Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 328  (Read 1504 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 328

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI




ஆண்டவன் படைப்பில் அற்புதமானது இயற்கை
ஆண்டி முதல் அரசன் வரை
அனைவரையும் ரசிக்க வைப்பது இயற்கை
ஆளில்லா அரசாட்சி..அழகு ததும்பும் மலையரசி


சில்லென்ற காற்றின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைக்கும் மழைத்தூறல்
தாயைக்கண்ட பிள்ளையாய்
தாவி ஓடும் அருவி...


என்றுமே இணையாத தண்டவாளம்.. அதுவே
பல இடங்களை இணைக்கும் பாலம்...
தனக்கே உரிதான ஒலியுடன் சீரிப்பாயும் புகைவண்டி...
கனவுகளைச்சுமக்கும் மக்கள் பலரை பத்திரமாய் சுமக்கும் இவ்வண்டி...

கடமைக்காய் சிலர்
காதலுக்காய் சிலர்
பிழைப்புக்காய் சிலர்
பிற ஊர்களை சுற்றவும் சிலர்..

மொழிபேதம் ஏதுமின்றி
சாதி சமயம் ஏதுமின்றி
உயர்வு தாழ்வு ஏதுமின்றி
சரி சமமாய் அனைவரும்
ஒய்யாரமாய் செல்லும் வண்டி..

ஜன்னலோர இருக்கை பிடித்து
அழகான இயற்கையை ரசித்து
மனதிற்கு பிடித்த பாடல் இசைத்து
கனவுலகினில் சிறகடித்து பறந்து..

இருக்கும் இடம் மறந்து
தன்னைத்தானே கூட மறந்து
கவலைகள் எல்லாமும் மறந்து
மனது லகுவாய் ஒரு பயணம்

வண்டியின் அசைவில் தொட்டிலின் இதம் கண்டேன்
இயற்கையின் அழகினில் இன்பமும் தான் கொண்டேன்..
எத்துனை காலம் ஆனாலும் கூட
என் மனதை விட்டு நீங்காது இப்பயணம்.....









« Last Edit: November 06, 2023, 09:42:29 AM by VenMaThI »

Offline Sagi2023

எரிச்சலூட்டும் இரைச்சலும் இன்னிசையாக..
     தொடர் சத்தங்களுக்குகிடையில்..
தொடறதா நம் பயணம் என அவன்..?.

ஏறாள இதயங்களுக்கு இடையில்...
      அவன் கண்ணில் தென்பட்டேன்..
                     நான் மட்டும்..!!

மௌன மொழி பேசும் அவன் விரல்கள்...
ஓரவிழி பார்வைக்கு சொந்தக்காரன்..
ஓரிரு வார்த்தைகள் தானே வீசுவான்..
பெண்ணியம் பேசும் அவன் கண்ணிய குரல்...
திகட்டாத பெண்மைக்கும் ,,,
           திகைப்பூட்டும் அவன் நகைப்பு..
புரியாத புதிரான தேடல் ஒன்று ...
        அவனுக்கு என்னிடத்தில்..!!!
விடையளிக்க விண்ணப்பித்திருக்கிறான்..
         விருப்பங்களோடு...


விடுமுறைக்கு விலக்கு கொடுத்து
         விடைகொடுக்கிறேன் இதோ ...
முற்று புள்ளி ஆக்கி விடாதே..
முற்றுபெறாதது நம் நட்பாகட்டும் ....!!!

அன்பு சிநேகிதி
    சகி தயாநீ ...
« Last Edit: November 05, 2023, 10:31:19 PM by Sagi2023 »
சிநேகிதி   
        சகி தயாநீ

Offline Mr.BeaN

சில்லென காற்றும் வீச
சிறகின்றி ரயிலில் பறந்தேன்

நில்லென சொல்லும் படியாய்
ஒரிடம் நானும் கண்டேன்!!


கொள்ளையோர் அழகை கண்டே
கண்களும் மூடவில்லை

கூடவே கேட்கும் ஒலியோ
காதினில் தேனாய் வருமே

வெள்ளையாய் பாலும் தோற்க
அருவியில் நீரும் கொட்ட

சொல்லிட வார்த்தை இல்லை
சொர்க்கத்தின் வாசல் அதுவே

பாலத்தில் ரயிலும் போக
பணிந்தது நீரும் அடியில்

காட்சிகள் காணும் போதே
கவர்ந்திடும் அழகை பாரீர்

கண்களில் காணும் பொழுதோ
மின்னலும் நெஞ்சில் தோன்றும்

கண்டதை கவிதையாக்க
என் காலமும் போதாதென்பேன்
..


இயற்கை காதலன்  திருவாளர் பீன்

« Last Edit: November 06, 2023, 06:39:54 AM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Minaaz

களவாடிய பொழுதுகளும், கனமாகிய நினைவுகளும்...

பாய்ந்தாடும் அருவிக்குள் தொடரும் இரயில் பாலம்போல் நனைந்து தொடர்கின்றன உன்னுடனான நினைவுகள் ....

உன்னுடன் ஆன பயணங்களில் முடியா தொடர் பயணமாக இருக்க வேண்டும் என குதூகளித்த மனது...
தொலை தூரம் சென்று தொலைந்து விட ஊக்கியாய் இன்று...

ஜன்னலோரம் சீறிட்ட காற்றின் இரைச்சலில் இரசித்திருந்த உன் வதனம்,
இரைச்சலை கூட இன்னிசை ஆக்கிற்று...

பயணத்தில் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நினைவை சுமக்கையில் என் நெஞ்சில் உன் நினைவே சுமையாக...

இன்னும் காலம் முடியவில்லை...
நான் உன்மேல் கொண்ட காதலும் ஓயவில்லை..
இன்னும் உன்னோடு ஒன்றாகும் அவா துளியும் குறையவில்லை
உன்னோடு பயணித்த சுவடுகளும் மறையவும் இல்லை..


காலம் முழுதும் பயணிக்க எண்ணி உன்னோடு நான் கண்ட கனவு காட்சிகள் வெரும் கனவாகவே போய் விடுமா??? காலம் கை கூடுமா?? நம் கைகளை கூட்டுமா???

இன்றும் உனக்காக உன் நினைவில் நான்.. அதே ஜன்னலோரம் உரசாமல் நம் கைகள் உரசிடும் தருணத்தில் காத்திருப்பில்...

ஆமாம் காத்திருக்கிறாள் இறந்தும் இன்னும் இனிய ரணங்களுடன் நடைப்பினமாக ஒருத்தி..
 காத்திருப்பு வெற்றி வாகை சூட..
« Last Edit: November 06, 2023, 07:50:39 AM by Minaaz »

Offline Mani KL

பல உயிரினங்களுக்கு பசி ஆற்றி
பல காடு மேடுகளை கடந்து
பார்ப்பவர்களை ரசிக்க வைத்து
பயணங்கள் தொடர்வது
கடலை நோக்கி

எதையும் கண்டு அஞ்சாமல்
இலக்கை நோக்கி விரைவாக
செல்லும் பயணத்திற்கு
படைத்தவன் தந்த பெயர் இயற்கை

பல உயிரினங்களை கடந்து
 கடந்து பல இன்னல்களை கடந்து
 பயணத்தை தொடர்வது
எதை நோக்கி

பார்ப்பதை கண்டு பயந்து
எதிர் பார்பில்லாமல்
தாமதமாக செல்லும் பயணத்திற்கு
படைத்தவன் தந்த பெயர் செயற்கை

உன் பயணத்தின் முடிவு
கடலை நோக்கி
முடிவதில்லை தொடரும்
என் சகாப்தம்
என்ற நினைவு களோடு
பயணம்
தொடர்கிறது

என் பயணத்தின் முடிவு
எதை நோக்கி
என்று தெரியவில்லை
முடிந்து போகுமோ தொடருமோ
என் சகாப்தம்
என்ற நினைவுகளோடு
பயணம்
தொடர்கிறது


« Last Edit: November 06, 2023, 06:08:50 PM by Mani KL »

Offline Vijis

இயற்கை அன்னையே நீ இந்த பூமியில் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு எனது இந்த பயணத்தில் என் அன்னயை பார்த்துபோல் உணர்தேன் இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்க்கும் சுவாசத்தை கொடுத்தாய் உன் பாசத்தை உணவாக தந்தாய் உன் அழகை வருணிக்க ஓராயிரம் வார்த்தைகள் போதாது உன் மேல் இருந்து விழும் நீர் வீழ்ச்சி எல்லா உயிர் களுக்கும் தாகத்தை தீர்க்கிறது அதனுடைய ஓசை அங்கே உள்ள உயிர்களுக்கு இன்னிசையாக தெரிந்தது உன்னை பார்த்ததில் என் துன்பங்கள் எல்லா வற்றையும் மரந்தேன் உலகில் ரசிக்க நூற்று கணக்கான விஷயங்கள் இருந்தாலும் அதிகமாக ரசித்தது உன்னை தான் இந்த அன்னையால் தான் அதிகமான உயிர்கள் வாழ்கின்றன இந்த இயற்க்கை அன்னையை அளித்துவிடாமல் காப்போம் நன்றி .

Offline TiNu



இரயில் பயணத்தில்...  ஓர் நாள்.. 
==============================

எத்தனையோ பகல்.. உன் அருகில்   
எத்தனையோ இரவு உன் அன்பில் 
எத்தனையோ கனவுகள்.. உன் மடியில்
எத்தனையோ கற்பனைகள்.. உன் தாலாட்டில்
உன்னிடமே கழித்தேன்.. பல நாட்கள்...

என் சில மன குமுறல்கள்.. உன் தோள்களில்.
என் சில மன ஏமாற்றங்கள்.. உன் செவிகளில் ..
என் சில மன ஏக்கங்கள்.. உன் விழிகளில்..
என் சில கண்ணீர் துளிகள்.. உன் கைகளில்..
உன்னிடமே பகிர்ந்தேன்..  பல முறைகள்..

பலவித முகங்களை அறிமுகம் செய்தாய்..  .
பலவித மொழிகளை பேசி பழக செய்தாய்.         
பலவித உறவுகளை  உறவாட செய்தாய்..         
பலவித உணர்வுகளை உணர செய்தாய்..         
உன்னிடமே அறிந்தேன்..  பல ஆண்டுகள்.

என் வாழ்வின் பல அனுபவங்கள்  உன் மூலமே..
என் வாழ்வின் பல திருப்பங்கள் உன் மூலமே..
என் வாழ்வின் பல சந்தோசங்கள்  உன் மூலமே..
என் வாழ்வின் பல சாதனைகள் உன் மூலமே..
உன்னிடமே உணர்தேன்..  பல நிமிடங்கள்..

நீயே! பல நாட்கள் எனை சுமந்த தாயும் ஆவாய்...
நீயே! பல நாட்கள் எனை அரவணைத்த தந்தையும் ஆவாய்..
நீயே! பல நாட்கள் எனை உலகுக்கு காட்டிய  ஆசானும் ஆவாய்...   
நீயே! பல நாட்கள் எனை காத்தநின்ற கடவுளும் ஆவாய்...   
உன்னிடமே சரண் அடைகின்றேன்..  நான் நானாக வாழ..

நமக்கான, இந்த நெருக்கம்.. முற்றுப்புள்ளி தொடுமா? இல்லை...
உன் மேனி போல.. அடுத்து அடுத்து.. அடுக்காய் தொடருமா?..... 


« Last Edit: November 06, 2023, 10:46:59 PM by TiNu »

Offline Sun FloweR

மலைத் தாயின் வைர அட்டிகை...
குன்றத்தின் குமிண் சிரிப்பு..
பருவதத்தின் பால் ஊற்று ...
முகடுகளின் பனித்த சடை...
நீர்வீழ்ச்சி என்றும் பெயருண்டு...
அருவி என்றும் நாமம் உண்டு..

சில்லென்ற இவள் மடியில் தவழ்ந்தால் குளிரூட்டுபவள் ..
தண்ணென்ற இவள் கரங்களில் சிக்கினால் சிலிர்ப்பூட்டுபவள்..

கொடிகளை குளுமையாக்குபவள்...
செடிகளை செழிப்பாக்குபவள்..
மரங்களை வளமாக்குபவள்...
குளங்களை நிறைவாக்குபவள் ..

மலை மேலிருந்து தற்கொலை செய்து நம்மை உயிர் வாழ வைப்பவள் ..
ஹோ என்ற சத்தத்தில் மனம் மகிழ வைப்பவள் ..
இயற்கை இளவரசி உலகிற்கு தந்த வரப்பிரசாதம் இவள்...
வானமகள் மையலுற்று
பூமிக்கு தந்த கொடை இவள்...

பெரும் பாறைகள் இவள் முகத்தில் பவுடராகின்றன..
பச்சை மரங்கள் இவள் உதட்டில் சாயம் ஆகின்றன..

பஞ்ச பூதங்களில் முழுமையானவள்...
முக்கியமானவள்.
முதன்மையானவள்..

ரயில் பயணத்தில் ரசிக்க வைக்கும் தோழி அவள் ..
அணைகள் நூறு கட்டினாலும்
அடக்கிட முடியாத பெண்மை அவள் ..

அருவியாய் வாழ ஆசைப்படுகிறது மனம்..
அவசரமாய் ரசித்து விட்டு கடந்து போகிறது நிஜம்..