Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 02/10/2013 (2nd Oct)  (Read 2006 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 02/10/2013


மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் தேவைகளைபூர்த்தி செய்வீர்கள். ஆடம்பர செலவு களை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.


ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர் களுடன் இனிமையான அனுபவங்களைபகிர்ந்துக் கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவர். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


கடகம்: கணவன்,மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். முயற்சிகள் சற்று தாமதமாகும் நாள்.



கன்னி: எடுத்த வேலை களை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர் கள்.பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். திடீர் செலவுக ளால் திணறுவீர்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர். போராடி வெல்லும் நாள்.


துலாம்: ராஜதந்திரமாக செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


விருச்சிகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயம் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


தனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வர வேண்டிய  பணம் கைக்கு  வரும்.பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவு எடுக்க குழம்புவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


மீனம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைபுரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். அமோகமான நாள்.