Author Topic: இன்றைய தினத்தின் வரலாறு  (Read 17357 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #15 on: February 10, 2012, 06:57:35 PM »



1258: பாக்தாத் நகரம் மொங்கோலியர்களிடம் வீழ்ச்சியடைந்தது.

1763: பாரிஸ் உடன்படிக்கையின் மூலம், கனடாவின் கியூபெக் பிராந்தியத்தை இங்கிலாந்துக்கு பிரான்ஸ் விட்டுக்கொடுத்து.

1840: பிரிட்டனின் விக்டோரியா மகாhணியார் இளவரசர் அல்பர்ட்டை திருமணம் செய்தார்.

1846: இந்தியாவில் முதலாவது ஆங்கில சீக்கிய யுத்தம் நடைபெற்றது. ஆங்கிலேயேர் வெற்றி பெற்றனர்.

1870: நியூயோர்க்கில் வை.எம்.சி.ஏ. அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1952: இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

1962: சோவியத் யூனியனினால் கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவு விமான விமானியும்; அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட சோவியத் உளவாளி ருடோல்வ் ஆபெல்லும் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

1996:  கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புள10 கணினி முதல் தடவையாக செஸ் போட்டியில் தோற்கடித்தது.

 

 

2005: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் கமீலா பார்க்கரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிரித்தானிய அரசகுடும்பம் அறிவித்தது.

2009: ரஷ்யாவின் கொஸ்மோஸ் 2251 செய்மதியும் அமெரிக்காவின் இரிடியம் 33 செய்மதியும் விண்வெளியில் தற்செயலாக மோதி சிதறின.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #16 on: February 11, 2012, 07:51:05 PM »


1531: இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராக 8 ஆம் ஹென்றி மன்னன் அங்கீகரிக்கப்பட்டார்.

1752: அமெரிக்காவின் முதல் வைத்தியசாலையான பென்சில்வேனியா வைத்தியசாலை, பெஞ்சமின் பிராங்களினால் திறக்கப்பட்டது.

1971: சர்வதேச கடல்பரப்பில் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.

1979: ஈரானிய ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லூ கொமெய்னியின் ஆதரவாளர்களிடம் மன்னராட்சி வீழ்ச்சியடைந்தது.

1975: பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆந்நாட்டின் அரசியல் கட்சியொன்றின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவராவார்.

1990: 27 வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலையானார்.



1990: 20 வயதான மைக் டைசன், பிரபல குத்துச்சண்டை சம்பியன் ஜேம்ஸ் பஸ்டர் டக்ளஸை வீழ்த்தி இளம் உலக சம்பியனானனார். குத்துச்சண்டை வரலாற்றில் மாபெரும் ஆச்சரிய பெறுபேறாக இது கருதப்படுகிறது.

2011: சுமார் 30 வருடகாலம் எகிப்திய ஜனாதிபதியாக பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் ஆர்ப்பாட்டங்களையடுத்து ராஜினமா செய்தார்.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #17 on: February 12, 2012, 05:10:07 AM »


1554: இங்கிலாந்தில் 9 நாட்கள் அரசியாக பதவி வகித்த ஜேன் கிறே, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1593: 30 ஆயிரம் பேர்கொண்ட ஜப்பானிய படையெடுப்பை 3 ஆயிரம் பேர் கொண்ட தென்கொரிய படை முறியடித்தது.

1934: ஆஸ்திரிய சிவில் யுத்தம் ஆரம்பம்.

1961: சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்தை நோக்கி வெனேரா -1 விண்கலத்தை ஏவியது.

1999: அமெமரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான அமெரிக்க செனட் சபையின் குற்றவியல் விசாரணையில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

1999: மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று எச்சரிதத்து.

2001: விண்கல் ஒன்றின் மீது  முதல் தடவையாக விண்கலமொன்று இறக்கப்பட்து.



2002: யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக்கிற்கு எதிராக, நெதர்லாந்திலுள்ள ஐ.நா. போர்க்குற்ற விசாரணை மன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியது.
 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #18 on: February 14, 2012, 07:10:42 AM »

1668: போர்த்துக்கலை சுதந்திர நாடாக ஸ்பெய்ன் அங்கீகரித்தது.

1920: அமெரிக்க தேசிய நீக்ரோ லீக் ஸ்தாபிக்கப்பட்டது.

1931: கல்கத்தாவிற்குப் பதிலாக, புது டில்லி இந்தியாவின் தலைநகராகியது.



1991: ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்காவின் அதி நவீன குண்டொன்று வீழ்ந்ததில் சுமார் 400 பொதுமக்கள் பலியாகினர்.

2001: எல் சல்வடோரில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 400 பேர் பலி.

2008: அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரதமர் கெவின் ருட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  மன்னிப்பு கோரினார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #19 on: February 14, 2012, 07:11:57 AM »

1779: பிரித்தானியாவைச் சேர்ந்த நாடுகாண் கடலோடி ஜேம்ஸ் குக் ஹவாய் தீவில் பழங்குடி இன மக்களால் கொலை செய்யப்பட்டார்.

1849: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் நொக் போல் புகைப்படம் பிடிக்கப்பட்டார். பதவியிலிருக்கும் போது படம்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியொருவர் புகைப்படம் எடுக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

1876: தொலைபேசிக்கு காப்புரிமை பெறுவதற்கு அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் விண்ணப்பித்தார்.

1879: பொலிவிய துறைமுகத்தை சிலி படைகள் கைப்பற்றியதையடுத்து  'பசுபிக் யுத்தம்' ஆரம்பமாகியது.

1918: கிறகரியன் கலண்டரை சோவியத் யூனியன் பின்பற்றத் தொடங்கியது.

1919: போலந்து – சோவியத் யூனியன் யுத்தம் ஆரம்பம்.



1920: அமெரிக்க பெண் வாக்காளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1924: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1981: அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 48 பேர் பலி.

1989: இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும்  விதமாக சாத்தானின் வசனங்கள் எனும் நூலை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு  ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா கொமேய்னி மரணதண்டனை விதிக்குமாறு கோரும் 'பத்வாவை' வெளியிட்டார்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #20 on: February 15, 2012, 06:40:45 PM »


1898: கியூபாவின்  ஹவானா துறைமுகத்தில் அமெரிக்க கப்பலொன்று வெடித்து மூழ்கியதில் சுமார் 260 பேர் பலியாகினர். இச்சம்பவம் ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்வதற்கு வழிவகுத்தது.

1906: பிரித்தானிய தொழிற்கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1909: மெக்ஸிகோவிலுள்ள திரையரங்கொன்று தீப்பற்றியதால் சுமார் 250 பேர் பலி.

1933: அமெரிக்க ஜனாதிபதி பிராங்;ளின் டி ரூஸ்வெல்ட்டை கொல்வதற்கு துப்பாக்கிதாரியொருவன் முயன்றான். ஆனால் ரூஸ்வெல்டுக்குப் பதிலாக சிகாகோ மேயர் அன்டன் ஜே. சேர்மாக் இச்சம்பவத்தில் காயமடைந்து மார்ச் 6 ஆம் திகதி உயிரிழந்தார்.



1942: ஜப்பானியர்களின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்த பிரித்தானிய தளபதி ஜெனரல் ஆர்தர் பேர்சிவல் சரணடைந்தார். சுமார் 80,000 இந்திய, பிரித்தானிய, அவுஸ்திரேலிய படையினர் யுத்தக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

1950: சோவியத் யூனியன், சீனாவுக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1961: பெல்ஜியத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அமெரிக்க பிகர் ஸ்கேட்டிங் அணியினர் உட்பட 73 பேர் பலி.

1970: டொமினிக்கன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில் 102 பேர் பலி.

1982: கனடாவில் எண்ணெய் அகழ்வுத்தளமொன்று கடலில் மூழ்கியதால் 84 ஊழியர்கள் பலி.

1989: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் படையினர் அனைவரும் வெளியேறிவிட்டதாக சோவியத் யூனியன் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

2003: ஈராக் யுத்தத்திற்கு எதிராக சுமார் 600 நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 80 லட்சம் முதல் 3 கோடி பேர்வரை இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இது விளங்குகிறது.

2005: வீடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, மற்றவர்களின் வீடியோக்களையும் பார்க்க வாய்ப்பளிக்கும் யூ ரியூப் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #21 on: February 16, 2012, 07:28:17 AM »



1899: அயர்லாந்தின் முதாவது கால்பந்தாட்டக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1959: பிடெல் காஸ்ட்ரோ தனது 32 ஆவது வயதில் கியூபாவின் பிரதமராக பதவியேற்றார்.



1962: மேற்கு ஜேர்மனியில் வெள்ளத்தினால் 315 பேர் பலியானதுடன் 60,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1968: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 9-1-1 எனும் அவசர தொலைபேசி சேவை அமுலுக்கு வந்தது.

1993 உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி இஸ்Nஆலாம் கரிமோவை கொலை செய்வதற்காக அரசாங்கத் தலைமையகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.

2005: சூழல் பாதுகாப்பு தொடர்பான கியோட்டோ பிரகடனம் அமுலுக்கு வந்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #22 on: February 17, 2012, 07:44:32 AM »


1864: அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது எச்.எல். ஹன்லி எனும் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க யுத்த கப்பலொன்றை மூழ்கடிப்பதில் பங்குபற்றியது. யுத்த கப்பலொன்றை மூழ்கடித்ததில் சம்பந்தப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.

1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.

1979: வியட்நாம் மீது சீனா படையெடுத்தது.

1987: பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கை தமிழ் இளைஞர்கள் 12 பேர்  ஹீத்ரோ விமான நிலையத்தில் ஆடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1996: அமெரிக்காவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 'டீப் புளூ' எனும் சுப்பர் கம்ப்யூட்டரை ரஷ்ய வீரர் கெரி கஸ்பரோவ் தோற்கடித்தார்.

2006: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மண்சரிவில் 1126 பேர் பலி.

2008: சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதாக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.



2011: லிபியாவில் கேணல் கடாபியின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம். லிபிய படைகள் மனாமா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகாலை வேளையில் பாரிய முற்றுகையொன்றை நடத்தியது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #23 on: February 18, 2012, 09:17:07 AM »

1925;: அடோல்வ் ஹிட்லர் மேயின் காம்ப் (எனது போராட்டம்) எனும் தனது நூலை வெளியிட்டார்.

1955: முதலாவது டிஸ்னிலான்ட் களியாட்ட பூங்கா கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.

1976: நாடியா கொமன்ஸி, கோடைக்கால ஒலிம்பிக்; ஜிம்னாஸ்டிக் போட்டியில்  10 புள்ளிகளைப் பெற்ற முதல் வீராங்கனையானார்.

1994: ஆர்ஜென்டீனாவிலுள்ள யூத சங்கமொன்றின் கட்டிடத்தில் நடந்த கொண்டுவெடிப்பில் 85 பேர் பலியாகினர்.

1996: முல்லைத்தீவு இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2001: இந்தோனேஷியாவின் சாம்பிட் பகுதியில் பாரிய இனவன்முறைகள் மூண்டன.

2003: தென்கொரியாவின் டேகு ரயில்வே தீ விபத்தில் 200 இற்கும் அதிகமானோர் பலி.



2004: ஈரானில் கந்தகம், பெற்றோல், உரம் ஆகியனவற்றை ஏற்றிச்சென்ற ரயில் தீப்பற்றி வெடித்ததால் 295 பேர் பலி.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #24 on: February 19, 2012, 05:14:30 AM »


1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான  அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.


1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.

1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.

1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.

1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.

1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.

1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #25 on: February 20, 2012, 06:25:05 AM »


1547: 6 ஆம் எட்வர்ட், இங்கிலாந்தின் மன்னரானார்.

1933: 1920 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டம் நீக்கப்பட்டது.

1935: கரோலின் மிக்கெல்சன் எனும் பெண், அந்தார்ட்டிக்காவில் காலடி வைத்த முதல் பெண்ணானார்.

2005: ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை அங்கீகரித்த முதல் நாடாகியது ஸ்பெய்ன்.

2009: கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இலங்கை விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.



2010: போர்த்துக்கலில் வெள்ளத்ததால் 43 பேர் கொல்லப்பட்டனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #26 on: February 21, 2012, 11:21:54 PM »


1848: கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் 'கம்யூனிஸ விஞ்ஞாபனம்' எனும் நூலை வெளியிட்டனர்.



1878: உலகின் முதல் தெலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வெளியிடப்பட்டது. 50 சந்தாதாரர்களின் விபரங்கள் அதில் அடங்கியிருந்தன.

1947: உடனடியாக புகைப் படங்களை வழங்கும் முதல் கமெராவை (இன்ஸ்டன்ட் கமெரா) நியூயோர்க்கில் எட்வின் லான்ட் என்பவர் செயற்படுத்திக்காட்டினார்.

1952: பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான அரசாங்கம் அடையாள அட்டை சட்டத்தை நீக்கியது.

1952: கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) வங்காள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் இத்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

1953: பிரான்ஸிஸ் கிறிக், ஜேம்ஸ் டி வட்ஸன் ஆகியோர் டி.என்.ஏ. மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தனர்.

1958: ஜெரால்ட் ஹோல்டம் என்பவரால் சமாதான சின்னம் உருவாக்கப்பட்டு, அணுவாயுத ஒழிப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

1970: சுவிஸ் எயார் விமானம் சுவிட்ஸர்லாந்தில் விபத்துக்குள்ளானதால் 38 பேர் பலி.

1970: அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டார்.

1973: லிபிய பயணிகள் விமானமொன்றை  சினாய் பாலைவனத்திற்கு மேலாக இஸ்ரேலிய போர் விமானமொன்று சுட்டுவீழ்த்தியதால் 108 பேர் பலி.

2004: ஐரோப்பாவின் முதலாவது அரசியல் கட்சியான ஐரோப்பிய பச்சை கட்சி ரோம் நகரில் உருவாக்கப்பட்டது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #27 on: February 22, 2012, 07:41:15 AM »

1819: புளோரிடா பிராந்தியத்தை 50 லட்சம் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஸ்பெய்ன் விற்பனை செய்தது.

1882:  சேர்பிய  இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது.

1924: அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ், வெள்ளை மாளிகையிலிருந்து வானொலியில் உரை நிகழ்த்திய முதலாவது   அமெரிக்க ஜனாதிபதியானார்.

1948: செக்கஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ புரட்சி ஏற்பட்டது.

1958: எகிப்து, சிரியா ஆகியன ஐக்கிய அரசு குடியரசில் இணைந்தன.

1974: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு மாநாட்டு அமைப்புக் கூட்டத்தில் 37 நாடுகள் பங்குபற்றின. பங்களாதேஷை அவ்வமைப்பு அங்கீகரித்தது.

1974: அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஷனை சாமுவேல் பைக் என்பவர் கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றது.

1979; பிரிட்டனிடமிருந்து சென் லூசியா சுதந்திரம் பெற்றது.



1997: டோலி எனும் ஆடு குளோனிங் முறையில் பிரதியாகக்கம் செய்யப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டது.

2011: நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 183 பேர் பலி


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #28 on: February 23, 2012, 10:34:25 PM »


1861: அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆப்ரஹாம்; லிங்கன் மேரிலாண்டில் கொலைமுயற்சியொன்றிலிருந்து தப்பியபின் இரகசியமாக வாசிங்டன் நகருக்கு வந்து சேர்ந்தார்.

1887: பிரான்ஸில் ஏற்பட்ட பூகம்பமொன்றினால் சுமார் 2000 பேர் பலியாகினர்

1903: குவாண்டனாமோ குடாவை அமெரிக்காவுக்கு கியூபா குத்தகைக்கு வழங்கியது.

1941: கலாநிதி கிளென் ரி. சீபோர்க் என்பவரால் முதல்தடவையாக புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது.

1945: ஜேர்மனியின் ப்போர்ஹெய்ம் நகரம் 379 பிரித்தானிய விமானங்களால் குண்டுவீசி அழிக்கப்பட்டது.



1991:  வளைகுடாவில் ஈராக்கிற்கு எதிரான நேசநாடுகளின் தரையுத்தம் ஆரம்பமாகியது.

1997: ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்றைய தினத்தின் வரலாறு
« Reply #29 on: February 27, 2012, 05:45:44 PM »


1582: பாப்பரசர் 13 ஆம் கிறகரி கிறகரியன் கலண்டரை அறிமுகப்படுத்தினார்.

1917: அமெரிக்கா மீது மெக்ஸிகோ போர் தொடுத்தால் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ, டெக்ஸாஸ், அரிஸோனா மாநிலங்களை மெக்ஸிகோவுக்கு பெற்றுக்கொடுப்பதாக மெக்ஸிகோவுக்கு ஜேர்மனி அனுப்பிய இரகசிய தந்தி அமெரிக்கத் தூதுவரிடம் பிரிட்டனினால் கையளிக்கப்பட்டது.

1918: எஸ்டோனியா சுதந்திரம் பெற்றது.

1920: ஜேர்மனியில் நாஸி கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1945: எகிப்திய பிரதமர் அஹ்மட் மஹெர் பாஷா கொலை செய்யப்பட்டார்.

 1981: பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் டயானாவும் திருமணம் செய்யவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

1981: ஏதென்ஸில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல நகரங்கள் சேதம், 16 பேர் பலி.

1999: சீனாவின் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 61 பேர் பலி.

2007: உளவு செய்மதியொன்றை ஜப்பான் ஏவியது.



2008: கியூபாவில் சுமார் 50 வருடகாலமாக ஆட்சியிலிருந்த பிடெல் காஸ்ட்ரோவில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.


2010: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது இரட்டைச் சதம் குவித்த வீரர் எனும் பெருமையை இந்தியாவின் சச்சின் டெண்டுகல்கர் பெற்றார். இந்தியாவின் குவாலியர் நகரில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றார்.  இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2962  ஆவது  போட்டியாகும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்