின்ன தெரியாத நாட்கள்...
குளிர்நீரில் நீராடி.. தலைவாரி பின்னலிட  அறியாத நாட்கள்..
அக்காக்கள் யார்?...  டீச்சர் யாரென புரியாத நாட்கள்..
திரு திருவென குழம்பி தவிக்கையில் என் கைபிடித்தவளே..

அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமரியாத என்னை..
அரவணைத்து... அன்னையென காத்தவள் நீயே...
கீரி ஸர்ப்ப சண்டை பார்க்க ஓடிய என்னை...
கண்களாலே மிரட்டி கட்டிபோட்டவள் நீயடி...

நமக்குள் உதித்த உறவின் அர்த்தம் அறியேன் நான்.
எனை எனக்கு உணர்த்துகையில் தாயானாய்...
சமூக அறிவுகள் கற்பிக்கையில் தந்தையானாய்..
என் மௌனத்தின் பொருள் உணர்வதில் சகோதரி ஆனாய்...

உலகின் நல்லவைகளை புரிந்து ஏற்றுக்கொள்ளவும்...
தீது எதுவென அறிந்து விலகி பயணிக்கவும்...
தன்னிச்சையாக வாழும் நெறி உணர்த்தியவளே..
நீயே... நீயே.... என் ஆதி... ஷிவா.... நீ.......

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்..  வாழ்வெனும் நதியில்
துள்ளி திரியும் மீன்களாய்... நாம்  கை கோர்த்த நாட்கள் அறியோம் 
என்றோ! தொடங்கி... இன்றும்  தொட்டு தொடர்கின்றது..
எதுவரை நீளுமோ.. ஓர் ஓடத்தில்.. இரு துடுப்புகளாய்....

Offline SweeTie

பாசத்தை  அள்ளிக்  கொட்டும்   
சாகசக்காரி  அவள்
இனிக்க இனிக்க பேசுவாள்
இரவல்  வாங்கியும்  பேசுவாள்
பலதும் பத்தும்   பேசுவாள்
பக்கத்து வீட்டு சம்பவமும் பேசுவாள்

ஓடிவந்து   உதவியும்  செய்வாள் 
செய்த உதவியை     ஊருக்கும்  சொல்லுவாள்
நண்பி  என்று நம்பி    சொன்னவற்றை 
சற்றும்  பிசகாமல்   சகலருக்கும்    பறைசாற்றி
சந்தோஷத்தில்  தன்னிலை  மறப்பாள்

துன்பத்தில்   துவளும்   வேளையில் 
 கைகொடுப்பாள்   என்றெண்ணுகையில்
காலையம் வாரிவிட்டு    காணாமலே சென்று
இன்பத்தில்  புரளும்    ராட்சசி 
மற்றவர்  மனசாட்சி   விற்று  அவள்
துயரம்   துடைக்கும்  வித்தகி
   
நட்பெனப்படுவது  எதிர்பார்ப்பின்மை   
துயரம்   வரும்கால்   துவண்டு   விழுகையில்
தூக்கி அணைத்து  தட்டிக்  கொடுப்பது
வேறுபாடின்றி கூடவே  இணைந்து நின்று   
காத்து பேணும்  நிலை  நட்பு 
தவறென தெரிந்தால்    கண்டித்து   
திருத்துவதும்   நட்பின்   கடனே 

நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும்
பேதைகள் நட்பு தேய்பிறைபோல் தேயும்
தன்னலம் மட்டுமே  வாழும்  இவ்வுலகில்
தோழமை கூட   இன்று    அந்நியனே !!!!!