Author Topic: இன்றைய தினத்தின் வரலாறு  (Read 17358 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.



1500: வின்சென்ட் பின்ஸோன் என்பவர் பிரேஸிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியரானார்.

1531: போர்த்துகலின் லிஸ்பன் நகரில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பலி.

1788: பிரித்தானிய தளபதி தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு  முதல் தொகுதி  கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தற்போதைய சிட்னி துறைமுகப் பகுதியை அடைந்தன. இத்தினம் அவுஸ்திரேலிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

1930: இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ஆம் திகதியை பூரண சுவராஜ் தினமாக பிரகடனப்படுத்தியது.  20 வருடங்களின்பின் இந்தியா குடியரசாகியது.

1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1950: இந்தியா குடியரசாகியது. ராஜேந்திர பிரசாத் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1958: ஜப்பானிய கப்பலொன்று கவிழ்ந்தால் 167 பேர் பலி.

1965: இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்பட்டது.

1980: இஸ்ரேல் - எகிப்து மோதல் தவிர்ப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.

1992:அமெரிக்க நகரங்களை ரஷ்யாவின் அணுவாயுதங்கள் இலக்குவைப்பதை ரஷ்யா நிறுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி பொரிஸ் யெல்டசின் அறிவித்தார்.

1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

2001: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.

2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.







1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.

1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

1925 - பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது அறநிலையத்துறை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1926- ஜோன் பயார்ட் (John Baird) என்ற ஸ்காட்டிஷ் கண்டுபிடித்த தொலைக்
காட்சிப் பெட்டி மூலம் படம் ஒளிபரப்புவதை முதன் முதலாக செய்து காட்டினார்.

1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

1943: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.

1944: 900 நாட்கள் ஜேர்மனியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த ரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் விடுவிக்கப்பட்டது.

1945: போலந்திலிருந்த நாஸிப்படைகளின் சித்திரவதை முகாமிலிருந்தவர்களை சோவியத் படைகள் விடுவித்தன.

1967: அப்பலோ 1 விண்கலம் ஏவப்பட்டபோது தீவிபத்து காரணமாக விண்கலத்திலிருந்த 3 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.

1967: விண்வெளியில் அணுவாயுதங்களை வைத்திருப்பதை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 69 நாடுகள் கையெழுத்திட்டன.

1973: பாரிஸ் சமாதான உடன்படிக்கை மூலம் வியட்நாம் யுத்தம் முடிவுக்கு வந்தது.

1984: பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரப் படப்பிடிப்பின்போது தீ விபத்துக்குள்ளானார்.

2006: வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தந்தி சேவைகளை நிறுத்திக்கொண்டது.
« Last Edit: January 31, 2012, 07:44:35 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #1 on: January 28, 2012, 08:36:38 AM »


1547: 8 ஆம் ஹென்றி மன்னன் இறந்ததையடுத்து, அவரின் 9 வயது மகன் 6 ஆம்
எட்வர்ட் மன்னனாக முடிசூடப்பட்டான். இங்கிலாந்தின் முதல் புரட்டஸ்தாந்து
மன்னன் இவன்.

1624: கரிபியன் (மேற்கிந்திய) தீவுகளில் முதலாவது பிரித்தானிய குடியேற்றம் சென் கிட்ஸ் தீவில் ஸ்தாபிக்கப்பட்டது.

1820: ரஷ்ய ஆய்வாளர்கள் பாபியன் கொட்லியெப் வோன் பெலிங்சௌசென் மற்றும்
மிகைல் பெட்ரொவிச் லாஸாரேவ் ஆகியோர் அந்தார்ட்டிக் கண்டத்தை
கண்டுபிடித்தனர்.
1878 - பாரிசில் ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் இடப்பட்டது.

1882 - சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1909: குவான்டனாமோ குடா கடற்படைத் தளம் தவிர, கியூபாவின் ஏனைய பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

1932: சீனாவின் ஷாங்காய் நகரை ஜப்பான் தாக்கியது.

1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.

1935 - ஐஸ்லாந்தில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

1986: அமெரிக்காவின் சலெஞ்சர் விண்கலம் ஏவப்பட்டபின் வெடித்ததால் 7 விண்வெளி வீரர்கள் பலியாகினர்.

1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002: கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் பலி.

2010: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.

2011: எகிப்தில் ஜனாதிபதி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
« Last Edit: January 30, 2012, 06:11:07 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #2 on: January 29, 2012, 12:21:23 PM »


1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.

1814: ரஷ்;யாவையும் பிரஷ்யாவையும் பிரீயென்னே யுத்தத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது.

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

1834: அமெரிக்காவில் தொழிலாளர் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் முதல் தடவையாக இராணுவத்தை பயன்படுத்தினார்.

1861 - கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

1863 -ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில்
இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல
நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1916: முதலாம் உலக யுத்தத்தில் பாரிஸ் நகரம் மீது ஜேர்மனிய ஸெப்பளின்களின் மூலம் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

1918: சோவியத் யூனியனுக்கு எதிராக உக்ரேனில் கிளர்ச்சி ஏற்பட்டது.

1940: ஜப்பானின் ஒசாகா நகரில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 181 பேர் பலி.

1946 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.

1987- மோனலிசாவின் காதிற்குப் பின்புறம் உள்ள ஒரு நரம்பு வீங்கியிருந்ததால்
முகத் தசைகள் விறைத்து செயலிழந்து போனதால்தான் அப்படிப்பட்ட புன்னகை பூக்க
முடிந்தது என்று Physician's Weekly என்ற சஞ்சிகை யூகம் வெளியிட்டது.
ஓவியப் பிரியர்களுக்கு வேம்பாகக் கசந்தது அந்தச் செய்தி.

1992 - இஸ்ரேலுடன் முழு அளவில் அரச தந்திர உறவை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக இந்தியா அறிவித்தது.

1996: அணுவாயுத பரிசோதனைகளை பிரான்ஸ் நிறுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹிட்டை இராஜினாமா
செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம்
மேற்கொண்டனர்.

2005: 1949 ஆம் ஆண்டின்பின் முதல் தடவையாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
« Last Edit: January 30, 2012, 06:12:47 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #3 on: January 30, 2012, 06:25:13 AM »




1648: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம்; ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 8 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது.

1649: இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1750: 1835: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இது.

1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.

1933: அடோல்வ் ஹிட்லர் ஜேர்மனியின் சான்ஸ்லர் (அரச அரசாங்கத் தலைவர்) ஆனார்.

1945: அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற ஜேர்மன் கப்பலான வில்லியம் குஸ்ட்லவ் பால்டிக் கடலில் சோவியத் நீர்மூழ்கி கப்பலின் தாக்கத்திற்குள்ளானதால் சுமார் 9000 பேர் பலி. கப்பல் அனர்த்தமொன்றில் மிக அதிக எண்ணிக்கையானோர் பலியான சம்பவம் இது.

1945:இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி, இந்து தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.

2003: அமெரிக்க விமானத்தை பாதணி குண்டு மூலம் தகர்க்க முயன்ற ரிச்சர்ட் ரீட்டுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
« Last Edit: January 30, 2012, 06:27:07 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #4 on: January 31, 2012, 04:56:00 AM »


1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.

1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.

1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.

1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.

1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.

1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.

1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.

1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.

1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline !~Bharathy~!

Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #5 on: January 31, 2012, 07:43:56 AM »
Shruthi ,
நன்றி பயனுள்ள உங்கள் தேடல் பதிவுகளுக்கு!!


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #6 on: February 01, 2012, 07:41:01 AM »

 

1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.

1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.

1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.

1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.

1924:  சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.

1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.

1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.

1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.

1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.



2003: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய கொலம்பிய விண்கலம் வெடித்துச்சிதறியதால் 7 விண்வெளி வீர வீராங்கனைகள் உயிரிழந்தனர்.

2009: ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமராக ஜோனா சிகுரோடோட்டிர் தெரிவானார். நவீன உலகில் ஓரின சேர்க்கையாளராக அறியப்பட்ட ஒருவர்  அரசாங்கமொன்றின் தலைவராக தெரிவாகியமை அதுவே முதல் தடவையாகும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #7 on: February 02, 2012, 04:46:42 AM »


1542: கிறிஸ்டாவோ கொட காமா (வாஸ் கொட காமாவின் மகன்) தலைமையிலான போர்த்துகேயர்கள் எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் வசமிருந்து மலைக்கோட்டையொன்றை கைப்பற்றினர்.

1848: மெக்ஸிகோ - அமெரிக்க யுத்தத்தில குவாடலுப் ஹைல்டில்கோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1848: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சீனக்குடியேற்றவாசிகளை ஏற்றிய முதலாவது கப்பல் சான்பிரான்ஸிஸ்கோ நகரை அடைந்தது.

1943: 91,000 ஜேர்மனிய நாஸிப் படைகள் சோவியத் படைகளிடம் சரணடைந்ததையடுத்த ரஷ்யாவின் லெனின் கிராட் யுத்தம் முடிவடைந்தது.

1966: காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.

1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.

1971: உகண்டாவில் ஜனாதிபதி மில்டன் ஒபேட்டுக்குப் பதிலாக இடி அமீன் நாட்டின் தலைவரானர்.

1972: அயர்லாந்தில் பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது.

1989: ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி  தொhகுதி சோவியத் படை வெளியேறியது.

1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.

1998: பிலிப்பைன்ஸில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 104 பேர் பலி.

2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள் இந்நிலையில் இருந்தார்.

2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.

2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.
« Last Edit: February 02, 2012, 04:52:16 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #8 on: February 03, 2012, 04:06:20 AM »


1690: அமெரிக்காவில் முதலாவது நாணயத்தாள், மசாசூசெட்ஸ் கொலனியினால் வெளியிடப்பட்டது.

1783: அமெரிக்காவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.

1917: ஜேர்மனியுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

1930: வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நியூஸிலாந்து ஹேவ்க் குடாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 258 பேர் பலி. இதுவே நியூஸிலாந்தின் மிக அதிக மரணங்களை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாகும்.

1966: சோவியத் யூனியனின் லூனா- 9 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.



1969: எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற பலஸ்தீன தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யஸீர் அரபாத் நியமிக்கப்பட்டார்.

1995: விண்வெளி வீராங்கனை எய்லீன் கொலின்ஸ் விண்வெளி ஓடத்தை ஓட்டிச் சென்ற முதலாவது பெண்ணானார்.

2007: பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 135 பேர் பலி, 339 பேர் காயம்.

2010: சுவிட்ஸர்லாந்து சிற்பி அல்பர்ட்டோ கியாகொமட்டி செதுக்கிய சிற்பம் 65 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #9 on: February 04, 2012, 07:15:17 AM »


1789: அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தேர்தல் கல்லூரியினால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

1794: பிரான்ஸில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.

1797: ஈக்குவடோர் பூகம்பத்தில் 40000 பேர் பாதிப்பு.

1899: பிலிப்பைன்ஸ் - அமெரிக்க யுத்தம் ஆரம்பம்.



1948: பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.

1966: ஜப்பானில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 133 பேர் பலி.

1976: கௌதமாலா பூகம்பத்தில் 22,000 பேர் பலி.

1997: இஸ்ரேலின் இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் வானில் மோதிக்கொண்டதால் 73 பேர் பலி.

1997: 1996 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் வெற்றியை ஏற்க மறுத்துவந்த சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக், எதிர்க்கட்சிகளின் வெற்றியை ஒப்புக்கொண்டார்.

1998: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 5000 பேர் பலி.

2003: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசின் பெயர் சேர்பியா-மொன்டேநீக்ரோ என உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.

2002: உலகின் மிகப்பெரிய சுயாதீன புற்றுநோய் ஆய்வு நலநிதியமான பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.

2004: உலகின் மிகப் பிரபலமான சமூகவலையமைப்பு இணையத்தளமான பேஸ்புக், மார்க் ஸுகர்பேர்க்கினால் ஆரம்பிக்கப்பட்டது.

2006: பிலிப்பைன்ஸ் அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெரிசலினால் 71 பேர் பலி.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #10 on: February 06, 2012, 09:53:17 PM »


1818: சுவீடன் - நோர்வே மன்னராக ஜீன் பப்டிஸ்ட் பேர்னாடோட் முடிசூட்டப்பட்டார்.

1852: உலகின் மிகப்பெரிய நூதனசாலைகளில் ஒன்றான ஹேர்மிடேஜ் நூதனசாலை ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது.

1882: பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட், கொங்கோவை உருவாக்கினார்.

1900: பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டனுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1909: பெல்ஜியத்தை சேர்ந்த லியோ பீக்லண்ட், பெகலைற் எனும் உலகின் முதலாவது செயற்கை பிளாஸ்ரிக்கை தயாரித்தார்.

1918: ஜேர்மன் விமானமொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது. அமெரிக்காவுக்கு கிடைத்த முதலாவது வான்வழி வெற்றி இது.

1971: அப்பலோ 14 விண்வெளி ஓடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கினர்.

1994: பொஸ்னியா,ஹேர்ஸகோவினா யுத்தத்தின்போது சரஜீவோ நகர சந்தையில் ஷெல் ஒன்று விழுந்ததால் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காயமடைந்தனர்.

2000: ரஷ்ய படைகளினால் செச்னிய பிராந்தியத்தில் சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1971: அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட், சந்திரனில் கோல்வ் விளையாடிய முதல் மனிதரானார்
« Last Edit: February 06, 2012, 10:11:43 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #11 on: February 06, 2012, 10:10:23 PM »


1819: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த சேர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ளஸ், சிங்கப்பூரை ஸ்தாபித்தார்.

1840: வெய்டாங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் நியூஸிலாந்து, பிரிட்டனின் குடியேற்ற நாடாக்கப்பட்டது.

1942: இரண்டாம் உலக யுத்தத்தில் தாய்லாந்து மீது பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.

1951: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ரயிலொன்று தடம் புரண்டதால் 85 பேர் பலி. 500 பேர் காயம்.

1952: பிரித்தானிய மன்னர் 6 ஆம் ஜோர்ஜ் காலமானதால் அவரின் மகள் இரண்டாம் எலிஸபெத் அரசியானார்.

1958: ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்ட வீரர்கள் அறுவர் உட்பட 21 பேர் பலியாகினர்.



1971: அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட், சந்திரனில் கோல்வ் விளையாடிய முதல் மனிதரானார்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #12 on: February 07, 2012, 04:25:16 PM »


1238: ரஷ்யாவின் விளாடிமிர் நகரை மொங்கோலியர்கள் தீக்கிரையாக்கினர்.

1863: நியூஸிலாந்து கரையோரத்தில் கப்பலொன்று மூழ்கியதால் 189 பேர் பலி.

1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிரான கடைசிக்கட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்க, ரஷ்ய, பிரித்தானிய தலைவர்கள் பால்டிக் கடல் பகுதியில் சந்தித்துப் பேசினர்.



1974: பிரிட்டனிடமிருந்து கிரனடா சுதந்திரம் பெற்றது.

1979: நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் புளுட்டோ கிரகம் வந்தமை முதல் தடவையாக கண்டறியப்பட்டது.

1986: ஹெய்ட்டியில் ஜனாதிபதி ஜீன் குளோட் நாட்டைவிட்டு வெளியேறியதால் 28வருடகால ஒரே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

1990: சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஏகபோக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க சம்மதித்தது.

1992: ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த மாஸ்ட்டிரிச் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1999: ஜோர்தான் மன்னர்  காலமானதால் அவரின் மகன் அப்துல்லா புதிய மன்னரானார்.

2009: அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீயினால் 173 பேர் பலி.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #13 on: February 08, 2012, 05:36:37 PM »


1879: கனடாவில் நடைபெற்ற மாநாடொன்றில், உலக நியம நேரத்தை பின்பற்றுவது குறித்து ஸ்டன்போர்ட் பிளெமிங் முதல் தடவையாக முன்மொழிந்தார்.

1922: அமெரிக்க ஜனாதிபதி வாரன் ஹார்டிங், வெள்ளை மாளிகையில் வானொலியை அறிமுகப்படுத்தினார்.

1942:சிங்கப்பூர் மீது ஜப்பான் படையெடுத்தது.

1963: கியூபாவுக்கு அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்தல், கியூபாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளல் சட்டவிரோதமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி அறிவித்தார்.

1974:  ஸ்கைலாப் விண்கலத்தில் 84 நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் பூமிக்குத் திரும்பினர்.

1981: கிறீஸில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது சன நெரிசலில் சிக்கி 21 பேர் பலி.



1983: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின்மீது 320 மீற்றர் உயரமான தூசுமண்டலம் பரவியதால் நகரம் பகலிலும் இருளானது.

1989: போர்த்துக்கல் கரையோரத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 144 பேர் பலி.

2010: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #14 on: February 09, 2012, 07:10:27 AM »


1825: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் கல்லூரி வாக்குகளில் பெரும்பான்மையைப் பெறாததால் செனட் சபை உறுப்பினர்கள் ஜோன் குயின்ஸி அடம்ஸை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

1849: புதிய ரோம குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1900: டேவிஸ் கிண்ண டென்னிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1942: இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்க யுத்த தந்திரோபாயம் குறித்து அமெரிக்காவின் முக்கிய படைத் தலைவர்கள் முதல் தடவையாக சந்தித்துப் பேசினர்.

1950: அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள ஊழியர்களில் சுமார் 200 பேர் கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதாக செனட் சபை உறுப்பினர் ஜோசப் மெக்கர்;தி கூறினார்.



1959: உலகின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 சேம்யோர்க்கா, ரஷ்யாவினால் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

1965: தென் வியட்நாமுக்கு தாக்குதல்படைகளை அமெரிக்கா அனுப்பியது.

1969: போயிங் 747 விமானம் சோதனையிடப்பட்டது.

1991: லித்துவேனியாவில் சுதந்திரத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்