[இன்றைய ராசி பலன்
நாள்:
Tuesday, 14 August, 2012
மேஷம்:
கடன் பிரச்னைகள் இருந்தாலும்கூட அவை அனஐத்தும் உங்களை பாதிக்காத வகையில் சமாளிக்க முடியும். இதுவரை இருந்துவந்த சண்டை சச்சரவுகள், வில்லங்க விரையங்கள்யாவும் தீரும்.
ரிஷபம்:
சிலருக்கு ஆடை-ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிலர் தங்களது அடிமைத்தொழிலை விட்டுவிட்டு சுயமாகத் தொழில்செய்ய முன்வருவார்கள். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கவே செய்யும்.
மிதுனம்:
சிலருக்குச் சில பழைய கடன்கள் அடைபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலர் கோவில், குளம் என்று புனிதப்பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் வாரம் முழுவதும் பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம்.
கடகம்:
இன்று சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம் மேன்மை அடையும். உங்களது செயல்திறன் கூடும். புகழும் கீர்த்தியும் மேலோங்கும்.
சிம்மம்:
சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் தனலாபமும், சிலருக்குக் கெளரவப் பதவிப்பட்டங்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மூத்த சகோதரர் மேன்மை அடைவார். அவரால் சில நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
சிலருக்குக் கண் சம்பந்தமான பாதிப்புகளும், பித்த சம்பந்தமான உடல்நலக்குறைவுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு செய்தொழில்-வியாபாரத்தில் போலீஸ், கோர்ட்-கேஸ் என வம்பு வழக்குகள் ஏற்பட்டு அவமானப்பட நேரிடும்.
துலாம்:
கணவன்-மனைவியரிடையே சண்டை-சச்சரவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். மநதில் பயமும், சஞ்சலம் இருந்துகொண்டேயிருக்கும்.
விருச்சிகம்:
இனம் புரியாத துக்கமும், வேதனையும், பயமும் மனதில் இருந்துகொண்டேயிருக்கும். புத்திர, புத்திரிகள் சம்பந்தமான கவலைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகமாவதற்கான சூழ்நிலைகளும் உண்டு.
தனுசு:
பூர்வீகச் சொத்தில் வில்ல்கங்களும், சண்டை-சச்சரவுகளும் ஏற்படுவதால், குல தெய்வ வழிபாடுகளில் பிரச்னைகள் ஏற்படும். என்றாலும் எந்தக் கஷ்டங்களையும், பிரச்னைகளையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனவலிமை அதிகரிக்கும்.
மகரம்:
உங்களது புகழ், செல்வாக்கு மேலோங்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆயினும் கூட வீண் செலவுகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த முடியமல் போகலாம்.
கும்பம்:
இளைய சகோதரர் மேன்மை அடைவார். அந்த இளைய சகோதரரால் சில நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளுண்டு. சிலரது குடும்பங்களில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புகளுண்டு. புத்திர, புத்திரிகள் கல்வியில் மேன்மை அடைவார்கள்.
மீனம்:
புத்திர, புத்திரர்களில் யாருக்காவது திருமணம் போன்ற சுப காரியங்களில் தடைகளோ, தாமதங்களோ ஏற்பட்டு வருமாயின் அந்தத் தடைகள் நீங்கி, சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.