ஒத்த பார்வையில்
ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ
படம் போட்டுக்காட்டுற
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே
இடுப்போரம் மாட்டுற
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற
முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்
படம் போட்டுக்காட்டுற
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே
இடுப்போரம் மாட்டுற……
ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க
காத்தே பாவம் கூட கண்ணில் பார்க்காம
காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம
ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற (ஒத்த)
ஆசையில்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…
என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே
அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல