அம்மாவுக்காக முழுவதுமாக எழுதி பாடி இருக்கேன். கேட்டுட்டு கருத்துக்களை பதிவு செய்யவும் நன்றி..
பல்லவிஅன்பை கொட்டி எந்நாளும்
என்னை தாங்கும் என் தாயே
உன்னை போல வேறாரு மண் மேலே
கண்ணை போல எனை காக்கும்
எந்தன் தாயும் உன்னாலே
எந்தன் ஜீவன் உயிர் வாழும் அன்பாலே
உன் கருவில் என்னை வைத்து உயிர் தாங்கி நீயும் நின்றாய்
என் உயிரின் உருவம் தந்து எனக்காக உன்னை தந்தாய்..
சரணம் 1பூ உலகில் நீயும் ஒரு பூ போலே பெண்மை கொண்டு
என் உயிரை கொடுக்க பல வலிகள் கண்டாய்..
என் முகத்தை கண்டு உன் சோகங்கள் எல்லாம் மூடி எனக்காக தாயே சந்தோசம் கொண்டாய்
உன் உயிரை நீ வருத்தி என் உயிரை தந்தாயே
உன் உதிரம் அதை தானே பாலாக தந்தாயே
என் தாயே ...
சரணம் 2கதை சொல்லி நாளும் என்னோட பக்கம் வந்து
கண் மூடி தூங்க என் இமையாய் நின்றாய்
நான் பசியில் அழுதால் உன் கண்கள் கண்ணீர் சிந்தும்
என் பசியும் தீர்ந்தால் சந்தோசம் கொள்வாய்
ஈ எறும்பு தீண்டாமல் என் தேகம் காத்தாயே
என் உயிரில் உன் உயிரை தினம் நீயே பார்த்தாயே
என் தாயே...
பாடலை முழுவதுமாக கேட்டு கருத்துக்களை பதிவு செய்யவும்.
இந்த பாடலை ஆடியோ வடிவில் கேட்க
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்
