Author Topic: ~ நெய் சோறு ~  (Read 73 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218366
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ நெய் சோறு ~
« on: February 21, 2016, 09:30:33 PM »
நெய் சோறு



தேவையானவை:

பாசுமதி அரிசி – அரை கிலோ, நெய் – 150 மில்லி, சுத்தம் செய்த சின்ன வெங்காயம் – ஒரு கப், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, எண்ணெய் – 50 மில்லி, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், தண்ணீர் – 650 மில்லி, பச்சை மிளகாய் (கீறியது) – 3, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் – நெய் ஊற்றி… பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை தாளிக்கவும். பிறகு, அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி – பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன், அரிசியைப் போட்டு கிளறி, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும். பிறகு ‘தம்’ போடவும் (அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங்கள் வேகவிடவும்). பிறகு, சாதத்தை எடுத்து பரிமாறவும்.