Author Topic: தீர்கதரிசி  (Read 2223 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தீர்கதரிசி
« on: July 14, 2011, 03:54:25 PM »
அது orkutum facebookum தமிழ் நாட்டுகுள்ள வராத காலம் .. 60 அல்லது 65 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான பெண்மணி தன்னுடைய சுருக்கு பையில் இருந்த மூக்கு பொடியை எடுத்தால் அதை கவனித அவளுடைய மருமகள் எல்லாத்துக்கும் காரணம் இந்த சனியன்தான் அதனால் தான இங்க வந்திருகோம் ஆனா நீங்க இங்கயும் வந்து அதையே பன்றிங்கனு ? கத்தினால் அனால் அவள் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த டப்பாவில் இருந்து சிறிது பொடியை எடுத்து மூக்கினுள் அடித்தால் . மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்த அவளுடைய மகனின் முகம் மிகவும் வாடி இருந்தது .. வாங்க போலாம் என்று கூறி விட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான் அவனுடைய மனைவியும் அம்மாவும் அவனை பின் தொடர்ந்து சென்றனர் .. Dr என்ன சொன்னார் என்று அவனுடைய மனைவி கேட்டால் .. மெல்லிய குரலில் dr ரொம்ப கஷ்டம்னு சொல்லிடாரு என்று மனைவிடம் கூறினான் .. பிறகு போடி போடாம ஒழுங்கா மாதரை மருந்து எடுத்துகிட்டா இபோதைக்கு பிரச்சனை இல்லை என்று கத்தி சொன்னான் .. அவன் சொல்வதை கண்டு கொள்ளாமல் அவள் மறுபடியும் பொடியை எடுத்து மூக்கினுள் அடைத்தாள் .. இதை கவனித அவளுடைய மருமகள் உங்க அம்மாவுக்கு நம்மோட இருக்கணும்னு ஆசை இல்ல போல அதனால்தான் இப்படி எல்லாம் பண்றாங்க என்று அவளுடைய கணவனிடம் கோவமாக கத்தினால் .. ரோட்டில் சென்றவர்கள் அவள் கத்தியதை கேட்டு திரும்பி பார்த்தனர் .. அதற்கு அந்த வயதானவள் கத்தாதடி இப்ப இந்த பொடிய போடாம இருந்தா இந்த வியாதி என்னோட உடம்புல இருந்து போய்டுமா , அட போடி , நீங்க எல்லாம் சொன்னமாதிரி நா இந்த ஹாச்பிடல்கு வந்தேன் ,அனால் ஒன்னும் ப்ரோயோஜனமில்ல , இனி நா சொல்ற மாதிரி கேளுங்க .. என்னால இந்த ஊர்ல இருக்க முடியாது .. மனுஷங்க மத்தவங்க கிட்ட சகசமா பேச கூட யோசிகிரங்க ..என்ன நம்ம ஊர்லையே விட்டுடு என்றால் ..

அவளுடைய மகன் அவளை சொந்த ஊரில் விட்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினான் ... அவளுடைய சொந்த ஊர் சேலம் மாவடத்திலுள்ள ஒரு அழகான கிராமம் . . அந்த வயதானவள் அந்த ஊரிலேயே பிறந்து வளன்தவள் அந்த ஊரில் உள்ள அனைவர்க்கும் இவளை தெரியும் .. இவளுக்கு 3 மகன் 2 மகள் .. முதல் மகன் சென்னையில் அரசு வேலையில் இருக்கிறான் , இரண்டாவது மகன் திருப்பூரில் தனியார் வேலையில் இருக்கிறான் மூன்றாவது மகன் மட்டும் அந்த ஊரிலேயே விவசாயம் செய்கிறான் .. இரண்டு மகள்களும் பக்கத்துக்கு ஊரில் குடும்பம் நடத்தி வருகின்றனர் .. அந்த வயதானவள் ஒரு சினிமா பைத்தியம் எல்லா புது படங்களையும் பார்த்து விடுவாள் .. 5 வது குழந்தை பிறந்த இரண்டு மதத்தில் அவளுடைய கணவன் இறந்து விட்டான் .. அதன் பின் விவசாயம் செய்து அந்த குடும்பத்தை அவள் காப்பாற்றி வந்தால் , அவள் m.g.r இன் தீவிர ரசிகை .. அவருடைய படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுவாள் .. பக்கத்தில் இரண்டு ஊர் தள்ளிதான் சினிமா தியேட்டர் இருந்தது ,மாலை வரை வேலை செய்து விட்டு . நடந்தே அந்த இரண்டு ஊர் தள்ளி உள்ள தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விட்டு அன்று இரவே நடந்து வீட்டுக்கு வந்து விடுவாள் ..அவள் மிகவும் தெயர்யமானவள் , எதை நினைத்தும் பெரிதாய் கவலை படமாட்டால் .அவளுடைய வாழ்கையை அவளுடைய பாணியிலே வாழ்ந்தால் .....இரண்டு மாதத்திற்கு முன்பு அவளுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது அப்போலோதுதன் அவளுக்கு கேன்சர் என தெரிந்தது .........................................................................................

சொந்த ஊருக்கு வந்தவளுக்கு அடுத்து சில வாரங்களில் வியாதி முற்றியது . அவளால் வழியை பொறுக்க முடிய வில்லை .. முன்பு போன்று அவளால் வேலையும் செய்ய முடியவில்லை .. இதனை வருடங்களாக ஓய்வில்லாமல் உழைத்த அவளால் வெட்டாக படுத்து கொண்டு விட்டதை பார்க்க முடியவில்லை ..

தன்னுடைய இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் வருகின்ற கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வர சொன்னால் .. அனைவரும் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தனர் .. அந்த மே மாதம் முழுவதும் அந்த ஊரிலேய தங்கினர் .. அப்போலோது திருவிழா நேரம் என்பதால் .. ஊரே கலகட்டி இருந்தது .. தன்னுடைய மொத்த குடும்பத்தையும் பார்த்த அவளுக்கு சந்தோஷத்தில் வழியே இல்லாததுபோல் உணர்ந்தால் .. அந்த 30 நாளும் அவள் பகல் முழுவதும் தன்னுடைய பேரன்களுடனும் பேதிகளுடனும் பேசி விளையாடி மகிழ்ந்தாள் .. வாரத்துக்கு மூன்று முறை கரி எடுத்து சாபிடனர் ... முன்பு போல அவளால் நடந்து சென்று படம் பார்க்க முடியவில்லை அதனால் பக்கத்து ஊரிலிருக்கும் வாடகை டெக்கை எடுத்து வந்து தினமும் இரவு புது படங்களையும் , M.G.R படங்களையும் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்தாள் ... தன்னுடைய மொத்த குடும்பமும் இதேபோல் எப்பவும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினால் .. இந்த 30 நாளில் விதியும் ரொம்ப முத்தியது.. 30 நாட்கள் முடிந்தது .. நாளை காலையில் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு கிளம்புகிறார்கள் .. அதனால் அன்று இரவு வெகு நேரம் தன்னுடைய மகன்களிடமும் மகள்களிடமும் பேசி கொண்டிருந்தால் .. கடைசியாக தன்னுடைய மூத்த மருமகளிடம் சென்று இன்னமும் எல்லாரையும் வெகுளியாட்டம் நம்பாம சூதானமா வாழு .. எனகப்புரம் நீ தான் இந்த குடும்பத்த இதே மாதிரி ஒற்றுமையா பாத்துக்கணும் என்றால் .. தூக்க கழகத்தில் இருந்த அவள் சரி அத்தை ரொம்ப நேரமாச்சு போய் படுத்து தூங்குங்க என்றால் .. இரவு இரண்டு மணிக்கு சிறு நீர் களிக்க வெளியே வந்த மூத்த மகன் வெளியிலிருந்த கூரை கொட்டாயை பார்த்து அதிர்ச்சியில் கீழே விழுந்தான் .. ஏன் இப்படி என்று கதறினான் .. அங்கு அவன் கண்ட காட்சி ..................................................... .......

அந்த வயதானவள் கூரை கொட்டாயில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டால் ... பிறகு அவளை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்தனர் .... இந்த 30 நாள் எப்படியெல்லாம் சந்தோஷமாக இருந்தோம் ஆனால் ஏன் இப்படி செய்து கொண்டால் என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் வருந்தினர் ..................... ........... அன்று தன்னுடைய மூத்த மருமகளிடம் பேசி விட்டு சென்று படுத்த அவளுக்கு வயிறு வலிக்க தொடங்கியது .. அவளால் அந்த வழியை சற்றும் பொறுக்க முடியவில்லை .. வந்த வேலை முடிந்தது யாருக்கும் பாறமாக இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தவள் ... வெளியே இருந்த கூற கோட்டைக்கு சென்று தன்னுடைய கணக்கை முடித்து கொண்டால் .............. எதனை பேரால் இப்படி பட்ட ஒரு வாழ்கையை வாழ முடியும் ... இந்த உலகத்துல இருக்கு ஒவ்வொரு மனுஷனும் ஆசை படுறது தன்னோட வாழ்கையை தனக்கு பிடித்த மாதிரியும் அதே சமயத்தில் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும் வாலவேண்டும்னுதன் ஆனால் நாம எல்லாம் அப்படி வாழ முயற்சி பண்றோம் ஆனால் அப்படி வாழமுடியுதா? ..... அந்த வயதானவள் அவளோட வாழ்கைய அவளுக்கு புடுச்ச மாதிரியே அமசுகிட்டா அபாரம் அவளே யாருக்கும் பாறமா இல்லாம வாழ்கைய முடுச்சுகிட்டா......................... இவளும் ஒரு தீர்கதரிசிதன் ..............................

" இது ஒரு உண்மை கதை "


படித்ததில் ரசித்தது ..