Author Topic: வண்ணமயமானது மனித வாழ்க்கை  (Read 932 times)

Offline thamilan

வர்ணங்களால் ஆனதே
இந்த உலகம்
இயற்கைக்கு என்றும்
ஹோலிப்பண்டிகை தான்
அது இரவு பகல்
வர்ணங்களால் விளையாடுகிறது

பூமி சுழன்றுகொண்டேயிருக்கும்
பிரமாண்டமான கலைடாஸ்கோப்
அதன் ஒவ்வொரு வர்ணகோலத்தையும்
நான் பருவம் என்கிறோம்

வானவில் வானத்தின் 
காதல் கடிதம்
பூமியின் மேல் அதற்கு
காதல் வரும் போதெல்லாம்
ஏழு வர்ணங்களில் காதல் கடிதம் வரைகிறது

சூரியன் வண்ணஜானி
அதனால் தான் அவன்
ஓவியம் வரைவதில்லை
வர்ணங்களை அவன்
வானவீதியில் கொட்டி விடுகிறான்
அவை வானமெங்கும்
கூடி கும்மாளமடிக்கின்றன‌

பெண் வண்ணமாகவும் தூரிகையாகவும்
இருப்பவள்
வண்ண‌ங்களால் வரையப்பட்டவள்
வண்ணங்களை அணிபவள்
செல்லும் வழியெல்லாம்
வண்ணங்களை தூவிச் செல்பவள்
வாழ்க்கையை வண்ண‌மயமாக ஆக்குபவள்
அவள் மட்டும் இல்லாதிருந்தால்
உலகம் கருப்பு வெளுப்பாகவே
இருந்திருக்கும்

மனிதன்
வண்ணங்களால் வாழ்கிறான்
வண்ணங்களுக்காகவே வாழ்கிறான்

தோலில் கருப்பு என்றால்
அழகில்லை என்பான்
கருவிழியையோ கவிதை என்பான்

கருமை என்றால்
துக்கத்தின் குறியீடு என்பான்
பள்ளியறை கருமையை
இனிமை என்பான்

சிவப்பு என்றால்
அபாயத்தின் அறிகுறி என்பான்
கன்னத்தின் சிவப்பை
காதல் என்பான்

மஞ்சள்  என்றால்
மங்கலம் என்பான்
மஞ்சக்காமலை வந்தால்
மருத்துவரை தேடி ஓடுவான்

மணப்பத்திரிகைக்கு
மஞ்சள் தடவுவான்
ஆபாச பத்திரிகைக்கு
மஞ்சள் பத்திரிகை என திட்டுவான்

புல்லை பூமியின்
பச்சை ஆடை என வர்ணிப்பான்
ஆபாச எழுத்தை
பச்சை என அருவருப்பான்

மனிதர்களில் சிலர் பொம்மைகள்
பூசப்படும் வர்ணத்தை பேசாமல்
ஏற்றுக் கொள்வார்கள்

சிலர் தங்கள் உண்மையான‌
வண்ணத்தை மறைத்துக்கொண்டு
உலகை ஏமாற்ற‌
வேறு வண்ணத்தை பூசிக்கொள்கிறார்கள்

சிலர் பச்சோந்திகள்
அடிக்கடி வண்ணம் மாறுவார்கள்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வண்ணமயமானது மனித வாழ்க்கை
« Reply #1 on: September 17, 2011, 09:31:39 PM »
Quote
சிலர் பச்சோந்திகள்
அடிக்கடி வண்ணம் மாறுவார்கள்


nice kavithai  ;) ;) ;) ;)