Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
பூனைக்குட்டியை
தேடிக் கொண்டிருக்கிறேன்

கறுப்புநிற பூனை அது
குட்டியாக வளர்த்தால்
பிணைப்பு அதிகமாகும் என்றே
சொல்லி வைத்து காத்திருந்து வாங்கிய பூனைக்குட்டி

என்ன குடிக்கும்?
எதை உண்ணும்?
என்று தேடிப்படித்து உணவளித்தும்
இன்னும் தெளிந்திடாத குட்டிப் பூனை

அதன் தலை வருடி களிவதே
கொஞ்ச நாட்களாக எனக்கும்
அதற்குமான stress buster...

தான் பூனை என்பதையறியாது
மடிப்பற்றிக் கிடந்த பூனை..
கொஞ்சி ஆசைகூட தீரவில்லை
இன்று காணாமல் போய்விட்டது...

இனி தேட இடமில்லை
கிடைக்கும் என்ற நம்பிக்கையும்
அறவே இல்லை

திரும்ப வந்துவிடும் என்று நம்பிக்கையோடு
தொலைந்து போன பூனைக்குட்டியை
தேடிக் கொண்டே இருக்கிறேன்....

பாவம் பூனைக்குட்டி...
தன்னை தேடிக் கொண்டிருப்பார்கள்
என்பது அதற்கு தெரிந்திருக்க வாய்ப்ப்பில்லை..

தான் தொலைந்து போனோம் என்பதாவது
தெரியுமா அதற்கு??

தொலைத்ததின் குற்ற உணர்வோடு
இதுவும் சேர்ந்திட குறுகுறுத்துக் கிடக்கிறது மனம்...
2அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 5:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

16-ஜூன்  -2021 (புதன்கிழமை )அன்று  ஐரோப்பிய நேரம் 5:30 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 17-ஜூன்-2021  அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
3


ஆனியன் ஐஸ்க்ரீம், கார்லிக் ஐஸ்க்ரீம்?


வெனிசுலா நாட்டிலிருக்கும் Heladeria Coromoto என்ற ஐஸ்கிரீம் கடையில் கிட்டத்தட்ட 1000 வகைகளில் ஐஸ்கிரீம்கள் உள்ளன. 1980ஆம் ஆண்டு Manuel da Silva Oliveira என்பவரால் துவங்கப்பட்ட இக்கடை, அதிக வெரைட்டிகளில் ஐஸ்கிரீம் இருக்கும் கடை என்று கின்னஸ் புத்தகத்திலும்(!) இடம் பிடித்திருக்கிறது. பல ஐஸ்கிரீம் கம்பெனிகளில் வேலை செய்த Oliveria, தன்னால் புது விதங்களில் ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும் என்று சொல்லி இக்கடையைத் தொடங்கியிருக்கிறார்.


அவர் முதன்முதலில் முயற்சி செய்த புது வெரைட்டி ஐஸ்கிரீம் அவகேடோ(பட்டர் ஃப்ரூட்). அதன் சுவையை சிறப்பானதாக மாற்றும் முயற்சியில் கிட்டத்தட்ட 50கிலோ ஐஸ்கிரீமை செலவு செய்திருக்கிறார் இந்த மனிதர்.

இங்கு(மட்டுமே??) கிடைக்கும் சில வித்தியாசமான ஐஸ்கிரீம் சுவைகள் – வெங்காயம், ஸ்வீட் கார்ன், முட்டை, சீஸ், காளான், மிளகாய், தக்காளி, ஒயின், பூண்டு, நண்டு(நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்..நண்டு தான்). ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 60 வகை ஐஸ்கிரீம்கள் விற்கப்படுகின்றன.

Cointreau, cognac or vodka-and-pineapple – இவையெல்லாம் என்ன தெரியுமா? இந்தக்கடையில் இருக்கும் சில ஆல்கஹால் கலந்த ஐஸ்கிரீம் வெரைட்டிகள்.
4
happy birthday ;D sam yu k tha @ tinu ;D
6 >:(பட்டைக்குறி..Bar code ?

நாம் வாங்கும் எல்லா பொருட்களிலும் நீங்காத இடம்பிடித்துவிட்ட “Bar Code”(தமிழில் ”பட்டைக்குறி”), அமெரிக்காவில் ரயில் பெட்டிகளை அடையாளம் கண்டுபிடிக்க முதன்முதலில் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், சூப்பர் மார்கெட்டுகளில், தினசரி வாங்கும் பொருட்களில் அச்சடிக்கப்பட்ட பிறகுதான், அவை அதிகம் வெளியுலகிற்குத் தெரிய வந்தன.

“Bar Code Scanner” கருவிகொண்டு முதன்முதலில் ஸ்கேன் செய்யப்பட்ட பொருள் Wrigley’s Juicy Fruit gum பாக்கெட். 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ராய் நகரத்திலிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க(!!) செயல் நடந்தது.


பலவகையான Bar Code இருந்தாலும், Universal Product Code(UPC) என்ற Bar Code தான் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இந்த வகை Bar Codeஇல் இருக்கும் கருப்புப் பட்டைகளின் அகலமும், பட்டைகளுக்கிடையே இருக்கும் இடைவெளியும் தான் ஸ்கேன் செய்யப்படுகிறது. இவற்றின் உயரத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பது அவசியமில்லை.

சாத்தான்/பேய்/தீய சத்தி இவற்றைக் குறிக்கும்(???) 666 என்ற எண்கள் Bar Codeஇல் ஒளிந்துகொண்டிருப்பதாக ஒரு கதை உண்டு. இது கதையல்ல நிஜம் என்று சொல்லவும் ஒரு க்ரூப் இருக்கிறது. பாவம்..அப்பாவி கம்ப்யூட்டர்களுக்கு இந்த 666 கதையெல்லாம் தெரியாததாலோ என்னவோ, இன்றுவரை  எந்தப்பிரச்னையும் செய்யாமல் அவையெல்லாம் சமத்தாக வேலை செய்கின்றன.

ஒன்று தெரியுமா? ஒரு UPC Bar Codeஇல்முதல் மூன்று கருப்புப் பட்டைகளும் அதன் கீழ் உள்ள 3 எண்களும், குறிப்பிட்ட அந்தப் பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதில் இந்தியாவிற்கான எண் 890.  உடனே, அருகிலிருக்கும் பொருளை எடுத்துப்பார்த்திருப்பீர்களே.. 🙂
7

Happy Birthday Samyuktha Sister!! I Love You!!!8


You may achieve all your dreams & God may bless you with love & peace. Happy Birthday tinu and samyuktha
9
Wish u a happy birthday Tinu and Samyu
10


Wish you very  happy birthday wishes TINU !and SAMYUKTHA!💐🌹🎂🎂🎊🎉🎁.Pages: [1] 2 3 ... 10