FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on February 03, 2018, 11:43:46 PM

Title: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: Forum on February 03, 2018, 11:43:46 PM
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்


எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 09.02.2018  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: MaSha on February 04, 2018, 01:23:21 AM
என் விழிவானத்தில்
உன் முகநிலவு தோன்றாத போது
இதயத்தில் இருட்டின் பிரவாகம்

உன் சுவடுகளே தழும்பாகிப் போனதால்
பிரிவுகளே ரணங்களாகி
ரத்தம் கொட்டுகின்றன

சுதந்திர நதியாய்
 சுற்றிக் கொண்டிருந்த என்
இதயம் எப்படி உனக்குள் சங்கமித்தது

உனது ஞாபகக் காற்றில்
முகம் பதித்து பதித்து
பரிமளிக்கும் என் கவிதை பூக்களை
உனக்கு காணிக்கையாக்குகிறேன்

இந்தப் பூவின் இதழ்கள்
சுமந்திருப்பது கற்பனை மட்டுமல்ல
என் கண்ணீர் துளிகளையும் தான்

உன் பார்வையில்
கரைந்து போவதத்திற்கும்
உன் புன்சிரிப்பில்
புதைந்து போவதற்கும்
என் மனம் ஒரு யாகமே நடத்துகிறது

எனக்குள் நானே எரிவதெல்லாம்
உனக்குள் ஒரு தீபமாய்
பிரகாசிக்கத்தான்
எனக்குள் நான் பிரவகிப்பதெல்லாம்
உனக்குள் ஒரு நதியாக
பெருக்கெடுக்கத்தான்
எனக்குள் நான் புஷ்பிப்பதெல்லாம்
உனக்குள் ஒரு மலராக
மணக்கத்தான்

எனக்குள் நீயே
ஸ்வரங்களாக ஒலிக்காத போது
என்னிடம் இருக்கும் வீணைகளும்
ஊமைகளாகவே    இருக்கும்

உன்னைப் பார்க்காத சோகத்தில்
எனக்கு மோதிரம் கூட
விலங்காகி விடுகிறது   
சந்திக்கும் போதோ     
உன் மெளனம் கூட
சங்கீதமாய் இனிக்கிறது

உன் உதடுகளின் ஓசையை விட
உனது பார்வையின் பாஷைகளையே
நான் விசுவசிக்கிறேன்
அந்த மெளன பாஷைகளே
ஒரு காவியத்தின் எழுத்துக்களாய்
இதயத்தில் விழுகின்றன 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: thamilan on February 04, 2018, 06:30:33 AM
எதனால் நான்  ஈர்க்கப்பட்டேன்
அர்த்தமின்றி  நானாக சிரிக்கிறேன்
யாருமின்றி தனிமையுடன் கதைக்கிறேன்
காரணமின்றி கவலையில்   அழுகிறேன்
ஆகாயத்தில்  அந்தரத்தில் மிதக்கிறேன் 

வண்ணக் கனவுகளாய்
என் எண்ணங்கள்
நெஞ்சு நிறைய மகிழ்ச்சி
கண்கள் நிறையக் கனவுகள்

பார்க்கும் பொருளெல்லாம் நீ
பேசும் வார்த்தை எல்லாம் உன்  பெயர்
உன்னை மட்டும் சுற்றி சுற்றி
விண்ணில் பறக்கும் எனது எண்ணங்கள்

உன்னையும் என்னையும் தவிர
உலகத்தை மறந்தேன்
உன் புன்னகைக்கு அர்த்தம் தேடி
அகராதிக்குள் அலைந்தேன்
சுலபமாக சிரித்துச் செல்கிறாய்

கொஞ்சம் வெட்கத்தோடு
கொஞ்சலாய், கொஞ்சமாய்
உதடு பிரியாமல் சிரித்து
நிறையவே என்னை மயக்கி விட்டாய்
உன் கொஞ்சல் சிரிப்புக்கு என்னை
கெஞ்ச வைக்கிறாய்

உன் புன்னகை முத்துக்களை சேகரிக்கிறேன்
என்று சொல்ல
நான் பித்தனல்ல
உன் புன்னகையின் அர்த்தம் தெரியாமல்
நிற்கும் பக்தன்

ஒரு முறையேனும்  என்னைப்பற்றி
நீ யோசித்திருந்தால்......
ஒரு முறையேனும்
உன் பெண்மையை நான் இடரியிருந்தால்......
ஒரு முறையேனும்
என்னை பார்த்து நீ வெட்கப்பட்டிருந்தால்......
ஒரு முறையேனும்
என் நினைவுகள் உன்னை பரவசப்படுத்திருந்தால்.....
ஒரு முறையேனும்
என்னைப் பார்க்கவேண்டும் என நினைத்திருந்தால்.......
ஒரு முறையேனும்
என் நினைவுகளுடன் நீ விழித்தெழுந்தால்.....
சத்தியமாக உன்னுள் நான் 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: VipurThi on February 04, 2018, 10:39:29 AM
சொல்லிடும் முன்பே
தேகம் சில்லிடும் காதலாலே
விண்ணிலே கால்கள் கொண்டு
நானும் மிதக்கிறேன் இறகு போலே

வரைந்திட்ட வானவில்
அவனிடம் என்னை
சேர்த்திடும் சாலையாக

சிதறிடும் விண்மீன்கள்
நான் சேர்த்து வைத்த
முத்தங்களாக

நனைத்திடும் மழைத்துளிகள்
எனை அணைத்திடும்
கைகளாக

ஓடிடும் நீரோடையோ
எனை விழச் சொல்லும்
அவன் விழிகளாக

பார்க்கும் முகமெல்லாம்
இவன் முகம் போட்ட
முகமூடிகள்

வாய் மொழியால்
காதல் மொழி சொல்லத்தெரியா
பேதை இவள்

விழியோரம் கண்ணீர்
மனதோரம் சாரல்
இரண்டுக்கும் இடையிலே
விடை தேடி  என்றும்
காத்திருக்கும் என் காதலே...


காதல் மொழி பேசிக்கொண்டிருக்கும் FTC
நண்பர்களுக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்


                           **விபு**
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: JeGaTisH on February 04, 2018, 06:57:21 PM
இருவர் இணைகையில் இருமனங்கள் ஒன்றாகி
காதல் என்னும் கருவாக .
உருவாகி காலங்கள்  உருண்டோட 

காதல் என்னும் பெயரில்  உண்டான  காயங்கள்
மனதில்  ஏற்பட்ட வலிகள்    தெரியாமல்
 சிரிக்கிறேன் என் கவலையை மறந்து.

என் காதல் பிடிக்காது   போனாலும்
என்னை  விரும்பாது போனாலும்
காதலைக்  காயப் படுத்த நினைக்காதே .

இதயம் எத்தனை முறை துடிக்கிறதோ
அத்தனை முறை நான் உன்னை நினைப்பது
என் காதலுக்கு மட்டும் தான் தெரியும்

கவி எழுதுவதால் நான்  காதலால்  நொறுங்கியவனல்ல   
காதலின் வலியை  அறிந்தவன் .
கவிதைகளில் கண்ணீரால்  புரிந்தவன்..

காதலி ஆகிடும் பெண்ணின்  கனவுகள்  ஆயிரம்
காதலன் புரிந்துகொண்டால் காதல் சிறக்கும்
அவள் கனவுகள்  என்றும் வாழும் ...

வெறுங் காலில் நடக்கும்போது  சூரியன் கூட சுட்டதில்லை
நீயின்றி  நடக்கையில்  என்  தனிமை சுடுகிறது
என்  மனமோ  கொதிக்கிறது .

என்னை ஈர்த்தது உன் நற்குணம்
என்றும் உன்னை நினைக்கும் என் மனம்.
காதல்  சாவியினால் என் இதயத்தை திறந்திடு
என்னுள் காண்பாய் காதலின் தீபத்தை

உணவு இருந்தும் பசிக்கவில்லை
உறக்கம் இருந்தும் கண்ணுறங்கவில்லை
என் மனமோ என்னிடம்  இல்லை.

மனம்  தளர்ந்து  உடம்பு சோர்ந்து  வாடிவிடாதே !
 உறவுகள் முன்னே உன் கரம் பிடிப்பேன்
உன்னை எண்ணியே வாழும் உன்னவன்.

என் கனவில் ஒரு அழகு தேவதையை உருவாக்கி
அவளுக்கு நிலா என பெயர் சூட்டி அவளை நினைத்து
கவிதைகள் எழுதுகிறேன்..இக் கவியும் அவள் பாதத்திற்கே .....


     அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: ரித்திகா on February 05, 2018, 11:30:04 AM
கார்மேக கண்ணனின்
புல்லாங்குழல் இசைக்குத்
தென்றலும் நடனம் ஆடிடுமே...   
நளினம் கொண்டு மேகங்களைத் 
தழுவிச் செல்கின்றது ....

இரவின் நிறம் கருமையில்
கார்மேகங்கள் போட்டி போட்டு
மூடி மறைக்கையில் ஒற்றை விளக்காய்
ஜொலித்திடும் பௌர்ணமி நிலவு ...

ஒற்றையில் ஜொலித்திடும்
பௌர்ணமியை ஒற்றையில்
விட்டிடாமல் சுற்றிவளைத்திடும்
நட்சத்திரங்கள் போல் ...

என்னை தனிமையில்
விட்டிடாமல்
சுற்றிவளைத்திடும் உந்தன்
நினைவுகள் என்றும் மினு மினுத்திடும்
நட்சத்திரங்களாய் என் நெஞ்சில் ...

உந்தன்  நினைவுகளைச் சுமந்து
எந்தன் கனவுகள் பட்டாம் பூச்சியாய்
இறக்கை முளைத்துப்
பறக்கின்றன .....

உந்தன் அளவில்லா காதல் ...
அது ஆழ்கடலினும் ஆழமானது...
அதில் முத்தெடுக்கச் சென்று...
மொத்தமும் முழ்கினேன் நான்...

நான் நீ இன்று நாமானோம்....
விரலோடு விரல் கோர்த்து...
விழிகளில் காதல் பொங்க
பேசிய வார்த்தைகள் அனைத்தும்
நம் காதலின் சரித்திரமாக....

சரித்திரங்கள் பல இருப்பினும்
சிறு சிறு சர்ச்சைகள் 
இருந்திடும்...
தங்கப் பேழையாயினும்
விரிசல்கள் விழத்தான் செய்யும்...

சினம் கொண்டு சண்டை
போடுகையிலும் - செல்ல சண்டையென
மாறிடுமே... விரிசல் விழுந்திடுமேன
எண்ணுகையில் - இருவரிடையில்
நேசமும் பாசமும் அதிகரித்தது
தான் மாயமே ....

எந்தன் உணர்வுகளில் கலந்தவன்
நீ  தானே..
எந்தன் வலியை அறிந்து கண்
கலங்கியவனும் நீ தானே.....
உந்தன் வலியை மறைத்து
முத்துப்பல் வரிசை தெரிய
புன்னகைத்தவனும் நீ தானே....

விளையாட்டாய் நான் செய்தவை...
வினையாக மாற ....
என்னைக் காட்டிலும் வேதனை
கொண்டவனும் நீ தானே....

எந்தன் சிறு பொழுது
பிரிவினையும் தாங்க இயலாது..
கதறியவனும் நீ தானே....

சிவந்த உந்தன் விழிகளில்
அறிந்தேன்...
என்னை பிரிந்த நொடிகளில்
உந்தன் லோகம் சூனியமாக
மாறிடுமென....

இனி ஒரு பொழுதும்  உன்னை
பிரிந்திட மாட்டேன்...
உன்னை மறந்திட மாட்டேன்..
ஒரு துளி் கண்ணீரும்
சிந்திட விடமாட்டேன்....

மூச்சாய் சுவாசிப்பேன்...
உயிராய் நேசிப்பேன்....
உனக்கென மட்டும் வாழ்ந்திடுவேன்...
சொல்கிறேன் நான் உந்தன்
கருவாச்சி...
என்றும் நீ எந்தன்
உயிர் மூச்சி.....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: Ms.SaraN on February 05, 2018, 01:09:32 PM
சொர்கத்தின் அடையாளம் காதலா
நரகத்தின் நுழைவாசல் காதலா
இதில் காதல் எவ்வகை ??
இதில் ஏது என்று கூட தெரியாமல் சிலர்
காதலில் மூழ்கி தத்தளிக்கிறார்கள்
துரோகம் சந்தேகம் நிறைந்த காதல் கூட
சொர்கத்திகத்தில் நிச்சயமானது என்கிறார்கள்
இவர்களை எவ்வகை படுத்துவது
என்று தெரியவில்லை எனக்கு

இதில் சிலருக்கோ காதல் தரும்
போதை மட்டுமே போதுமானது
கல்யாணம் என்ற வார்த்தை கேட்டாலே
பாகற்காய் போல் அப்படி ஒரு கசப்பு
குடும்ப வாழ்க்கையை சுமக்க பயம்
காதலுக்கு இலக்கணமே கல்யாண பந்தம்
இதில் இருந்து ஓடும் ஆண்கள்
எவ்வகை படுத்துவது என்று
எனக்கு புரியவுமில்லை தெரியவுமில்லை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
காதலுக்கும் இது பொருந்தும்
பார்க்கும் பார்வையில் சந்தேகம்
பேசும் வார்த்தையில் குற்றச்சாட்டு
இவை அனைத்தும் காதலில் காதலர்கள்
கண்டிராத அகோர முகம்
நீ எனக்கு மட்டுமே என்று
சொல்லும் உதடுகள் கூட
நீ யாருடன் சென்றாய் என்ன
கேட்க வெகு  நேரம் ஆகாது
இவ்வகை அன்பு எவ்வகை சேர்ந்தது?

எனது மொழியில் காதலும் அக்னியே 
குளிரில் அணைக்கவும் செய்யும்
கொஞ்சம் அசந்தால் பொசுக்கவும் செய்யும்
எல்லை தாண்டாமல் அன்பை பகிருங்கள்
கண்மூடித்தனமான நம்பிக்கை நம்மை
பாதாள குழியில் தள்ள வெகுநேரம் ஆகாது
உறவுகள் கோடி அருகில் இருந்தும்
நம்மை நடைப்பிணம் ஆகிடும்
புரிந்து அறிந்து காதல் செய்க
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: joker on February 05, 2018, 07:17:37 PM
பார்க்க அழகான பெண்ணை
நான் தேடவில்லை

பாசம் வைத்து நான் பார்க்க
ஒரு பெண்ணை
தேடுகிறேன்

சுவாசிக்க நான் விரும்பவில்லை
அவளின் சுவாசமாய் மாற
விரும்புகிறேன்

கவிதை எதுவும் எழுத
தெரியாது எனக்கு
அவள் பெயர் தெரிந்தால்
அதை தினமும் உச்சரித்து
கற்றுகொள்ள ஆவல் கொண்டுள்ளேன்

இளவரசி நீ, என் வீட்டு 
இல்லத்தரசியாக
மாற காத்திருக்கிறேன்

பூவின் மொட்டுபோல்
மௌனமாய் இருக்காமல்
மலர்ந்த மலர் போல்
சிரிக்கும் அவளை
காண காத்திருக்கிறேன்

கானல் நீர் போல்
காண்பதெல்லாம் நீயோ
என துடிக்கிறது
என் மனம்

என் வாழ்க்கை பாதையில்
முடிவிலா பயணம் நீ

சுகமும் துக்கமும்
மேகம் போல்
நம் வாழ்வில்
கலந்து இருப்பினும்
நட்சித்திரமாய்
உன்னை ஜொலிக்க வைப்பேனே

ஓர் அந்தி மாலையில்
நம் வீட்டு மொட்டை மாடியில்
இளங்காற்று நம்மை அணைக்க
என் தோளில் நீ சாய்ந்து
வானத்து மதியை
நாம் ரசிக்க வேண்டுமடி

கண்கள் திறக்கும் வரை
நீடிக்கும் கனவு போல்
என் வாழ்க்கையின்
கடைசி நொடி வரை
வேண்டுமடி
நீ எனக்கு ..

****ஜோக்கர் ****
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: பவித்ரா on February 06, 2018, 01:49:37 AM
பண்போடு பழகி
தெளிந்த சிந்தனை
சற்றே சிறுகடலை
எங்கேயடா கற்றாய்
இவ்வளவு  வாய்ஜாலம்
அடடே ரசித்தேனடா ...!

நிழலில்லா கதிரவனின்
பார்வை நேர்கொள்ள
திராணியற்று வெட்கத்தில்
தலை குனிந்தே
அடடே ரசித்தேனடா ...!

நானும் நீயும் பேசி சிரித்து
விடியும் வரை நேரத்தை
களவாடிய நாட்களை
எண்ணி நகைக்கையில்
அடடே ரசித்தேனடா ...!

மனம் முழுவதும்
உன் நினைவலைகள்
நிறமில்லா காற்றாய்
நிறைந்தே வழிகையில்
 நாம் கொண்ட காதலை எண்ணி
அடடே ரசித்தேனடா ...!

தினம் சொல் உரிமையாய்
நீ என்னவலென்று
அச்சொல்லுக்காய்
உயிர் சுமக்கிறேன்
பலவாசம் உள்ள நட்பு பூக்களே (நட்புக்களே )
எனக்காய் கூறுங்கள்
அவனிடத்தில் 
காத்திருக்கிறாள் பவி என்று
அடடே அத்தனையும் நெஜமா கனவா ..?
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: AnoTH on February 06, 2018, 06:16:35 AM
வரிகள் எழுதமுன்
வடியும் கண்ணீரால்
புரியும் உணர்வதில்
பெருகும் காதலை 
அறியும் பொழுதுதான்
மனதைத்  தொலைக்கிறேன் .........

மதியின் ஒளியினில்
விதியின் சூழ்ச்சியால்
விலகிக் கிடந்திடும் 
நாட்கள் கடந்திட
விரல்கள் இணைந்திட
காத்துக் கிடக்கிறேன்...........

நதியை கடந்துதான்
புது தேசம் கண்டதால்
புதுமை உலகினில்
பதுமை உன்னைத்தான்
தேடி அலைகிறேன்..................

செல்ல மொழியினால்
மெல்ல பேசிடும்
சின்ன விழியைத்தான்
விண்ணில் காண்கிறேன்...........

காதலாயினும் சாதல் ஆகிடும்
தூரம் ஓன்று தான்
என்னைத் தொடர்ந்திட
காலம் கடந்திடும்
மாற்றம் ஒன்றினை
நம்பி வாழ்கிறேன்..........

நிழலின் துணையினால்
நிஜத்தில் உனைக்கான
நாணம் தலை குனிகையில் 
கரங்களால் உனைப் பற்றுவேன்.......

அதுவே நமக்கான காதலர் தினம் என்பேன் 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: BreeZe on February 06, 2018, 09:51:23 AM


என் பெயர் காதல்
உலகம் சுழல்வதும் என்னாலே
உலகம் அழிவதும் என்னாலே
பல சரித்திரங்கள் சகா வரம்
பெற்றதும் என்னாலே
பல சாம்பிராஜியங்கள்
மண்ணோடு மண்ணானதும் என்னாலே

என்னை வைத்து ஏதேதோ நடக்கிறது
இந்த உலகினிலே
நானா என்னை வந்து தொட்டு ரசிக்கச் சொன்னேன்
நானா என்னை வைத்து கள்ள உறவுகளை
வளர்க்கச் சொன்னேன்
நானா எனது பெயரை சொல்லி
டேட்டிங் போகச் சொன்னேன்
நானா என்னை வைத்து
பிறர் மனதில் ஆசையை வளர்க்கச் சொன்னேன்

நான் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா
சிலரது அன்பு உண்மையா  இருந்து
அவர்கள் ஒன்று கூடினால் நான் தப்பிச்சேன்
ஆகா ஓகோ என்று புகழ்வார்கள்
அதே அன்பு பிழையானால் வம்பு தான்
பந்து போல, மத்தளம் போல இரண்டு பக்கமும்
அடிபடுபவளும் நான் தான்

காதலாகிய எனக்கு  தான் எத்தனை பெயர்கள்
கண்டதும் காதல்
காணாமலும் காதல்
செல்போன் காதல்
இன்டர்நெட் காதல்
என்ன கருமம்டா சாமி

காதல் நான் பெண்மையானவள்
மிகவும் மென்மையானவள்
போற்றக் கூடிய தெய்வீகமானவள்
முன்பின் அறிந்திராத இரு மனங்களை
அன்பால் ஒன்றிணைப்பவள்
இப்படி பெருமைக்குறிய நான்
இன்றய இளம் சமுதாயத்தினரால்
சீரழிந்து பேரழிந்து நிற்கும்
அபலைப் பெண் ஆனேனே



Copyright by
BreeZe
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: SweeTie on February 06, 2018, 05:41:07 PM
காதலே அவனை கைதுசெய்
சென்று சேதி சொல் அவனிடம்
பாதியாய் அவனில் நான்
நாதியாய்   வாழ்கிறேன் .

விழிகளால்  மழலை
மொழிகளில் பேசியும்  -  என் 
தளிர் விரல் தீண்டியும்
குளிர் ஜுரம் தந்தவன்

பாசமாய் நெருங்கியே
நேசமாய் அணைத்தவன்
ஆசையாய் பேசியே  -  காதல்
போதையை  வளர்த்தவன் 

தென்றலாய் வந்தான் 
கொன்றை நான் மலர்ந்தேன்
அருவியாய் வந்தான்
மருவியே  போனேன் 

விண்ணிலும் மண்ணிலும்
விருந்தோம்பும் காதல்
என்னையும்  அவனையும்
ஒருமித்த காதல்

வண்டையும்  பூவையும்
மகிழ்வித்த காதல்
ஆம்பலைத்  திங்கள் 
மலர்வித்த  காதல்

விட்டில்கள் விளக்கொளியில்
வீழ்ந்து மடிந்த காதல்
முற்றும் துறந்த விஷ்வனும்
தவம் துறந்த காதல்
 
காதலே அவனை கைதுசெய்
சாதலே நேரினும்   -  என்
மாதவன் அவனையே
பேதை நான் மறவேன்

அனைத்து  இனிய  தோழர் தோழியருக்கும்
ஜோவின்  காதலர் தின  நல்வாழ்த்துக்கள்
 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: Mr.BeaN on February 07, 2018, 04:54:31 PM
நாள்காட்டி தாள்தனிலே..
நாம் காணும் நாட்களிலே..
சிறப்பான நன்னாளே..
அந்நாளும் இந்நாளே!!

ஆணொன்றும் பெண்ணொன்றும்..
அகத்திலே கலந்திட!
நானென்றும் நீயென்றும்..
பிரிவினை அகன்றிட!
ஈருடல் ஓருயிர்..
என்றெமைஇணைத்திட!
இறைவனின அருள்தரும்..
பண்பினை பெற்ற!
அகிலம் முழுவதும்..
தனக் கொப்பற்ற!
ஈடில்லா ஓர் உறவு..
அதன் பெயர் காதல்!

இறைவன் தொடங்கி  பக்தன் முதலாய்..
அரசன் ஆண்டி பிரிவினை இன்றி ..
பிறக்கும் உறவின் பெயர்தான் காதல்!

ஏழை ஓர்நாள் பெரும்பணம் கொள்வான்..
பெரும்பணம் கொண்டவன் ஏழை ஆவான்..
மாற்றம் ஒன்றே மாறா துலகில்
மாறாதிருக்கும் நற்குணம் காதல்!

கடலளவு பாசம் கொண்டு..
கடலின் நுரையளவே கோபம் கொண்டு..
உலகளவு மோகம் கொண்டு..
உனதளவே தாகம் கொண்டு..
மெய்யன்பு தனை கொண்டு..
கை வீசி மண் மீது நடக்கின்ற காதல்!!!
வாழ்க!!!       வாழ்க!!!       வாழ்க!!!     
                 
   காதலுடன்
    காதல் மன்னன் ;D ;D ;D   களியுக கண்ணன்    ;D ;D ;D       உங்கள்  திருவாளர் பீன்.
[/color][/size][/font][/color]
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: சாக்ரடீஸ் on February 07, 2018, 05:19:52 PM
இந்த காதலர் தினத்தில்
உனக்கு கவி  எழுத வார்த்தைகளை தேடி தேடி
சலித்து போகிறேன் ....
என் தாய் மொழியாகிய தமிழ் மொழியின் எழுத்துக்களில்
பஞ்சம் வந்து விட்டதோ
புத்தம் புதியதாய் சொல்ல முயற்சிக்கிறேன்
ஆனால் என் விடையோ பூஜியத்தில் முடிகின்றது .....
நீயே ஒரு கவிதை தான்
இருந்தும் உனக்கு கவி
எழுதமுற்ப்பட்டது...
என்னுடைய மிக சிறந்த முட்டாள் தனம்
இருந்தும் உனக்காக எழுதுகிறேன் ....
உனக்காக எழுதுவதால் என் கிறுக்கல்களும்
கவிதை என்ற அந்தஸ்தை பெறுகிறது ...

நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்
இணையதளத்தில் சந்தித்தோம்
'ஹாய்'  'ஓய்...ய்' ஆக மாறியது
என் 'மிஸ் யு ' வினாவிற்கு நீ தந்த பதில் உன் அலைபேசி என்
அடிக்கடி பேசிக்கொண்டோம்
 உறவுக்கு மேல் உயிர்  ஆனோம் 
நம் இதயங்கள்  இணைத்த இணையதளத்திற்கு
நன்றிகள் பல கோடி ...
மகிழ்ச்சியை தோழியாய் தந்தவள் நீ !
என்   வாழ்க்கையின் பாதையை மாற்ற வந்தவள் நீ !
மீண்டும் புத்தம் புதியதாய் பிறந்தது போல ஒரு உணர்வு
இந்த உணர்வை நான்  எப்படி சொல்ல !!!
நீயே  என் பலவீனமாகவும்
நான் உன் பலமாகவும் இருதோம்
இருந்தும் உன் திடீர் மனமாற்றம்
என்னை திணறடிக்க செய்தது
இருந்தும்  உன்  மனஅழுத்தத்தை   புரிந்து  கொண்டேன்

தனிமை வேண்டாம் என்னவளே
தோள் தருகிறேன் சாய்ந்து சோர்வை தீர்த்துக்கொள்
துணையாய்  வருகிறேன்
நெஞ்சை துளைக்கும் ரணங்களை பகிர்ந்துகொள்
மழை நீரை தாங்கியுள்ள மேகம் போல்
உன் ரணங்களை தாங்கி உன்ன காப்பேன்
வந்துவிடு  தனிமை வேண்டாம் ....

உன் தனிமையின் கொடுமையை கண்டு
என்னுள் இனம் புரியா பாரம்
சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னை கொன்று குவிக்கின்றது

நான் இன்பம் பெற நீ என்னை விட்டு சென்றாய்
உன்னைப்போல் பெண்ணிற்கு ...
காமம் இல்ல காதலை தருவதை தவிர வேற என்ன
கைமாறு செய்வேன் என்னவளே.....
போதும் உன் போராட்டங்கள்
போதும் உன் ரணங்கள்
போதும் உன் தவிப்புகள்
போதும் உன் தியாகங்கள்
இனி உன் வாழ்வில் எப்பொழுதும்
வசந்தம் மட்டுமே வீசிட
இறைவன் நம்பிக்கை இன்றியும்
உனக்காக இறைவனிடம் மண்டியிட்டு
தொழுகிறேன் ...

என் கண் இமைகளை வெட்டியபடி காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் வருகை எதிர் பார்த்து
வந்துவிடு என்னவளே....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)
Post by: NiYa on February 08, 2018, 11:53:35 PM
பசுமை இல்லாத என் மனதில்
இளவேனில்  தென்றலாய் நீ
வறண்ட என் இதயத்தில்
இளம் தூரலாய் வந்தாய்

உன்னை பார்த்து ரசிக்கும்
அளவிற்கு அழகா தெரியவில்லை
ஆனல் உன்  குரலில்
என் மனம் பறிபோனது உண்மை தான்

உன் குரலில் என் பெயரை
கேட்ட அந்த தருணம்
என்னை திக்கு முக்காடவைத்தாய்
ஏன் என் சுயத்தை கூட மறக்கவைத்தாய்


உன் கடந்த  காலா வாழ்க்கை
வேணாம் எனக்கு
உன் எதிர்காலா வாழ்வில்
உன்துணையாய் வர ஆவல் எனக்கு

நாடு கடந்து மதம் கடந்து
நம் இதயங்கள் இணைந்து
வாழ ஆவலாய் காத்திருக்கும் உன்னவள்