Author Topic: நீ என்னை மறக்கும் தோறும் உன் நினைவுகள் என் நெஞ்சில் உயிர்த்தெழுந்து கொண்டேயிருக்கும்  (Read 428 times)

!! AnbaY !!

  • Guest
என் உள்ளத்தின்
காயங்களை எல்லாம்
உன்னிடம்
சொல்லத் துடிக்கிறேன்
 
நான் காத்திருந்தாலும்
கவனிக்காததுபோல்
என்னை காயப்படுத்திச்
செல்கிறாய்!
 
நீ என்னை
வெறுத்து போகும்
ஒவ்வொரு கணமும்
கடலாய் கண்ணீர் வடிக்கிறேன்!
 
நீ என்னை தவிர்ப்பதை
உணர்ந்து
உயிர் தவித்து போகிறேன்
 
நாம் ஒன்றாகப் பயணித்த
நம் பாதச் சுவடுகள்
இன்றும் என் மனதில்
ஒன்றாகவே இருக்கின்றன
 
நீ எனக்குள் இத்தனை
வலிகளை தந்தபோதும்
உன் நினைவுகள் எதையும்
நான் அழிக்கவில்லை
 
என்னுயிரை நானே
எப்படி அழிக்க முடியும்
 
நீ என்னை மறக்கும் தோறும்
உன் நினைவுகள் என் நெஞ்சில்
உயிர்த்தெழுந்து கொண்டேயிருக்கும்