Author Topic: ~ ஈபிள் கோபுரம் ~  (Read 2919 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218389
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ஈபிள் கோபுரம் ~
« on: July 25, 2012, 03:47:31 PM »
ஈபிள் கோபுரம்



பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரம் தொழிநுட்பரீதியில் ஆர்வமூட்டுவதாகவும் கலைஞர்கள் பார்வையில் கற்பனையை தூண்டுவதாகவும் சாமானியர்களின் சிந்தனையில் ஆச்சரியத்துக்கு உரியதாகவும் விளங்குகிறது.


இது பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக விளங்குவதோடு பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகவும் உயரமான கட்டிடமாகவும் இதுவரை இருக்கிறது. உறுதியான இரும்புகள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடம் என்றாலும் நொய்வான இழைகளால் பின்னப்பட்டிருப்பது போல தோன்றுவது இதன் கவர்ச்சிக்கு ஒரு காரணம்.


வரலாறு

பிரெஞ்சு புரட்ச்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் அங்கமாக 1889 இல் உலக கண்காட்சி விழா(Exposition Universelle) நடைபெற்றது. இது அந்த விழாவிற்கான நுழைவாயிலாக வளைவாக கட்டப்பட்டது.

1887 இல் ஜனவரி மாதம் இதன் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு 1889 மார்ச் 31 ஆம் திகதி கோபுரப்பணி முற்றுமுழுதாக முடிவடைந்து தொடக்கவிழா நிகழ்ந்து பின்னர் மே 6 இல் திறந்துவிடப்பட்டது . இப் பணி தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் கோபுரத்தின் அத்திவாரம் முழுமையாகவே எழுப்பப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கு மேல் கோபுரம் அமைக்கும் இரும்புக்கட்டுமானப்பணி கிட்டத்தட்ட 21 மாதங்கள் நீண்டது.

தன்னால் கட்டப்பட்ட இந்த கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபிள் (Gustave Eiffel) அனுமதி பெற்றிருந்தார். இது தொடர்புகளுக்கு உதவியாக பெறுமதிமிக்கதாக இருக்கும் என்பதால் இதை தொடர்ந்தும் அங்கே நிறுத்தி வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை கட்டும் போது கவர்ச்சியாக இருக்காது என்று மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. ஆனால் இப்போது இது உலகில் கவர்ச்சிகரமான கட்டிடங்களில் ஒன்று. 1930 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் கிறிஸ்லெர் கட்டடத்தை (Chrysler Building)கட்டும் வரை இதுவே உலகின் மிகப்பெரிய கட்டடமாக இருந்தது.


வரலாற்று நிகழ்வுகள்

1912 இல் ஒஸ்ற்றியாவில் பிறந்த பிரான்ஸ் ரீசெல்ட் (Franz Reichelt) தான் செய்த பரசூட்டை பரிசோதிக்க ஈபிள் கோபுரத்தின் 60 மீட்டர் உயரத்தில் இருந்து பாய்ந்து இறந்தார்.

1940 இல் இரண்டாம் உலக யுத்தத்தின் போது சுவஸ்திகா கொடியை ஏற்றுவதற்கு ஜெர்மானிய படைகள் முயன்றன .அது மிகவும் பெரிதாக இருந்ததால் சில நேரத்தில் காற்றில் பறந்துவிட்டது. பின்னர் ஒரு சிறிய கொடியை ஏற்றினர்.

அடோல்ப் ஹிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தின் போது பாரிசுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் 1792 படிகளையும் ,ஏறியே உச்சிக்கு செல்லட்டும் என பிரெஞ்சுகாரர்கள் அந்த உயர்த்திகளின் கம்பியை அறுத்து செயலிழக்க செய்தனர். அந்த யுத்த சூழலில் உதிரிப்பாகங்களை பெறுவதும் மிக கடினமாக இருந்தது. கடைசி வரை ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டு சென்றார். ஆனால் ஹிட்லர் சென்ற சில மணி நேரத்திலேயே மீண்டும் உயர்த்தி வேலை செய்யத்தொடங்கியது.

அதனால் தான் இப்போதும் "ஹிட்லர் பிரான்ஸை கைப்பற்றினார் ஆனால் அவரால் ஈபிள் கோபுரத்தை கைப்பற்றமுடியவில்லை என கூறுகின்றனர்.

1957 இல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வானொலி அலைவாங்கி (அண்டெனா)பொருத்தப்பட்டது.

இந்த ஈபிள் கோபுரத்திற்கு உயிர் கொடுத்து நீண்ட ஆயுளையும் உருவாக்கி தந்த ஈபிள் (Gustave Eiffel)அவர்கள் 1923 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 அன்று அகால மரணமடைந்தார்.