தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 339

<< < (2/2)

Sun FloweR:
சாக்லெட்களின் குவியல்கள்..
ஐஸ்கிரீமின் சாலைகள்..
அப்பாவிடம் கேட்டு அடம்பிடித்த கிரிக்கெட் மட்டைகள் ஒன்றல்ல ஓராயிரம் என்னைச் சூழ்ந்தபடி..
மகிழ்ச்சி கடலில் நீந்திய படியே
நிறைவேறாத என் ஆசைகளை நிறைவேற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்தது எனது கனவு உலகம்..

சட்டென்று விழிப்பு வர அடி வயிற்றில் பூமிப் பந்து சுழல்வது போன்ற உணர்வு..

அம்மா ஏற்கனவே எச்சரித்தாள் தூங்கும் முன் அனைத்தையும் முடித்து விட்டு தூங்கு என்று..
அம்மா சொல்லும் எதையும் சட்டை செய்யாத நான் இதை மட்டும் செய்து விடுவேனா என்ன?

அம்மாவை எழுப்பி விடலாமா?
வேண்டாம். ஸ்டேசன் வந்த ரயில் போல் அலறுவாள்..
நாமே போய்விடலாம் துணிந்து..

எங்கும் இருள் ..
எங்கும் மௌனம்..
நிசப்தத்தின் சாலைகளில்
ஊர்ந்து சென்றது
என் மன ரயில் பூச்சி..

ஆத்திரத்தைக் கூட அடக்கி விட முடிகிறது.. இதை அடக்கி விட முடியவில்லையே..

அடிமேல் அடிவைத்து யாரும் முழித்திரா வண்ணம் ஒரு வழியாக என் பாரம் இறக்கிட
பாத்ரூம் வாசலைத் திறந்தேன்..

அங்கு நான் கண்ட காட்சி ....
அய்யோ.........
இது யார்?
இந்த நேரத்தில் எங்கள் பாத்ரூமில்?
ஒரு வேளை கொல்லி வாய் பிசாசோ ? ரத்தக் கட்டேரியோ?
அதென்ன அதன் கைகளில் கோடாரி போல் தெரிகிறதே?
பயம், பயம், பயம், பயத்தில் "வீல்" என்று அலறினேன் ..

சில நொடிகள் பாலில் விழுந்த சீனியாய் கரைந்தன..
அது.. அது.. ஏன்
இன்னும் நம்மை ஒன்றும் செய்யவில்லை என்ற
ஒரு நீண்ட பெருமூச்சுக்கு பின்
நன்றாக உற்று பார்க்கிறேன் மீண்டும் அந்த உருவத்தை..
அட அது கழற்றி போட்ட எனது ஆடையின் நிழல் தான்..

வந்த வேலையை அவசர கதியில் முடித்து விட்டு வந்த சுவடு தெரியாமல் மீண்டும் என் படுக்கை சென்று தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன்..

தூக்கம் வரவில்லை..
குப்பென்று வேர்த்த உடலும்
உலர்ந்த உதடுகளும், தாகம் தீர்த்து குளிர வை என்று கதறிக் கொண்டிருந்தன..
பேசாமல் இரு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று
முணு முணுத்தன
எனது உதடுகள்..

KS Saravanan:
எங்கும் யுத்தம் எதிலும் யுத்தம்
கருவரைக்கும் யுத்தம் கல்லறைக்கும் யுத்தம்
கண்காணா தேசம் தேடி கடல் வழியே போனாலும்
கண்டவுடன் சுட வேண்டி கண்டவர்கள் யுத்தம்..!

தோழனிடம் தோன்றிய தீண்டாமை யுத்தம்
வார்த்தைகளால் மாறிய மொழிபேத யுத்தம்
மண்ணால் தோன்றின மண்ணாசை யுத்தம்
அரசுகளிடம் தோன்றிய வல்லமை யுத்தம்..!

இயற்கையை ரசித்திடும் மனிதம் எங்கே..
இயற்பியலை கண்டறிந்த மானிடன் எங்கே..!
யுத்தம் எனும் சொல் உருவாகும்
என்று கணக்கிடாத கணிதன் எங்கே...!

நிலை தடுமாறும் அழிவுறு ஆயுதங்கள் அழிந்திடுமா..!
நிலை மாறிய  மண்ணில் புண்ணிய பூமி பிறந்திடுமா..!
குரங்கில் இருந்து வந்த மனிதர்களே
மீண்டும் நாம் குரங்காய் போனால் என்ன..?

நாட்டிலே ஒளிந்து வாழ்வதை விட
காட்டிலே சுதந்திரமாய் இருப்போம்..!
பூமியே தரையாகி வானமே கூரையாக
வாழும் வழியே நாமும் அறிவோம்..!

SweeTie:
மாறு வேடத்தில் மறைந்திருந்தால் 
மாண்பு மிக்க உன்னை  தெரியாமல் போய்விடுமா?
கன்னியரை  கவர்ந்து   
காதல் எனும் மாயவலையில் வீழ்த்தி
கடைசியில்  நட்டாற்றில்  விடுபவன் அல்லவா  நீ

காலமெல்லாம்  நீயென்று 
காத்திருந்த  காயத்ரி   
பள்ளியில்  படிக்கையிலே   பவித்ரா
உன்னையே  உலகம் என நினைத்து
உனக்காக தவம்கிடந்த ஊர்வசி 
தான் உண்டு தன வேலை உண்டு என்றிருந்த
தமிழரசியை கூட விட்டுவைக்கவில்லையே
இன்னும் எத்தனை பெண்களை நிர்க்கதியாக்கினாயோ?

கன்னியரை கழுவேற்றும்   மனிதா !
காதல் எனும் மோக வலையில் 
காலத்தை   கறையாக்கும்  மனிதா !
களைந்துவிடு  உன்  வேடத்தை   
இல்லையெனில்,  சீக்கிரமே  நீ கழுவேறும்
காலத்துக்கு இரையாவாய்? 

காலக்  கொடுமைகளில் சிக்கி சீரழிந்து
காலாவதியாகும்   பெண்ணினத்தை வாழவிடு
நீதிக்கு  பயந்து   ஒளிந்து வாழும்   
உன் சீரற்ற வாழ்க்கைக்கு   வை  ஒரு முற்றுப்புள்ளி
உத்தமனாய்  வாளாவிட்டாலும்   
உலகத்தின்   ஒரு மனிதனாய் வாழப்பார்

நான்கு சுவற்றுக்குள்  எத்தனை  காலங்கள் வாழப்போகிறாய்
உன் முகமூடி வாழ்க்கைக்கு  முடிவே இல்லையா?
நீ  திருந்துவதும்   செத்து முடிவதும்   
உன் கையில்தான் இருக்கிறது.   
சிந்தித்து  செயல்படு  மனிதா !
 

Dito:
எப்பப்பபப்ப... எப்படித் தான் முடிகிறது இதனால் மட்டும்..?
கையில் கத்தியின்றி,
இரத்தமின்றி சுற்றி இருக்கும் எல்லோரையும் விரட்டி விட முடிகிறது இதனால் மட்டும்..

இத்தனை நாள் தெரியவில்லை
அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டுக் கொண்ட காரணங்கள்..

இத்தனை நாள் தெரியவில்லை அப்பாவை கண்ட அனைவரும் மிரண்டு ஓடிய காரணங்கள்..

என் நண்பர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள். உன் அப்பாவைக் கண்டால் பயமாய் இருக்கிறது என்று..

இப்போது எனக்கும் பயமாய் தான் உள்ளது...
 என் தந்தை கையில் இருந்த உடைந்த மதுபாட்டிலைக் கண்டு..

எனக்கும் மிரட்சியாய் தான் உள்ளது..
எனது தாயின் வயிறு கிழிந்து தொங்கிய குடலையும் கொட்டிய குருதியையும் கண்டு..

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version