FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: joker on March 20, 2018, 12:45:13 PM

Title: உலக சிட்டுக்குருவிகள் தினம்: (World House Sparrow Day)
Post by: joker on March 20, 2018, 12:45:13 PM
உலக சிட்டுக்குருவிகள் தினம்: (World House Sparrow Day)

(https://s10.postimg.org/6sou6zm4l/200px-_House_Sparrow_England_-_May_09.jpg) (https://postimg.org/image/6sou6zm4l/)

 
அழிந்து வரும் குருவி இனத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

வித விதமான குருவிகள்

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறிய பறவை. பொதுவாக இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். வெவ்வேறு வகையான குருவிகள் பல நிறங்களில் காணப்படும். ஊர்க்குருவி, தூக்கணாங்குருவி, நீண்டவால் குருவி என்று பலவற்றை நம் ஊர்புறங்களில் பார்ப்த்திருப்போம்.

இந்த குருவி இனம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பரவியிருக்கிறது. சுமார் 13 ஆண்டுகள் சராசரி ஆயுள் கொண்ட குருவிகள் தற்போது அதிகமாக அழிவைச் சந்தித்து வருகின்றன.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:
•   வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
•   எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
•   பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
•   வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
•   அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.