Author Topic: சி‌ன்ன ‌சி‌ன்ன சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள்  (Read 3294 times)

Offline Anu

முருங்கைக்கீரை சமைக்க எளிய வழி...

காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.

உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க...

உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

சாலட் ருசியாக இருக்க...

தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.

சாம்பார் பொடி தயார் செய்யும் போது...

சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.
« Last Edit: July 31, 2012, 12:26:00 PM by Anu »


Offline Anu

Re: Tips! Tips!
« Reply #1 on: July 31, 2012, 12:25:33 PM »
முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.


Offline Anu

வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.   

குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்.

தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.   

சிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம்.   


Offline Anu

சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.

கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.

பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.

தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.


Offline Anu

வேக வை‌க்கு‌ம்போது
« Reply #4 on: July 31, 2012, 12:29:21 PM »
பரு‌ப்பை வேக வை‌க்கு‌ம் போது ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டா‌ல் ‌சீ‌க்‌கிரமே வெ‌ந்து ‌விடு‌ம்.

பா‌‌த்‌திர‌த்‌தி‌ல் பரு‌ப்பை வேக வை‌க்கு‌ம்போது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அது பரு‌ப்பை கடினமா‌க்‌கி வேக வை‌க்க ‌நிறைய நேர‌ம் எடு‌க்கு‌ம்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.

கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.


Offline Anu

ஊற வை‌க்கு‌ம்போது
« Reply #5 on: July 31, 2012, 12:30:54 PM »
சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வே‌ண்டா‌ம்.

நன்றாக கொதி‌க்க வை‌த்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்ன‌ர் ஊற வை‌த்தா‌ல் ‌கூட போது‌ம்.

‌இ‌ட்‌லி‌க்கு மா‌வை ‌மி‌க்‌சி‌யி‌ல் அறை‌க்கு‌ம் போது ஊற வை‌த்த அ‌ரி‌சி, உளு‌ந்த‌ம் பரு‌ப்பை ‌சி‌றிது நேர‌ம் கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து‌‌வி‌ட்டு அரை‌த்தா‌ல் மாவு சூடாவது த‌வி‌ர்‌க்க‌ப்‌படு‌ம்.



Offline Anu

எ‌ண்ணெயை எடு‌க்க
« Reply #6 on: July 31, 2012, 12:32:05 PM »
குழம்பிலுள்ள எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை தனியாக நீக்க வேண்டுமா?

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும்.

அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ஃப்பிரிட்ஜில் வையுங்கள்.

மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள். இவ்வாறு பயன்படுத்துவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.


Offline Anu

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்
« Reply #7 on: July 31, 2012, 12:34:07 PM »
எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் நறுக்குங்கள். அழுகை குறையும்.

கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.   

இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இ‌ட்‌லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்


Offline Anu

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.

அ‌ரி‌சி‌யி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அ‌ரி‌சி கொ‌ட்டு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌‌ல் வே‌ப்‌பிலைகளை‌ப் போ‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ரி‌சி கொ‌ட்ட வே‌ண்டு‌ம்.

எதையு‌ம் அ‌ப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம்.

அ‌வ்வ‌ப்போது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.


Offline Anu

காய்கறி வாங்குவது எப்படி? உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும் அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது சல்ல‍ மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக் கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்


Offline Anu

மிக்ஸி பராமரிப்பு
« Reply #10 on: August 01, 2012, 02:00:54 PM »
1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.
2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.
3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம்.
4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது.
5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடிக்கவே கூடாது. மிக்ஸி பிளே டுகள் மோட்டாரின் வேகத்தைப்பொறுத் தே நைசாக அரைக்கும்.
6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கிவிட்டா ல் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸி யில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்ட வும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.
7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தா ல் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரி ல் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.
8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.
9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவ னித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
10. மிக்ஸி ஓடும்போது மூடியைக் கை யினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.
11. அரைக்கும்போது பிளேடுகள் லூசா கி உள்ளதா என்பதைக் கவனித்து டை ட்டு செய்து கொ ள்ள வேண்டும்.
12. மிக்ஸியில் ஜாரின் அடிப் பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற் கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதா கிவிடும்.
13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டா ர் எரியவோ நேரலாம்.
14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.
15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங் கல் அரிசி அரைக்கும் போது இர வே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.