Author Topic: உன் பெயர் காதலோ?  (Read 564 times)

Offline Guest

உன் பெயர் காதலோ?
« on: February 16, 2019, 02:51:56 AM »
முரட்டுக்காதல் ஒன்றை
உள்புதைத்த சுவடுகள்
வெளித்தெரியாமல்
நடந்தலைந்ததாய் பொருமிக்கொண்டிருந்தேன்..

வேனலின் மழையாய்
தரிசனம் கொள்கையிலும்
முழுமையாய் உணர்ந்ததில்லை
என்னுள் உயிர்ப்போடிருந்த
உன் DNA கூறுகளில்
ஒட்டியே இருந்த
தேவதைத் தடயங்களை   

உள் புதைந்துப் போனபின்னும்
பெருவிருட்சத்தின் சாயலோடு
தூங்கிக் கொண்டிருந்திருப்பாய்
விதையாய்..

தர்க்க நியாங்கள் பொய்த்துப்போன பொழுதொன்றில்
உன்னை எதிர்கொண்டு திரும்புகையில்
எனை உணர்கிறேன்...
உன் பெயர் காதலோ??
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: உன் பெயர் காதலோ?
« Reply #1 on: February 16, 2019, 11:17:15 AM »
Wonderful நண்பா!!

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்